1 | சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்து திரும்புகையில் தாவீது சிக்லாவில் இரண்டு நாள் தங்கினார். |
2 | மூன்றாம் நாள், சவுலின் பாசறையிலிருந்து கிழிந்த ஆடைகளோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான். |
3 | “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று தாவீது அவனை வினவ, “நான் இஸ்ரயேல் பாசறையிலிருந்து தப்பி வந்துவிட்டேன்” என்று அவன் பதில் கூறினான். |
4 | “என்ன நடந்தது?” என்னிடம் சொல், என்று தாவீது கேட்க, “அவன் வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்: அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்: சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துமடிந்துவிட்டனர்” என்று கூறினான். |
5 | சவுலும் அவனுடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்? என்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார். |
6 | அதற்கு அந்த அளைஞன் நான், “தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின் மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர். |
7 | அவர் பின்னால் திரும்பிய போது என்னை பார்த்து கூப்பிட்டார், “இதோ இருக்கிறேன்” என்று நான் கூறினேன். |
8 | “யார் நீ?” என்று அவர் என்னை வினவ, “நான் ஓர் அமலேக்கியன்”என்று பதிலளித்தான். |
9 | என்மீது நின்று,”என்னைக் கொல், ஏனெனில் நான் மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால் என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுயிருக்கிறது” என்று அவர் என்னிடம் கூறினார். |
10 | நான் அவர் மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில் விழுந்த பின்பு அவர் பிழைக்கமாட்டார் என நான் அறிவேன். அவர் தலையிலிருந்த மகுடத்தையும் பையிலிருந்த காப்பையும் எடுத்துக் கொண்டு, உம்மிடம் வந்துள்ளேன்”என்று கூறினார். |
11 | தாவீது தம் ஆடைகளை பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். |
12 | சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்லயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்க்ள. |
13 | தாவீது தமக்கு செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று மீண்டும் வினவ, “நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன்” என்று மறுமொழிக் கூறினான். |
14 | “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்?” என்று தாவீது அவனைக் கேட்டார். |
15 | பின்பு தாவீது, “இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டுபோ, அவனை வெட்டு”என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான். |
16 | “இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன் என்ற உன் வாயே எனக்கு சான்று சொல்லிவிட்டது”என்று தாவீது அவனை நோக்கி கூறினார். |
17 | பிறகு தாவீது சவுலையும் அவருடைய மகள் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்ற பாடினார். |
18 | யூதாவின் மக்களுக்கும் இது கற்ப்பிக்கப்பட வேண்டும் என்ற யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள வில்லலின் பாடல் : |
19 | “இஸ்ரயேல்! உனது மாட்சி உனது மலைகளிலே மாண்டு கிடக்கிறதா! மாவீரர் எவ்வாறு மடிந்தார்! |
20 | காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்: அஸ்கலோன் பகுதிகளில் இதை அறிவிக்கப்பட வேண்டாம்: ஏனெனில், பெலிஸ்தியரின் மனைவிகள் அகமகிழக்கூடாது: விருத்தசேதனமற்றோரின் புதல்வியர் ஆர்ப்பரிக்கக்கூடாது. |
21 | கில்போவா மலைகளே! பனியோ மழையோ உம்மீது பொழியாதிருப்பதாக! வயல்கள் முதற்கனிகளை தராதிருப்பனவாக! ஏனெனில் வீரர்கள் கேடயங்கள் தீட்டப்பட்டனவே! சவுலின் கேடயங்கள் எண்ணெயால் மெருகு பெறாதே! |
22 | வீழ்த்தப்பட்டோரின் இரத்தத்தினின்றும் வீரர்களின் கொழுப்பினின்றும் யோனத்தானின் அம்பு பின் வாங்கியதும் இல்லை! |
23 | சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருள்வுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வார்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்! |
24 | இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே! |
25 | போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்த்தபட்டனர்!உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்! |
26 | சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உள்ளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது அளித்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலை மிஞ்சியது அன்றோ! |
27 | மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழித்தன! |