WCV

ஏசாயா அத்தியாயம் 25
ஆண்டவரே, நீரே என் கடவுள்: நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்: உன் பெயரைப் போற்றுவேன்: நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்: நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர்.
ஏனெனில், நீ நகரத்தைக் கற்குவியலாக்கினீர்: அரண்சூழ்ந்த பட்டணத்தைப் பாழடையச் செய்தீர்: அயல் நாட்டினரின் கோட்டை அது: இனி நகராய் இராது: என்றுமே கட்டி எழுப்பப்படாது.
ஆதலால் வலிமைமிகு மக்களினம் உம்மைப் பெருமைப்படுத்தும்: முரடரான வேற்றின நகரத்தினர் உமக்கு அஞ்சுவர்.
ஏழைகளுக்கு நீர் அரணாய் இருக்கின்றீர்: வறியவனுக்கு அவன் துன்பத்தில் உறைவிடம் நீரே: புயற்காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்: ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிற்சுவரை மோதித் தாக்கும் பெரும் புயல் போலும்,
வறண்ட நிலத்தில் வெப்பம் போலும் இருக்கும். கார்மேக நிழல் வெயிலைத் தணிப்பது போல் அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடங்கச் செய்கின்றீர்: முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.
படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்: அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.
மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்: பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.
என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்: என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்: தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்: ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.
அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: இவரே நம் கடவுள்: இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்: இவர் நம்மை விடுவிப்பார்: இவரே ஆண்டவர்: இவருக்காகவே நாம் காத்திருந்தோம்: இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.”
ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்: எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல், மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.
நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபு தன் கைகளை விரிப்பான்: ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும் கைவினைச் செயல்களையும் விழச் செய்வார்.
வானாளவ உயர்ந்துநிற்கும் உன் அரண்களை அவர் விழத் தள்ளி, தரைமட்டமாக்குவார்: அவை புழுதியோடு புழுதியாகி மண்ணோடு மண்ணாகும்.