1 | ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகத் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறங்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுவருவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்: ஏனெனில் அவர் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் “என்றார். |
2 | அதற்குச் சாமுவேல் எப்படிப்போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே? என்றார். மீண்டும் ஆண்டவர் நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! “ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன் “என்று சொல்: |
3 | ஈசாயைப் பலிக்க அழைத்திடு: அப்போது நீ என்ன செய்யவேண்டியதென்று நான் உனக்கு அறிவிப்பேன்: நான் உனக்கு காட்டுகிறவனை நீ எனக்குத் திருப்பொழிவு செய் “என்றார். |
4 | ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்து பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர் கொண்டு வந்து, உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே “என்று கேட்டார். |
5 | அதற்கு அவர், “ஆம் சமாதானம்தான்: ஆண்டவருக்குப் பலி செலுத்த வந்துள்ளேன்: உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள் “என்றார். மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார். |
6 | அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் “என்று எண்ணினார். |
7 | ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே: ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்: ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் “என்றார். |
8 | அடுத்து, ஈசாய் அரினதாபை அழைத்து சாமுவேல் முன்பாக நடந்துப்போகச் செய்தார். அவர், “இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை “ என்”று கூறினார். |
9 | பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். இவர்களையும் ஆண்டவர் சேர்த்துக் கொள்ளவில்லை “என்றார் சாமுவேல். |
10 | இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை என்றார் சாடுவேல். |
11 | தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, “என் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா? “என்று கேட்க, “இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான் “என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம் ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன் “என்றார். |
12 | ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றத்துடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்! என்றார். |
13 | உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகேதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார். |
14 | ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது. |
15 | அப்பபொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், ஐயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே! |
16 | உம் முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும்! ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்! என்றனர். |
17 | எனவே சவுல் தம் பணியாளரிடம் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள் “ என்றார். |
18 | பணியாளர்களில் ஒருவன் இதோ பெதலரகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்: அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்: வீரமுள்ளவன்: போர்த்திறன் பெற்றவன்: பேச்சுத் திறன் பெற்றவன்: அழகானவன்: மேலும் ஆண்டவர் அவனோடு இருக்கிறார் “என்றார். |
19 | அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதுர்களை அனுப்பி, “ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும் என்று தெரிவித்தார். |
20 | அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார். |
21 | தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன்கொண்டு தாக்குவோனாக நியமித்தார். |
22 | தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்: ஏனெனில் என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது “ எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார். |
23 | அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்: சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார். |