வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் கொடி, மூதாதையர் வீட்டுச் சின்னங்கள் இவற்றின்படி பாளையமிறங்குவர்: எல்லாப் பக்கத்திலிருந்தும் சந்திப்புக் கூடாரத்தை நோக்கியவாறு அவர்கள் பாளையமிறங்குவர்.
3கிழக்கே கதிரவன் உதயத்தை நோக்கிப் பாளையமிறங்க வேண்டியவர் யூதாவின் கொடியையுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்.யூதா மக்களின் தலைவன் நக்சோன்: இவன் அம்மினதாபின மகன்.
4எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.
5அவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் இசக்கார் குலத்தார்: இசக்கார் மக்களின் தலைவன் நெத்தனியேல்: இவன் சூவாரின் மகன்:
6எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.
7அடுத்து வருவது செபுலோன் குலம்: செபுலோன் மக்களின் தலைவன் எலியாபு: இவன் கேலோனின் மகன்:
8எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தேழாயிரத்து நானூறு.
9இவ்வாறாக யூதா அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத்தொகை ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு: இவர்கள் முதலாவதாக அணிவகுத்துச் செல்வர்.
10தெற்கே பாளையமிறங்க வேண்டியவர் ரூபனின் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்: ரூபன் மக்களின் தலைவன் எலிட்சூர், இவன் செதேயூரின் மகன்:
11எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு.
12இவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் சிமியோன் குலத்தார்: சிமியோன் மக்களின் தலைவன் செலுமியேல், இவன் சுரிசத்தாயின் மகன்:
13எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு.
14அடுத்து வருவது காத்து குலம்: காத்து மக்களின் தலைவன் எல்யாசாபு, இவன் இரகுவேலின் மகன்:
15எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது.
16இவ்வாறாக ரூபன் அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத் தொகை ஒரு இலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது: இவர்கள் இரண்டாவதாக அணிவகுத்துச் செல்வர்.
17அதன் பின் சந்திப்புக்கூடாரம் லேவியர் அணியினரோடு ஏனைய அணியினர் நடுவே செல்லும்.அவர்கள் பாளையமிறங்கும்போது செய்வது போன்றே தம் தம் வரிசையில் தம் தம் கொடியேந்தி அணிவகுத்துச் செல்வர்.
18மேற்கே பாளையமிறங்க வேண்டியவர் எப்ராயிம் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்: எபிராயிம் மக்களின் தலைவன் எலிசாமா: இவன் அம்மிகூதின் மகன்.
19எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பதாயிரத்து ஐந்நூறு.
20அவனையடுத்திருப்போர் மனாசே குலத்தார்: மனாசே மக்களின் தலைவன் கமாலியேல், இவன் பெதாசூரின் மகன்:
21எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தீராயிரத்து இருநூறு.
22அடுத்து வருவது பென்யமின் குலம்: பென்யமின் மக்களின் தலைவன் அபிதான்: இவன் கிதயோனியின் மகன்:
23எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தையாயிரத்து நானூறு.
24இவ்வாறாக எப்ராயிம் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து எண்ணாயிரத்து நூறு.அவர்கள் மூன்றாவதாக அணிவகுத்துச் செல்வர்.
25வடக்கே பாளையமிறங்க வேண்டியவர் தாண் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்: தாண் மக்களின் தலைவன் அகியேசர்: இவன் அம்மி சத்தாயின் மகன்:
26எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை அறுபத்தீராயிரத்து எழுநூறு.
27அவனை அடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் ஆசேர் குலத்தார்: ஆசேர் மக்களின் தலைவன் பகியேல், இவன் ஒக்ரானின் மகன்:
28எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு.
29அடுத்து வருவது நப்தலிக் குலம்:நப்தலி மக்களின் தலைவன் அகிரா: இவன் ஏனானின் மகன்:
30எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து மூவாயிரத்து நானூறு.
31இவ்வாறாக, தாண் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு.இவர்கள் அணிவகுப்பில் இறுதியாகச் செல்வர்.
32தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இவர்களே: அனைத்துப் பாளையங்களிலும் தங்களைச் சார்ந்த அணியினரோடு எண்ணப்பட்டோரின் தொகை ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.
33ஆனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி லேவியர் இஸ்ரயேல் மக்களுள் எண்ணப்படவில்லை.
34ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர்.அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கொடிகளைச் சுற்றிப் பாளையமிறங்கி தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின்படி அணிவகுத்துச் சென்றனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.