1 | இதன்பின் தாவீது,”நான் யூதாவின் நகருக்கு ஏதேனும் ஒன்றிற்கு செல்லட்டுமா?” என்று ஆண்டவரிடம் கேட்டார்.”செல்” என்றார் ஆண்டவர்.”எங்கு செல்லலாம்?” என்று தாவீது மீண்டும் வினவ,”எபிரான்” என்று ஆண்டவர் மீண்டும் பதிலளித்தார். |
2 | ஆகவே தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுடனும் அங்கு சென்றார். |
3 | தம்மோடு இருந்த ஆள்களையும் அவரது குடும்பத்தினரோடு, தாவீது அங்கே கூட்டி வந்தார். அவர்கள் எபிரோன் நகர்களில் குடியேறினர். |
4 | யூதாவின் மக்கள் வந்து, தங்கள் குலத்தின் அரசராக தாவீதை திருப்பொழிவு செய்தார்.”யாபோசு கிலயாதின் ஆள்கள் சவுலை அடக்கம் செய்தார்கள். என்று அவர் தாவீதிடம் கூறினர். |
5 | யாபேசு கிலயாதின் ஆள்களுக்கு தாவீது தூதுனுப்பி,”நீங்கள் உங்கள் தலைவர் சவுல் மீது அன்புகாட்டி அவரை அடக்கம் செய்தீர்கள். ஆண்டவரின் ஆசி பெறுவீர்களாக! |
6 | ஆண்டவர் உங்களுக்கு நிலையான அன்பும் அடக்கமும் காட்டுவாராக! நீங்கள் இவவாறு செய்ததால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன்! |
7 | வலிமைப் பெற்ற வீரர்களாக திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்: எனினும் யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர்”என்று கூறினார். |
8 | இதற்கிடையில் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்பேனர் சவுலின் மகன் இஸ்பொசேத்தை மகனயிமுக்கு அழைத்துச் சென்று |
9 | கிலயாது, அசூரி, இஸ்ரியேல், எப்;ராயிம், பென்யமின் மேலும் அனைத்து இஸ்ரயேல் மேலும் அவனை அரசனாக்கினான். |
10 | சவுலின் மகன் இஸ்பொசத்து இஸ்ரயேல் மீது அரசனாய் தொடங்கிய போது அவனுக்கு வயது நாற்பது. இரண்டு ஆண்டு அவன் அரசனாய் இருந்தான். ஆனால் யூதா குலமோ தாவீதை பின்பற்றியது. |
11 | தாவீது எபிரோனில் யூதா குலத்தின் மீது ஆட்சி புரிந்த காலம் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களுமே. |
12 | நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்பொசத்தின் பணியாளர்களும் மகனயிமியிலிருந்து புறப்பட்டுக் கிபயோனுக்குச் சென்றனர். |
13 | செரூயாவின் மகன் யோவாபும் தாவீதின் பணியாளர்களும் புறப்படடுச் சென்று அவர்களைக் கிபயோன் குளத்தருகே எதிர் கொண்டனர். ஒரு சாரார் இப்பக்கமும் மறுசாரார் அப்பக்கமும் குளத்தின் அருகே அமர்ந்தனர். |
14 | இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள் போர் செய்யட்டும் என்று அப்னேர் யோவாபிடம் கூறினார்.”அவர்கள் அவ்வாறே செய்யட்டும்”என்று யோவாபு கூறினான். |
15 | பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளர் பன்னிருவரும் எழுந்து வந்தனர். |
16 | ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம் என்று அழைத்தனர். |
17 | போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது, அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர். |
18 | அங்கே செரூயாவின் புதல்வர் யோவாபு, அபிசாய், அசாவேல் ஆகிய மூவரும் இருந்தனர். அசாவேல் காட்டு மான் போல் வேகமாக ஓடக் கூடியவன். |
19 | அசாவேல் அப்னோரை பின் தொடர்ந்து, வலமோ, இடமோ விலகாமல் துரத்தினான். |
20 | அப்னேர் பின்னால், திரும்பி அசாவேல் நீயா? என்று கேட்டான் நான் தான் என்று அவன் பதில் கூறினான். |
21 | வலமோ இடமோ விலகி இளைஞன் ஒருவனை பிடித்து, அவன் உடைமைகளை பிடுங்கிக் கொள்”என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால் அசாவேலுக்கு அவனை பின்தொடர்வதிலிருந்து விலகிவிட மனம் இல்லை. |
22 | “என்னை பின்தொடர்வதிலிருந்து விலகி விடு. நான் உன்னைக் குத்தி வீழ்த்த வேண்டும்? உன் சகோதரன் யோவாபுக்கு நான் எவ்வாறு முகத்தைக் காட்டுவேன்? என்று மீண்டும் அப்னேர் அசாவேலிடம் கூறினான். |
23 | ஆனால் அசாவேல் அதைக் கேட்காமல் தொடர்ந்தான் ஆகவே அப்னேர் அவனை ஈட்டியின் முனையால் அவன் வயிற்றில் குத்த, அது அவனை பின்னாக ஊடுருவியது. அந்த இடத்திலேயே அவன் விழுந்து இறந்தான். அசாவேல் விழுந்து இறந்த இடத்திற்கு வந்த அனைவரும் நிலைகுலைந்து நின்றனர். |
24 | பின் யோவாபுக்கு அபிசாயும் அப்னேரைப் பின் தொடர்ந்தனர். கிபயோன் பாலைநிலப் பாதையில் கீகுக்கு முன்பாக அம்மா மலையை அவர்கள் வந்தடைந்த போது கதிரவன் மறைந்துக் கொண்டிருந்தான். |
25 | அப்போது பென்யமின் ஆள்கள் அப்னேருக்கு பின் ஒரே படையாக நின்று ஒரு குன்றின் உச்சியில் நின்றனர். |
26 | அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு,”வாளுக்கு இரை கொடுக்க வேண்டுமா? முடிவு கசப்பாக இருக்கும் நீ அறிவாயா? தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் திரும்பச் செல்லுமாறு மக்களிடம் நீ சொல்ல மாட்டாயோ? என்று கூறினான். |
27 | அதற்கு யோவாபு வாழும் கடவுள் மேலும் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள்; என்று கூறி, |
28 | எக்காளம் ஊதினான். அனைத்து மக்களும் நின்றனர். அதற்கு மேல் அவர்கள் இஸ்ரயேலை பின்தொடவில்லை. போரிடவுமில்லை. |
29 | அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் கடந்து மகனயிமை அடைந்தார். |
30 | யோவாபு அப்னேரைப் பின்தொடர்வதினின்று திரும்பியபின் தன் ஆள்கள் அனைவரையும் ஒன்று திராட்டினான். அசாவேல் நீங்கலாக, தாவீதின் பணியாளர்களும் பத்தொன்பது பேரைக் காணவில்லை. |
31 | தாவீதின் பணியாளர்களோ அப்னேரின் ஆள்களான முந்நூற்று அறுபது பென்யமினியரைக் கொன்றிருந்தனர். |
32 | அவர்கள் அசாவேலின் சடலத்தைத் தூக்கி வந்து பெத்லகேமிலிருந்த அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். யோவாபும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து, பொழுது புலர்ந்ததும் எபிரோனை அடைந்தனர். |