1 | இஸ்ரயேல் மக்களுக்கு அரசன் இல்லாத அந்நாள்களில் லேவியர் ஒருவர் எப்ராயிம் மலைநாட்டின் எல்லைப்புறத்தில் தங்கியிருந்தார்.யூதாநாட்டுப் பெத்லகேமைச் சார்ந்த ஒரு பெண்ணை மறு மனைவியாகக் கொண்டிருந்தார். |
2 | அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள்.அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள். |
3 | அவளிடம் நயந்து பேசி, அவளைத் தன்னுடன் மீண்டும் அழைத்து வர அவள் கணவன் அவளை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.அவர் தம்முடன் தம் வேலையாளையும் இரு கழுதைகளையும் கூட்டிக்கொண்டு சென்று அவள் தந்தையின் வீட்டை வந்தடைந்தார்.அவரைக் கண்டதும் பெண்ணின் தந்தை மகிழ்வுடன் வரவேற்றார். |
4 | பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே அவர் அவருடன் மூன்று நாள்கள் தங்கினார். |
5 | நான்காம் நாள் அவர்கள் அதிகாலையில் எழுந்தார்கள்.அவர் புறப்படுகையில் பெண்ணின் தந்தை தம் மருமகனிடம், “சிறிது உணவருந்தித் திடம் கொண்டபின் போகலாம்” என்றார். |
6 | அவர்கள் இருவரும் ஒன்றாக அங்கே அமர்ந்து உண்டு குடித்தனர்.பெண்ணின் தந்தை அவரிடம், “உம் இதயம் மகிழுமாறு இரவும் இங்கே தங்கும்” என்றார். |
7 | அவர் போவதற்கு எழுந்தார்.அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே, அவர் அங்கேயே தங்கி இரவைக் கழித்தார். |
8 | அவர், ஐந்தாம் நாள் புறப்படுவதற்காக அதிகாலையில் எழுந்தார்.அப்போது பெண்ணின் தந்தை உம் இதயம் மகிழுமாறுபொழுது சாயும்வரை இங்கே தங்கும்” என்றார்.இருவரும் உண்டனர். |
9 | அவரும் அவர் மறுமனைவியும் அவருடைய வேலையாளும் புறப்படத் தயாராயினர், பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரிடம்,”இதோ! நாள் முடிந்து மாலையாகி விட்டது.நாள் முடிவடைந்துவிட்டது.இரவு இங்கே தங்கி, உம் இதயத்தை மகிழ்வியும்: நாளை அதிகாலையில் எழுந்து உங்கள் வீட்டுக்குப் பயணமாகலாம்” என்றான். |
10 | அம்மனிதர் இரவு தங்க விரும்பவில்லை.எனவே அவர் சேணமிட்ட இரு கழுதைகளுடனும் தம் மறு மனைவியுடனும் புறப்பட்டு எருசலேம் என்ற எபூசுக்கு அருகே வந்தார். |
11 | அவர்கள் எபூசை நெருங்கியபொழுது அந்திமாலை ஆகிவிட்டது.வேலையாள் தம் தலைவரிடம்,”நாம் எபூசுக்குச் சென்று அங்கே இரவைக் கழிப்போம்” என்றான். |
12 | அவன் தலைவர் அவனிடம், “நாம் இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்றினத்தார் நகர்ப்பக்கம் செல்லாமல், கிபயாவுக்குக் கடந்து செல்வோம்” என்றார். |
13 | அவர் தம் வேலையாளிடம், “கிபயா அல்லது இராமாவுக்குச் சென்று அவற்றுள் ஏதாவது ஓரிடத்தில் இரவைக் கழிப்போம்” என்றார். |
14 | அவ்வாறே அவர்கள் சென்று பென்யமினைச் சார்ந்த கிபயாவை அடைந்தபொழுது கதிரவன் மறைந்தான். |
15 | அவர்கள் கிபயாவில் இரவைக் கழிக்க அங்கே சென்றனர்.ஆனால் இரவைக் கழிக்கத் தன் வீட்டிற்குள் வருமாறு அவர்களை ஒருவனும் அழைக்கவில்லை.ஆகவே நகரின் சதுக்கத்தில் அமர்ந்தனர். |
16 | மாலையில் ஒரு முதியவர் தம் வேலையை முடித்துவிட்டு, வயலிலிருந்து வந்தார்.அவர் எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்தவர்.அவர் கிபயாவிற்கு வந்து தங்கியிருந்தார்.ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் பென்யமின் மக்கள், |
17 | அவர் உற்றுப்பார்த்த பொழுது, வழிப்போக்கரான அந்த மனிதரை நகரின் சதுக்கத்தில் கண்டார்.அம்முதியவர் அவரிடம்,”எங்கே போகின்றாய்? எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார். |
18 | அவரிடம், “நாங்கள் யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்து எப்ராயிமின் மலை நாட்டு எல்லைப்புறத்திற்குச் செல்கின்றோம்.நான் அப்பகுதியைச் சேர்ந்தவன்.யூதாநாட்டுப் பெத்லகேமிற்குச் சென்றிருந்தேன்.நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன்.இங்கே தன் வீட்டுக்குள் வருமாறு என்னை ஒருவனும் அழைக்கவில்லை. |
19 | எங்கள் கழுதைகளுக்கு வேண்டிய வைக்கோலும், தீவனமும் தம் ஊழியர்களாகிய எனக்கும் என் மறுமனைவிக்கும் வேலையாளுக்கும் வேண்டிய அப்பமும் திராட்சை இரசமும் எங்களிடம் உள்ளன.எங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை” என்றார். |
20 | அப்பொழுது முதியவர், “உனக்கு நலம் உண்டாகுக! உன் தேவைகள் அனைத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன்.இரவில் சதுக்கத்தில் மட்டும் தங்காதே” என்றார். |
21 | அவர் அவரைத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.கழுதைகளுக்குத் தீவனம் அளித்தார்.அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவினர்: உண்டு குடித்தனர். |
22 | அவர்கள் மனமகிழ்ந்திருந்தபொழுது இதோ! அந்நகரின் இழி மனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர்.அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், “உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா.நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்றனர். |
23 | வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து அவர்களிடம்,”வேண்டாம், என் சகோதரர்களே, என் வீட்டிற்கு வந்திருக்கும் இம்மனிதனுக்குத் தீங்கு எதுவும் செய்ய வேண்டாம்.இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள். |
24 | இதோ! கன்னிப்பெண்ணான என் மகளையும், அவர் மறுமனைவியையும் வெளியே அழைத்து வருகிறேன்.அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளுங்கள்.ஆனால் இம்மனிதனுக்கு இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்” என்றார். |
25 | அவர்களோ அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.அப்பொழுது அந்த லேவியர் தம் மறுமனைவியை அவர்களுக்காக வெளியே தள்ளிவிட்டார்.அவர்கள் அவளோடு உறவு கொண்டு இரவு முழுவதும் வைகறைவரை அவளை இழிவுபடுத்தினர்.அவர்கள் வைகறையானதும் அவளைப் போகவிட்டனர். |
26 | வைகறையில் அப்பெண் வந்து தன் கணவன் இருந்த வீட்டின் கதவருகில் காலைவரை விழுந்துகிடந்தான். |
27 | காலையில் அவள் கணவர் எழுந்து, பயணத்தைத் தொடர, வீட்டின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்.அவர் மறுமனைவியான அப்பெண் வீட்டின் கதவருகில் விழுந்துகிடந்தாள்.அவள் கைகள் |
28 | அவர் அவளிடம் எழுந்திரு புறப்படுவோம் என்றார். பதில் இல்லை எனவே அவர் அவளைக் கழுதை மீது தூக்கி வைத்து தன் வீட்டை நோக்கி சென்றார். |
29 | அவர் தம் வீட்டிற்கு வந்ததும் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் உடலைப் பன்னிரு துண்டுகளாக வெட்டி, அவற்றை இஸ்ரயேலின் எல்லா நிலப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார். |
30 | அதைக் கண்ட அனைவரும், “இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து, இந்நாள் வரை இது போன்றது நடந்ததில்லை: இது போன்றதைக் கண்டதுமில்லை: இதைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள்: கலந்து பேசுங்கள்: உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்” என்று சொல்லிக் கொண்டனர். |