1 | பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும் |
2 | செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது: |
3 | பாரோஷின் வம்சத்தார் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர். |
4 | செபத்தியாவின் வம்சத்தார் முந்நூற்று எழுபத்திரண்டுபேர். |
5 | ஆராகின் வம்சத்தார் எழுநூற்று எழுபத்தைந்துபேர். |
6 | யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர். |
7 | ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர். |
8 | சத்தூவின் வம்சத்தார் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர். |
9 | சக்காயின் வம்சத்தார் எழுநூற்று அறுபதுபேர். |
10 | பானியின் வம்சத்தார் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர். |
11 | பெபாயின் வம்சத்தார் அறுநூற்று இருபத்துமூன்றுபேர். |
12 | அஸ்காதின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர். |
13 | அதோனிகாமின் வம்சத்தார் அறுநூற்று அறுபத்தாறுபேர். |
14 | பிக்வாயின் வம்சத்தார் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர். |
15 | ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர். |
16 | எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் தொண்ணூற்றெட்டுப்பேர். |
17 | பேசாயின் வம்சத்தார் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். |
18 | யோராகின் வம்சத்தார் நூற்றுப் பன்னிரண்டுபேர். |
19 | ஆசூமின் வம்சத்தார் இருநூற்று இருபத்துமூன்றுபேர். |
20 | கிபாரின் வம்சத்தார் தொண்ணூற்றைந்துபேர். |
21 | பெத்லகேமின் வம்சத்தார் நூற்றிருபத்துமூன்றுபேர். |
22 | நெத்தோபாவின் மனிதர்கள் ஐம்பத்தாறுபேர். |
23 | ஆனதோத்தின் மனிதர்கள் நூற்றிருபத்தெட்டுபேர். |
24 | அஸ்மாவேத்தின் வம்சத்தார் நாற்பத்திரண்டுபேர். |
25 | கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். |
26 | ராமா, காபா என்பவைகளின் வம்சத்தார் அறுநூற்று இருபத்தொருபேர். |
27 | மிக்மாசின் மனிதர்கள் நூற்றிருபத்திரண்டுபேர். |
28 | பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் இருநூற்று இருபத்துமூன்றுபேர். |
29 | நேபோவின் வம்சத்தார் ஐம்பத்திரண்டுபேர். |
30 | மக்பீஷின் வம்சத்தார் நூற்றைம்பத்தாறுபேர். |
31 | மற்ற ஏலாமின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர். |
32 | ஆரீமின் வம்சத்தார் முந்நூற்றுஇருபதுபேர். |
33 | லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் எழுநூற்று இருபத்தைந்துபேர். |
34 | எரிகோவின் வம்சத்தார் முந்நூற்று நாற்பத்தைந்துபேர். |
35 | சேனாகின் வம்சத்தார் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர். |
36 | ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர். |
37 | இம்மேரின் வம்சத்தார் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர். |
38 | பஸ்கூரின் வம்சத்தார் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர். |
39 | ஆரீமின் வம்சத்தார் ஆயிரத்து பதினேழுபேர். |
40 | லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் எழுபத்து நான்குபேர். |
41 | பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் நூற்றிருபத்தெட்டுப்பேர். |
42 | வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர். |
43 | நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார் |
44 | கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார் |
45 | லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார் |
46 | ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார் |
47 | கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார் |
48 | ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார் |
49 | ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார் |
50 | அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார் |
51 | பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார் |
52 | பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார் |
53 | பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார் |
54 | நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே. |
55 | சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார் |
56 | யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார் |
57 | செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே. |
58 | நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். |
59 | தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்: |
60 | தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். |
61 | ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே. |
62 | இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். |
63 | ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். |
64 | சபையார் எல்லோரும் ஏகத்திற்கு நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். |
65 | அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். |
66 | அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து |
67 | அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது. |
68 | வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். |
69 | அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசுகளையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள். |
70 | ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள். |