1 | பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர். |
2 | பெலிஸ்தியர் கடவுளின் பேழையைத் தாகோன் கோவிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்து, தாகோன் சிலை அருகில் வைத்தனர். |
3 | அஸ்தோதின் மக்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்தபோது, தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததை”க் கண்டனர். அவர்கள் அதை எடுத்து அதன் இடத்தில் மீண்டும் நிறுத்தினார்கள். |
4 | அவர்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்த போது தாகோன், சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். ஆனால் அதன் தலையும், இருகைகளும் துண்டிக்கப்பட்டு, வாயிற்படியில் கிடந்தன. அதன் உடல் பகுதி மட்டும் எஞ்சியிருந்தது. |
5 | ஆகவே தான் தாகோனின் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் அஸ்தோதிலிருக்கும். தாகோனின் வாயிற்படியை இந்நாள்வரை மிதிப்பதில்லை. |
6 | அஸ்தோதின் மக்களை அழிக்கும் படியாக ஆண்டவரின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியது. அஸ்தோது வாழ் மக்களையும் அதன் எல்லைக்கு உட்பட்டவர்களையும் அவர் மூலக் கட்டிகளல் வாட்டி வைத்தனர். |
7 | அஸ்தோதின் மக்கள் இவ்வாறு நிகழ்ந்ததைக் கண்டபோது, “இஸ்ரயேலின் கடவுளது பேழை நம்மிடையே இருக்கலாகாது. ஏனெனில் அவரது கை நம்மையும் நம் தெய்வம் தாகோனையும் வன்மையாகத் தாக்கியுள்ளது “ என்று பேசிக் கொண்டனர். |
8 | ஆகவே அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்தியத் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம் “இஸ்ரயேலரின் கடவுளது பேழையை நாம் என்ன செய்வோம்? என்று கேட்டனர். அவர்கள், “இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் காத்து நகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் “ என்று பதிலுரைத்தனர். அவ்வாறே இஸ்ரயேலரின் கடவுளது பேழையை எடுத்துச் சென்றனர். |
9 | அதை அங்கு எடுத்துச் சென்ற பின், ஆண்டவரின் கை அந்நகரை வன்மையாகத் தாக்கி, மாபெரும் அழிவை ஏற்படுத்தியது. அவர் அந்நகர் மக்களை, சிறியோர் முதல் பெரியோர் வரை, மூலக் கட்டிகளால் வதைத்தார். |
10 | அவர்கள் கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை எக்ரோனுக்கு வரவே, எக்ரோனியர். “எங்களையும் எங்கள் மக்களையும் அழிக்கவே இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் கொண்டு வந்து விட்டார்கள் “ என்று கத்தினார்க்ள. |
11 | எனவே அவர்கள் ஆள்அனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், “இஸ்ரயேலின் கடலுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லா திருக்கட்டும் “ என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள். |
12 | இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டவர்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது. |