1 | பல நாள்களுக்குப் பிறகு, பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில். ஆண்டவர் எலியாவிடம்,“ஆகாபு உன்னை காணுமாறு போய் நில். நான் நாட்டில் மழை பெய்யச் செய்வேன் “ என்று கூறினார். |
2 | அவ்வாறே எலியா தம்மை ஆகாபு காணுமாறு அவனிடம் சென்றார். அப்பொழுது சமாரியாவில் பஞ்சம் கடுமையாக இருந்தது. |
3 | அரண்மனைக் கண்காணிப்பாளன் ஒபதியாவை, ஆகாபு தன்னிடம் அழைத்தான். ஒபதியா ஆண்டவருக்கு மிகவும் அஞ்சி நடந்தவர். |
4 | ஆண்டவரின் இறைவாக்கினரை ஈசபேல் அழிக்க முயன்றபோது, அவர்களுள் நூறு பேரைக் குகைக்கு ஐம்பதாக மறைத்து வைத்திருந்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து வந்தார். |
5 | ஆகாபு ஒபதியாவிடம்,“நாடெங்கும் சென்று எல்லா நீருற்றுகளையும், நீரோடைகளையும் பாhப்போம். ஒருவேளை குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் உயிர் வாழத் தேவையான புல் கிடைக்கலாம். நம்முடைய கால் நடைகளை இழக்க வேண்டியிராது “ என்றான். |
6 | சுற்றிப்பார்ப்பதற்கென நாட்டைப் பிரித்துக் கொண்டபின் ஆகாபு ஒரு திசையை நோக்கிச் சென்றார்: ஒபதியா மறுதிசையை நோக்கிச் சென்றார். |
7 | போகும் வழியில் ஒபதியா திடீரென எலியாவைச் சந்தித்தார். அவர் அவரை அடையாளம் கண்டு கொண்டு, தாழ்ந்து வணங்கி,“நீர் என் தலைவர் எலியா தாமோ? “ என்றார். |
8 | அவர்,“ஆம், நான்தான்! நீ உன் தலைவனிடம் சென்று, 'எலியா வந்துள்ளார்' என்று சொல் “ என்றார். |
9 | அப்பொழுது ஒபதியா, “நான் என்ன பாவம் செய்தேன்? உம் அடியானாகிய என்னை ஆகாபு கொலை செய்யும்படி நீர் ஏன் அவனிடம் கையளிக்கிறீர்? |
10 | வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவன் உம்மைத் தேடிப் பிடிக்கும்படி ஆளனுப்பாத நாடோ பேரரசோ இல்லை. எந்த நாடோ அரசோ 'உம்மைக் காணவில்லை' என்று சொன்னால், 'உம்மைக் காணவில்லை' என்று ஆணையிடச் செய்தான். |
11 | ஆனால் நீரோ, 'எலியா வந்துள்ளார் ' என என் தலைவனிடம் சொல்லச் சொல்கீறீர். |
12 | நான் உம்மைவிட்டு அகன்றவுடன், ஆண்டவரின் ஆவி உம்மை எனக்குத் தெரியாமல்தூக்கிக் கொண்டு போய்விடலாம். ஆகாபிடம் சென்று நான் தெரிவிக்கையில், உம்மை அவன் காணவில்லையெனில், என்னைக் கொன்று விடுவான். உம் அடியானாகிய நான் இளமை முதல் ஆண்டவருக்கு அஞ்சி நடந்திருக்கின்றேன். |
13 | ஆண்டவரின் இறைவாக்கினரை ஈசபேல் அழிக்க முயன்றபோது, அவர்களில் நூறு பேரைக் குகைக்கு ஐம்பதாக மறைத்து வைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து வந்தது பற்றி நீர் கேள்விப்படவில்லையா? |
14 | இப்படியிருக்க, நான் என் தலைவனிடம் சென்று, 'எலியா வந்துள்ளார்' என்று சொல்லச் சொல்கிறீர். என்னை அவன் கொன்றுவிடுவான் “ என்றார். |
15 | அப்பொழுது எலியா, “நான் பணியும் படைகளின் ஆண்டவர் மேல் ஆணை! இன்று அவன் காணுமாறு அவன்முன் நிற்பேன் “ என்றார். |
16 | ஒபதியா புறப்பட்டு ஆகாபைச் சந்தித்து இதைத் தெரிவித்தார். உடனே ஆகாபு எலியாவைச் சந்திக்கச் சென்றான். |
17 | ஆகாபு எலியாவைக் கண்டதும், “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீதானே? “ என்றான். |
18 | அதற்கு எலியா, “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நானல்ல: நீயும் உன் தந்தையின் வீட்டாரும்தான். ஏனெனில் நீங்கள் ஆண்டவரின் கட்டளைகளைப் புறக்கணித்துப் பாகால் பின்னே செல்கிறீர்கள்! |
19 | இப்போதே ஆளனுப்பி இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் கர்மேல் மலையில் என் முன்னிலையில் ஒன்று திரட்டு. ஈசபேலின் பந்தியில் உணவருந்தும் பாகாலின் நானூற்றைம்பது பொய்வாக்கினரையும் அசேராவின் நானூறு பொய்வாக்கினரையும் கொண்டு வந்துசேர் “ என்றார். |
20 | அவ்வாறே ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான். பொய்வாக்கினரையும் கர்மேல் மலையில் ஒன்று திரண்டினான். |
21 | எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கக் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால் தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்! “ |
22 | அப்பொழுது எலியா மக்களிடம், “ஆண்டவரின் திருவாக்கினருள் நான் ஒருவன்தான் எஞ்சியிருக்கிறேன்! பாகாலின் பொய்வாக்கினரோநாநூற்றைம்பது பேர் இருக்கின்றனர். |
23 | இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்: ஆனால் நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின் மேல் வைப்பேன்: நானும் நெருப்பு வைக்க மாட்டேன். |
24 | நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள் “ என்றார். மக்கள் அனைவரும் பதில்மொழியாக, “நீர் சொல்வது சரியே “ என்றனர். |
25 | பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் “முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்: ஆனால் நெருப்பு மூட்டாதீர்கள் “ என்றார். |
26 | அவ்வாறே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, “பாகாலே! பதில் தாரும் “ என்று கத்தினர். ஆனால் எக்குரலும் கேட்கவில்லை: எப்பதிலும் வரவில்லை. எனவே அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி ஆடலாயினர். |
27 | நண்பகலாயிற்று. எலியா அவர்களைக் கேலி செய்து, “இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அவன் தூங்கிக் கொண்டிருக்கலாம்: அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்! “ என்றார். |
28 | எனவே அவர்கள் இன்னும் உரத்த குரலி”ல் கத்தினர்.தங்கள் வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே கீறிக் கிழித்துக் கொண்டார்கள், |
29 | பிற்பகல் ஆயி”ற்று. அவர்கள் மாலைப் பலி செலுத்தும்” நேரம்வரை தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் எக்குரலும் கேட்கவில்லை.எப்பதிலும் வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை. |
30 | அப்போது எலியா எல்லா மக்களையும் நோக்கி, “என் அருகில் வாருங்கள் “ என்றார்.மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர்.உடனே எலியாஅங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச் செப்பனிட்டார். |
31 | 'உன் பெயர் இஸ்ரயேல்' என்று ஆண்டவர் யாக்கோபுக்கு உரைத்திருந்ததன் பொருட்டு, அவர் வழிவந்த குலங்களின் எண்ணிக்கைப்படி எலியா பன்னிரு கற்களை எடுத்தார். |
32 | அக்கற்களைக் கொண்டு ஆண்டவர் பெயரி”ல் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார். |
33 | அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றின் மேல் வைத்தார். |
34 | “நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின்மேலும் ஊற்றுங்”கள் “ என்றார்.அவர்“இரண்டாம்முறையும் செய்யுங்கள் “, என்றார். அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் “மூன்றாம் முறையும் செய்யுங்கள் “ என்றார்.அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர். |
35 | எனவே தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. மேலும் வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார். |
36 | மாலைப் பலி செலுத்தும் நேரமாயிற்று. இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில் வந்து,“ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுள் நீரே என்றும், இவற்றையெல்லாம் நான் உம் வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்தருளும். |
37 | நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும்! ஆண்டவரே எனக்குப் பதில் தாரும்! “ என்றார். |
38 | உடனே ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும், விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது. |
39 | இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து,““ஆண்டவரே கடவள்! ஆண்டவரே கடவுள்! “ என்றனர். |
40 | அப்போது எலியா அவர்களை நோக்கி,“நீங்கள் பாகாலின் பொய்வாக்கினருள் எவனும் தப்பியோடாதபடி அவர்களைப் பிடியுங்கள் “ என்றார். மக்கள் அவர்களைப் பிடித்துக்கொடுக்க, எலியா அவர்களைக் கீசோன் ஓடைக்குக் கொண்டுபோய் அங்கே கொன்றார். |
41 | பின்பு எலியா ஆகாபை நோக்கி,“நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில் பெருமழையின் ஓசை கேட்கிறது “ என்றார். |
42 | ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று. அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொணடார். |
43 | பின்பு அவர் தம் பணியாளனை நோக்கி,“நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார் “ என்றார். அவன் போய்ப் பார்த்து,“ஒன்றும் இல்லை “ என்றான். எலியா அவனை நோக்கி,“ஏழுமுறை மீண்டும் சென்று பார் “ என்றார். |
44 | ஏழாம் முறை அவன் சென்று பார்த்து“இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது “ என்றான். அப்போது எலியா அவனை நோக்கி,“நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல் “ என்றார். |
45 | இதற்கிடையில் வானம் இருண்டது: கார் மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரயேலுக்குச் சென்றான். |
46 | அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல்” எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையே வரிந்து கட்டிக் கொண்டு, இஸ்ரயேல்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார். |