1 | பின்பு தாவீது நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலங்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், “நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையே? என்றார். |
2 | அதற்கு தாவீது குரு அமெலக்கிடம் “அரசர் எனக்கு ஒரு பணியைக்கட்டளையிட்டுள்ளார். நான் உனக்கு அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளையiயும் ஒருவரும் அறியக்கூடாது “ என்று அரசர் கட்டளையிட்டுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோற்றியுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழற்களுக்குச் சொல்லியுள்ளேன். |
3 | உண்பதற்கு இப்பொழுது உன்னிடம் என்ன இருக்கிறது.? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும் “என்றார். |
4 | குரு தாவீதை நோக்கி, “தூய அப்பம் உன்னிடம் உள்ளது: சாதரணமாக அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம், “என்றார். |
5 | தாவீது குருவை நோக்கி, “சாதாரண பயணத்தின் போதே இந்த இளைஞர்கள் உறவுக்கொள்ளவில்லை:இன்றோ சிறப்புப் பணியை மேற்கொள்வதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மைக் காத்துள்ளார் “என்றனர். |
6 | ஆதலால் குரு அவருக்கு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்: ஏனெனில் ஆண்டவனின் திரு முன்னிலையில் அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அங்கு சூடான அப்பம் அங்கு வைக்கப்படும். |
7 | சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் அந்நாளில் அங்கு இருக்க நேர்ந்தது. அவன் சவுலின் இடையர்களுக்கு தலைவன். |
8 | அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், “இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா? அரசனின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ என் படைக்கலன்களையோ கையோடு கொண்டு வரவில்லை, என்றார். |
9 | குரு அவரிடம் ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபாத்துக்கு பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விருமம்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேற வாள் இங்கு இல்லை. என்று கூறினார். அதற்கு தாவீது, “ அதற்கு நிகரானது வேறு எதுவும் இல்லை. அதை எனக்குத் தாரும் என்றார். |
10 | பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார். |
11 | ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், “இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். என்று பெண்கள் நடனமாடிப் பாடிக் கொள்ளவில்லையா? “ என்றனர். |
12 | தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினர். |
13 | அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக் காரண் போல் நடித்தார். |
14 | அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், “இதோ அம்மனிதனைப் பாருங்கள்.: இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்? |
15 | என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா? என்று சினமுற்றான். |