1 | தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுள்ளத்தை நாடினார்.”கிபாயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன் மீதும் அவன் வீட்டார் மீதும் இரத்தப்பழி உள்ளது”என்றார் ஆண்டவர். |
2 | அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரை சார்ந்தவர் அல்ல: அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவரை அழிக்க முயன்றார். |
3 | தாவீது கிபயோனியரிடம்”உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவரின் உரிமைச் சொத்துக்கு ஆசிவழங்குமாறு நான் என்ன கழுவாய் செய்ய வேண்டும்?” என்று கேட்டார். |
4 | கிபயோனிர் தாவீதிடம்,”சவுலிடமிருந்தோ அவன் வீட்டாரிடமிருந்தோ நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ எதிர்பாக்கவில்லை: இஸ்ரயேலருள் ஒருவனைக் கொல்ல வேண்டும் என்று நாங்கள் விருப்பவில்லை” என்று கூறினார். தாவீது,”நீங்கள் வீம்புவதை நான் செய்வேன்” என்றார். |
5 | கிபயோனியர் அரசரிடம்,”நாங்கள் இஸ்ரயேல் எல்லையில் எங்குமே ஒழிந்து போகச் சதிசெய்தவன், எங்களை அழித்தவன் ஒருவன் உண்டு. |
6 | அவன் புதல்வருள் ஏழு பேர் எங்களிடம் ஒப்புவிக்கப்பட்டும் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலின் நகரான கிபயோனில் அவர்களை ஆண்டவருக்காகக் கழுவிலேற்றுவோம்” என்று கூறினர். அரசரும்”அவர்களை ஒப்புவிக்கிறேன்”என்றார். |
7 | ஆனால் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டு சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த பெரிபொசேத்தை அரசர் தப்பவிட்டார். |
8 | அய்யாவின் மகள் இரிசபா சவுலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்களான அர்மோனி, மெபிபொசேத்து ஆகிய இருவரையும் சவுலின் மகள் மேராபு மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஐவரையும் பிடித்து, |
9 | கிபயோனியர் கையில் அரசர் ஒப்படைத்தார். இவர்களை ஆண்டவர் முன்னிலையில் மலையில் கழுவேற்றினர். அந்த ஏழுபேரும் ஒன்றாக மடிந்தார்கள். அவர்கள் வாற்கோதுமை அறுவடை தொடங்கிய முதல் நாள்களிலே கொலையுண்டார்கள். |
10 | அப்போழுது அய்யாவின் மகன் ரிஸ்பா சாக்குத் துணியை எடுத்துக் கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள் முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியும்மட்டும் இருந்தாள்: பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனுமதிக்கவில்லை. |
11 | சவுலின் வைப்பாட்டியான அய்யாவின் மகள் இரிசபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. |
12 | எனவே, தாவீது சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் யாபேசு கிவயாதின் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்தார். பெலிஸ்தியர் அவர்களை கில்போவாவில் வெட்டி வீழ்த்தி, பெத்சான் நகர முற்றத்தில் கழுவிலேற்றினர். அந்த முற்றத்திலிருந்துதான் யாபேசு கியாதின் ஆள்கள் எலும்புகளை திருடிச் சென்றிருந்தனர். |
13 | சவுலின் எலும்புகளையும் யோனத்தானின் எலுக்புகளையும் அங்கிருந்து கழுவிலேற்றப்பட்ட இவர்களின் எலும்புகளையும் ஒன்று சேர்த்தனர். |
14 | சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமின் நிலப்பகுதியான செலாவில் அவர்தம் தந்தை கீசின் கல்லறையில் அடக்கம் செய்தனர். அரசர் கட்டளையிட்டவாறே அனைத்தையும் செய்தனர். அதன் பின் நாட்டுக்காகச் செய்யப்பபட்ட வேண்டுதலைக் கடவுள் கேட்டார். |
15 | பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு மீண்டும் போரிட வந்தனர். தாவீதும் அவரோடு அவருடைய பணியாளரும் இறங்கிச் சென்று பெலிஸ்தியரோடு போரிட்டனர். தாவீது களைப்புற்றிருந்தார். |
16 | அப்போது மூன்றரை கிலோகிராம் எடையுள்ள ஈட்டியை கையில் ஏந்தி, புதிய வாளை இடையில் கட்டியிருந்த, இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன், தாவீதைத் தாக்கவிருந்தான். |
17 | செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனைக் வெட்டிக் கொன்றான். எனவே தாவீதின் ஆள்கள்,” இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது” என்று அவரிடம் ஆணையிட்டுச் சொன்னார்கள். |
18 | இது நடந்தபின் மீண்டும் பெலிஸ்தியரோடு கோபி என்னுமிடத்தில் பேர் மூண்டது. அரக்கர் இனத்தவன் ஒருவரான சாபை ஊசாத்தியனான சிபெக்காய் கொன்றான். |
19 | மீண்டும் கோபில் பெலிஸ்தியரோடு போர் நடந்தது. பெத்லகேமைச் சார்ந்த யாகரே ஓர்கிமின் மகன் எல்கனான் கித்தியனான ஆகோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டியின் கோல் நெசவாளரின் படைமரம் போன்றிருந்தது. |
20 | மீண்டும் காத்தில் போர் மூண்டது. கைகளிலும் கால்களிலும் ஆறு விரள்களுடன், இருபத்து நான்கு விரல்களைக் கொண்ட நெட்டையன் ஒருவன் இருந்தான். |
21 | அவன் இஸ்ரயேலை பழித்தவன். தாவீதின் சகோதரர் சிமயியின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான். |
22 | தாவீதின் கையாலும் அவனது பணியாளரின் கையாலும் வீழ்த்தப்பட்ட இந்த நால்வரும் காத்து நாட்டில் அரக்கர் வழிமரபினரே. |