1 | மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாவை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு: சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாவைத் தாக்கி தீக்கிரையாக்கினார். |
2 | அங்கிருந்த பெண்கள் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர். |
3 | தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் அறிந்தார். |
4 | அப்பொழுது தாவீது அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர். |
5 | தாவீதின் இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம் பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைக்கப்பட்டிருந்தனர். |
6 | தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்: வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால் தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமைப் பெற்றிருந்தார். |
7 | பின்பு தாவீது, அகிமலக்கின் மகன் அபயத்தாரிடம்ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்! என்று கூறவே அபியத்தார்ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார். |
8 | அப்பொழுது தாவீது, “நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின் தொடரட்டுமா? நான் வெற்றி கொள்வேனா? என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர் பின்தொடர்! நீ வெற்றியடைவது உறுதி! என்று பதிலளித்தார். |
9 | ஆதலால் தாவீது அவருடன் இருந்த அறுநூறு பேரும் புறப்பட்டு, பெசோர் என்ற ஓடைக்கு வந்தார். களைப்படைந்தோர் அங்கேயே தங்கிவிட்டனர். |
10 | எனவே தாவீது அவர்களை நானூறு பேரோடு அவர்களை பின்தொடர்ந்தார்: களைப்படைந்த இருநூறு பேர் பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டார். |
11 | வயல் nவிளயில் ஓர் எகிப்தியனை கண்டு, அவனைத் தாவீதிடம் அழைத்து வந்தனர்: உண்பதற்கு அப்பமும் குடிப்பதற்கும் தண்ணீரும் கொடுத்தார். |
12 | மேலும் அவர்கள் அத்திப்பழ அடையின் ஒருத் துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்கு கொடுத்தார். அவன் இதை சாப்பிட்டப்பின் புத்துயிர் பெற்றான். ஏனெனில் அவன் இரவு பகல் மூன்று நேரமும் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான். |
13 | தாவீது அவனை நோக்கி, “நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஒர் எகிப்திய இளைஞன்: ஓர் அமலேக்கிய மனிதன் பணியாள்: நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு என் தலைவர் என்னை விட்டுச் சென்றார். |
14 | நாங்கள் கிரேத்தியரின் தென்பகுதியையும், யூதாவின் தென்பகுதியையும் காலேபின் தென்பகுதியையும் கொள்ளையடித்துச், சிக்லாவைத் தீக்கிரையாக்கியிருக்கிறோம் “என்று பதிலளித்தான். |
15 | தாவீது அவனிடம் அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா? என்று கேட்க என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்: அப்பொழுது அக்கூட்”டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன் “என்றான். |
16 | அவ்வாறே அவன் தாவீதை அழைத்துச் சென்ற போது, இதோ, தாங்கள் பெலிஸ்தியர் நாட்டினின்றும் யூதா நாட்டினின்றும் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை முன்னிட்டு அவர்கள் வெளியில் கும்பல் கும்பலாய் உண்டு குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தனர். |
17 | தாவீது அன்று காலை தொடங்கி மறுநாள் வரை அவர்களோடு போரிட்டார்: ஒட்டகங்கள் மீது ஏறிய நானூறு வீரர்களைத்தவிர அவர்களுள் ஒருவனும் தப்பவில்லை. |
18 | அமலேக்கியர் கொண்டு சென்ற எல்லாவற்றையும், தாவீது மீட்டதுடன், தம் மனைவியர் இருவரையும் விடுவித்தார். |
19 | அவர்கள் சிறைப்பிடித்த ஒருவருள் சிறுவரோ முதியவரோ புதல்வரோ புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தாவீது மீட்டு”க கொண்டு வந்தார். |
20 | ஆடு மாடுகள் எல்லாவற்றiயும் தாவீது கைப்பற்றினார். அந்தக் கால்நடைகளைத் தாவீதுக்குமுன் ஓட்டிவந்த மக்கள் இது தாவீதின் கொள்ளைப் பொருள் என்றார். |
21 | பின்பு களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்: அப்போது தாவீது அவரிடம் இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு வந்தார். தாவீது மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார். |
22 | ஆனால் தாவீதோடு சென்றவர்களில் இருந்த தீயவர் மற்றும் கயவர் எல்லாரும், “அவர்கள் நம்முடன் வராததால் நாம் மீட்டுக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை ஒன்றும் அளிக்க மாட்டோம்: அவர்களுள் ஒவ்வொருவரும் தம் மனைவியையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துச் செல்லட்டும் “என்றார். |
23 | அதற்கு தாவீது என் சகோதரர்களே, ஆண்டவர் நமக்கு அளித்துள்ளவற்றிலிருந்து இப்படியெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது: |
24 | இதன் பொருட்டு நீங்கள் சொல்வதைக் யார் கேட்பார்கள்? ஏனெனில் போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவு நான் போர் பொருள்களை காத்தவரின் பங்கும் இருக்கும் “என்றார். |
25 | இந்த முறையை இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமக் கட்டளையுமாக ஏற்படுத்தினார். |
26 | தாவீது சிக்லாகுக்கு வந்த போது கொள்ளைப் பொருள்களின் ஒரு பகுதியை யூதாவின் பெரியோர்களான தம் நண்பர்களுக்கு அனுப்பிவைத்துக் கூறியது: “இதோஆண்டவரின் எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாய் அனுப்புகிறேன் “என்றார். |
27 | பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்: பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தார். |
28 | அரோயேர், சிப்மேத்து, எசுத்தமோகு ஆகியவற்றில் இருந்தோர். |
29 | இராக்கால், எரகுமவேலரின் நகர்கள், கேனயரின் நகர்கள் ஆகியவற்றில் இருந்தோர்: |
30 | ஓர்மா, பொராசான், அத்தாகு ஆகியவற்றில் இருந்தோர்: |
31 | எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களில் இருந்தோர். |