1 | ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது. |
2 | பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, “ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள்“எனக் கேட்டனர். |
3 | அவர்கள் கூறியது: “நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது: குற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். அப்போது நீங்கள் குணமாக்கப் படுவீர்கள். அவரது கை உங்களைவிட்டு விலகாதிருறந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள். “ |
4 | அதற்கு அவர்கள், நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டய குற்ற நீக்க பலி யாது? “ என்று கேட்க, அவர்கள் கூறியது: “பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஐந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில் உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது. |
5 | ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்கிளடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் நாட்டினின்றும் அவரது கை விலக்கும். |
6 | எகிப்தியரும் பார்வோனும் தங்கள் அதயங்களைக் கடிகப்படுத்தியது போல நீங்க்ள ஏன் உங்கள் இதயங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்? அவர்ளைத் துன்புறுத் அவர்களுத் இஸ்லயேலரைச் சொல்லுமாறு விட்டுவிட்னரே? |
7 | இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள். இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பகக்ளை”“ பிடித்து அவற்றை வண்டியில் பூட்டுங்கள். அவற்றின் கன்றுக்குட்டிகளை விலகிக்விட்டுச் செல்லுங்கள். |
8 | ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்கப்பலிhக நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்: அது தானே செல்லட்டும். |
9 | பின் கவனியுங்கள்: அது தன் நாட்டு எல்லைக்குச் செல்லும் வழியாக பெத்சமேசுக்குச் சென்றால், இப்பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என்று அறியலாம். இல்லையேல், அவரது கை நம்மைத் தொடவில்லை, மாறாக அது நமக்குச் தற்செயலாக நாம் அறியலாம். “ |
10 | அவர்களும் அவ்வாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர். |
11 | ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெகளும், மூலக்கட்டிகளின் உருவங்களுத் வைத்திரு”நத பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர். |
12 | பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலிமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர். |
13 | அப்போது பெத்சமேசு வாழ் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை உயர்த்திய போது பேழையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். |
14 | பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரத்தை பிழந்து பசுக்களை ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினர். |
15 | லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர். |
16 | பெலிஸ்தியரின் ஐந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோனு”ககுத் திருத்பினர். |
17 | பெலிஸ்தியர் குற்ற நீக்க பலியாக ஆண்டவருக்குச் செலுத்திய மூலக் கட்டிகளின் பொன் உருவங்கள் இவையே: அஸ்தோதுக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்லோனுக்கு ஒன்று, மாதத்திற்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று. |
18 | பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஐந்து தலைவர்களு”ககுச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழையை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது. |
19 | பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுபடுத்தியதற்காக மக்கள் புலமபினார்கள். |
20 | பெத்சமேசு வாழ் மக்கள் இநதத் தூய கடவுளாகிய அண்டவர் திருமுன் நிற்கத் தகுந்தவன் யார்? நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார்? என்றுக் கேட்டுக் கொண்டனர். |
21 | ஆகவே, கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு ஆள்களை அனுப்பி, ஆண்டவரின் பேழையைப் பெலிஸ்தியர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் “என்று சொன்னார்கள். |