1 | பின்னர், பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர்” என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. |
2 | ஆதலால் தாவீது, நான் சென்று இப்பெலிஸ்தியரை முறியடிக்கலாமா? என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், “நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவைக் காப்பாற்று! என்று பதிலளித்தார். |
3 | ஆனால் தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்கு சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்வோம்? என்றனர்”. |
4 | தாவீது மீண்டும் ஆண்டவரிடம் கேட்டார்: ஆண்டவர் மீண்டும் மறுமொழியாக, “கெயிலாவுக்குப் புறப்பட்டுப் போ! ஏனெனில் பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்புவிப்பேன் என்றார். |
5 | பின்பு தாவீதும் அவர்தம் வீரர்களும் கெயிலாவுக்குச் சென்று, பெலிஸ்தியரோடு போரிட்டனர். அவர் அவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கி அவர்களின் கால்நடைகளை ஓட்டிச்சென்றனர்.இவ்வாறு தாவீது கெயிலாவாழ் மக்களை விடுவித்தார். |
6 | அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதை தம்முடன் எடுத்து வந்திருந்தார். |
7 | பின்னர் தாவீது கெயிலாவுக்கு வந்திருப்பது பற்றிச் சவுலுக்கு தெரிவிக்கப்பட்டபோது, சவுல் கடவுள் அவனை என்னிடம் ஒப்புவித்துள்ளார். ஏனெனில் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள நகரில் நுழைந்து அவன்மாட்டிக் கொண்டான் “ என்றார். |
8 | அடுத்து, கெயிலாமீது படையெடுத்த தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுக்கையிடுமாறு சவுல் தம் எல்லோரையும் போருக்கு அழைத்தார். |
9 | சவுல் தமக்குத் தீங்கு செய்யத்திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், “ஏபோதை இங்குக் கொண்டுவா “என்றார். |
10 | பிறகு தாவீது, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் பொருட்டு சவுல் கெயிலாவுக்கு வந்து அந்நகரை அழிக்க திட்டமிட்டுள்ளதை உம் அடியான் நான் பன்முறை கேள்விப்பட்டேன். |
11 | கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா? உம் அடியோன் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், அவன் வருவான் என்று பதிலளித்தார். |
12 | மீண்டும் தாவீது, “கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா?என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், “அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள் “என்றார். |
13 | பின்பு தாவீதும் அவருடன் இருந்த சுமார் அறுநூறு பேரும் கெயிலாவைவிட்டுப் புறப்பட்டு இடமாறிச் சென்று கொண்டிருந்தார்கள். தாவீது தப்பிவிட்டதைக் கேள்விப்பட்ட சவுல் மேலும் தொடர்வதைக் கைவிட்டார். |
14 | தாவீது பாளைவனத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். மலை நாடான சீபு பாலை நிலப் பகுதிகளில் தங்கியிருந்தவரைச் சவுல் ஒவ்வொரு நாளும் தேடியும் கடவுள் அவரிடம் ஒப்புவிக்கவில்லை. |
15 | சவுல் தம்மைக் கொலைச் செய்யத் தேடுகிறார் என்று அறிந்த தாவீது மிகுந்த அச்சம் கொண்டார்: ஆதலால் ஓர்சாவில் உள்ள சீபு பாலைநிலத்தில் தங்கியிருந்தார். |
16 | சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று அவரைத் திடப்படுத்தினார். |
17 | அவர் தாவீதிடம் அஞ்சாதே! என் தந்தை உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார். நீ இஸ்ரயேலுக்கு அரசனாவாய்: அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன்: என் தந்தை சவுல் கூட இதை அறிவார் “ என்றார். |
18 | ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினான். |
19 | பின்பு சீபியர் கிபாவிலிருந்த சவுலிடம் சென்று, “தாவீது எங்கள் பகுதியில் எசிமேனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா? |
20 | அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்: அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம் “என்று கூறினார். |
21 | சவுல் அவர்களைப் பார்த்து, “நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக! |
22 | நீங்கள் போய் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்றும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்: ஏனெனில் அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது. |
23 | ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும்குறித்துக் கொண்டு, எல்லாத் தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அவன் நாட்டில் இருந்தால் பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன் என்றார். |
24 | அவர்கள் சவுலுக்கு முன்னரே சீபுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்பு தாவீதும் அவர்தம் ஆள்களும் எசிமோனுக்குத் தெற்கே, அராபாவிலுள்ள மாவோன் பாலைநிலத்தில் இருந்தனர். |
25 | சவுலும் அவர் ஆள்களும் அவரைத் தேடிச் சென்றனர். தாவீது இதை அறிந்து மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் இதை கேள்வியுற்று, அவரும் மாவோன் பாலைநிலத்தில் தாவீதைச் தேடிச் சென்றார். |
26 | சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர் ஆள்களும் மலையின் மறுப்பக்கத்தில் நடந்தனர். சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்ற போதும், சவுலும் அவர்தம் ஆள்களும் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக் கொண்டார். |
27 | அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் “என்றார். |
28 | அதனால் சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பச் சென்றார். ஆதலின் அவ்விடம், “பிரிக்கும் பாறை “ என்று அழைக்கப்பட்டது. |
29 | தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஏன்கேதிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கினார். |