வேதாகமத்தை வாசி

நியாயாதிபதிகள் 10

                   
புத்தகங்களைக் காட்டு
1அபிமெலக்கிற்குப் பின் இஸ்ரயேலை விடுவிக்கத் தோதுவின் புதல்வன் பூவாவின் மகனான தோலா எழுந்தார். அவர் இசக்கார் குலத்தைச் சார்ந்தவர். அவர் எப்ராயிம் மலையில் சாமீரில் வாழ்ந்து வந்தார்.
2அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்து மூன்று ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார். அவர் இறந்து சாமீரில் அடக்கம் செய்யப்பட்டார்.
3அவருக்குப் பின் கிலாயத்தைச் சார்ந்த யாயிர் என்பவர்எழுந்தார். அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார்.
4அவருக்கு முப்பது புதல்வர்.அவர்கள் முப்பது கோவேறு கழுதைகள் மீது சவாரி செய்தனர். அவர்களுக்கு முப்பது நகர்கள் இருந்தன. அவற்றை அவ்வோத்து-யாயிர் என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது சிலயாது நிலப்பகுதியில் உள்ளது.
5அவர் இறந்து காமோனில் அடக்கம் செய்யப்பட்டார்.
6ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும், அஸ்தரோத்துகளுக்கும், சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸதியாவின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை.
7இஸ்ரயேலுக்குக எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவா அவர்களைப் பெலிஸ்தியரின் கையிலும் அமமோனியரின் கையிலும் ஒப்படைத்தார்.
8அவர்கள் அந்த ஆண்டு இஸ்ரயேல் மக்களை ஒடுக்கித் துன்புறுத்தினர். யோர்தானுக்கு அப்பால் கிலாயத்தில் இருந்த அம்மோனியர் நிலத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைப் பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினர்.
9யூதாவுடனும், பென்யமினுடனும், எப்ராயிம் வீட்டுடனும் போரிட அம்மோனியர் யோர்தானைக் கடந்து வந்தனர். இஸ்ரயேலர் மிகவும் அல்லலுற்றனர்.
10இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம்,”உடக்கெதிராகப் பாவம் செய்தோம். ஏனெனில், நாங்கள் எங்கள் கடவுளாகிய உம்மைவிட்டு விலகிப் பாகாலுக்கு ஊழியம் புரிந்தோம்” என்று கூறிக் கூக்குரலிட்டனர்.
11ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், எகிப்தியரிடமிருந்தும் எமோரியரிடமிருந்தும் அம்மோன் மக்களிடமிருந்தும் அம்மோன் மக்களிடமிருந்தும் பெலிஸ்தியரிடமிருந்தும் நான் உங்களை விடுவிக்கவில்லையா?
12சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும் உங்களை நசுக்கிய பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டீர்கள். நான் உங்களை அவர்கள் கையிலிருந்து விடுவித்தேன்.
13ஆனால் நீங்கள் என்னைவிட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வணங்கினீர்கள். ஆகவே நான் உங்களை மீண்டும் விடுவிக்கமாட்டேன்.
14நீங்கள் தேர்ந்தெடுத்த தெய்வங்களிடமே சென்று கூக்குரலிடுங்கள். அவர்கள் உங்கள் துன்ப வேளையில் உங்களை விடுவிக்கட்டும்” என்றார்.
15இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் நாங்கள் பாவம் செய்தோம். உம் பார்வையில் நல்லதெனப் பட்டதை எங்களுக்குச் செய்யும். இன்று எங்களை விடுவித்தருளும், என்று வேண்டினர்.
16அவர்கள் தங்களிடையே இருந்த வேற்றித் தெய்வங்களை அகற்றி ஆண்டவருக்கு ஊழியம் புரிந்தனர். எனவே, அவர் இஸ்ரயேல் மக்களின் துன்பம் குறித்து வருத்தமுற்றார்.
17அம்மோனியர் ஒன்று திரண்டு கிலாயத்தில் பாளையம் இறங்கினர். இஸ்ரயேல் மக்கள் ஒன்று கூடி மிஸ்பாவில் பாளையம் இறங்கினர்.
18மக்களும் கிலாயத்தின் தலைவர்களும் ஒவ்வொருவரும் தம் நண்பரிடம், அம்மோனியருக்கு எதிராக யார் போரிடத் தொடங்குகின்றானோ, அவனே கிலாயதுவாழ் மக்கள் அனைவருக்கும் தலைவனாக இருப்பான் என்றனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.