1 | பின்னர் தாவீது இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம். ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை: அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை அற்றுப் போகும்: நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன் “ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். |
2 | பின் தாவீது அவருடன் அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோசின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்நதனர். |
3 | அங்கே தாவீது அவர் தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும் தாவீதோடு அவரது இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான காத்து நகரில் ஆக்கிசுடன் தங்கினார். |
4 | தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தார். அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை. |
5 | தாவீது ஆக்கிசை நோக்கி, என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால் நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்: உம் அடியன் ஏன் தலைநகரில் வாழ வேண்டும்? என்றார். |
6 | ஆதலால் அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்: அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது. |
7 | தாவீது பெலிஸ்திய எல்லைக்குள் ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் குடியிருந்தார். |
8 | பின்னர் தாவீதும் அவர் தம் ஆள்களும் புறப்பட்டுக் கெசூரியர், கிர்சியர், அமலேக்கியர் ஆகியேரைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஏனெனில் சூர் தொடங்கி எகிப்து நாடுவரை உள்ள நிலப்பகுதியில் பண்டைக்காலந்தொட்டு இவர்கள் குடியிருந்தனர். |
9 | தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ஆண் பெண் எவரையும் விட்டுவைக்கவில்லை: ஆனால் ஆடு, மாடுகள் கழுதைகள், எருது, ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆக்கிசிடம் திரும்பினார். |
10 | ஆக்கிசு அவரிடம், “.இன்று நீ யாரைக் கொள்ளையடித்தீர்? என்று கேட்க தாவீது மறுமொழியாக, “யூதாவின் தென் பகுதியில், அல்லது “எரகு மவேலரின் தென்பகுதியில் அல்லது “கேனியரின் தென்பகுதியியல் கொள்ளையடித்தேன் “என்பார். |
11 | தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை: ஏnனினல் அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், “இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான் “ என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள் “என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த நாளில் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது. |
12 | ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்: ஏனெனில் அவர் “இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார் “ என்று நினைத்தார். |