1 | இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். |
2 | சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்: நீயே இஸ்ரயேலுக்கு தலைமைதாங்குவாய் என்று உமக்கே ஆண்டவர் கூறினார். |
3 | இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு எபிரோனில் உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதை திருப்பொழிவு செய்தார்கள். |
4 | முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். |
5 | எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல் யூதாவை மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார். |
6 | அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்ற போது, அவர்கள் தாவீதை நோக்கி,”நீர் இங்கே வர முடியாது. பார்வையற்றவரும் முடவரும் கூட உம்மை அப்புறப்படுத்திவிடுவார்கள்” அதாவது”இங்கே தாவீது வர முடியாது” என்றார். |
7 | இருப்பினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீது நகர். |
8 | அன்று தாவீது,”எபூசியரைத் தாக்குகின்றவர்கள் குடைகால்வாய் வழியே தாவீது உளமார வெறுக்கும் முடவரையும் பார்வையற்றவரையும் கைப்பற்றட்டும்”என்று கூறினார். ஆகவே,”பார்வையற்றவரும் முடவரும் கோவிலுனுள் நுழையலாகாது”என்று கூறப்பட்டது. |
9 | தாவீது கோட்டையில் தங்கி, அதற்கு”தாவீது நகர்”என்று பெயரிட்டார். மில்லோவிலிருந்து உட்புறமாக தாவீது சுற்றிலும் மதில் எழுப்பினார். |
10 | தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார். |
11 | தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டினர். |
12 | ஆண்டவர் தம்மை இஸ்ரயேலின் அரசராக தம்மை நியமித்தார் என்றும் தம் மக்கள் இஸ்ரயேலுக்காகவே அவர் தம்மை உயர்த்தினார் என்றும் தாவீது உணர்ந்தார். |
13 | எபிரோனை விட்டு வந்ததும் தாவீது மேலும் பல வைப்பாட்டியரையும் மனைவியரையும் எருசலேமில் தேர்ந்தெடுத்தார். மேலும் பல புதல்வர்களும் புதல்வியரும் தாவீதுக்குப் பிறந்தனர். |
14 | எருசலேமில் அவருக்குப் பிறந்தவர்களின் பெயர்களாவன: சம்மூவா, சோபாபு, நாத்தான், சாலமோன், |
15 | இப்கார், எலிசுவா, நேபேகு, யாபியா, |
16 | எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று. |
17 | தாவீது இஸ்ரயேலின் அரசராக திருப்பொழிவு செய்யப்பட்டார் என்று கேட்டதும் பெலிஸ்தியர் அனைவரும் தாவீதை பிடிப்பதற்கு புறப்பட்டுச் சென்றனர். தாவீது அதைக் கேட்டதும் கோட்டைக்குள் புகுந்துவிட்டார். |
18 | பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர். |
19 | பெலிஸ்தியருக்கு எதிராக நான் செல்லட்டுமா? நீர் அவர்களை என் கையில் ஒப்புவிப்பீரா? என்று தாவீதிடம் ஆண்டவர் கேட்டார்.”சொல், உறுதியாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்புவிப்பேன்”என்று ஆண்டவர் தாவீதிடம் கூறினார். |
20 | தாவீது பாபால் பெராட்சிம்வரை வந்து அவர்களை தோற்கடித்தார்.”தகர்த்தெறியும் வெள்ளம் போல் ஆண்டவர் என் எதிரிகளை உன் கண்முன்னே தகர்த்தெறிந்தார்” என்ற தாவீது கூறினார். ஆகவே தான் இந்த இடம் பாகால் பெராட்சியம்என்று அழைக்கப்படுகிறது. |
21 | பெலிஸ்தியர் தங்களை தெய்வச்சிலைகளை விட்டு செல்ல, தாவீதும் அவர்தம் ஆள்களும் அவற்றை எடுத்துச் சென்றனர். |
22 | பெலிஸ்தியர் மீண்டும் எதிர்த்து வந்து இராபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர். |
23 | தாவீது ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க,”நீ எதிர்த்துச் செல்ல வேண்டாம். சுற்றி வளைத்து அவர்கள் பின்னால் சென்று, முசுக்கொட்டை மரங்களுக்கு எதிரில் அவர்களை அணுக வேண்டும். |
24 | முசுக் கொட்டை மரங்களுக்கு மேல் அணி வகுப்புப் பேரொலி ஒலிக்கும் போது நீ தயாராக இருக்கவேண்டும். ஏனெனில் அப்போது ஆண்டவர் பெலிஸ்தியர் படைகளை தாக்குவதற்காக உனக்கு முன்பாக செல்கிறார்” என்று ஆண்டவர் கூறினார். |
25 | ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டவாறே தாவீது சென்று, பெலிஸ்தியரை கெபா முதல் பெசேர் வரை தாக்கினார். |