வேதாகமத்தை வாசி

சங்கீதம் 11

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகந்துள்ளேன்: நீங்கள் என்னிடம், 'பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ:
2ஏனெனில், இதோ! பொல்லார் வில்லை வளைக்கின்றனர்: நாணில் அம்பு தொடுக்கின்றனர்: நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்:
3அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?' என்று சொல்வது எப்படி?
4ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்: அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது: அவர் கண்கள் உற்று நோக்குகின்றன: அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன.
5ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்: வன்முறையில்”நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.
6அவர் பொல்லார்மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்: பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும்.
7ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்: அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.