WCV

நீதிமொழிகள் அத்தியாயம் 31
மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்: இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்:
பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.
உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செவழித்துவிடாதே: அரசரை அழிப்பவர்களை அணுகாதே.
இலமுவேலே, கேள், அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது: அது அரசருக்கு அடுத்ததன்று: வெறியூட்டும் மதுவை ஆட்சியாளர் அருந்தலாகாது.
அருந்தினால், சட்டத்தை மறந்து விடுவார்கள்: துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.
ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு: மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு.
அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்: தங்கள் துன்பத்தை நினையாதிருக்கட்டும்.
பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு: திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக்காகவும் போராடு.
அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு: எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.
திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது: அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.
அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்: அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.
அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்: ஒரு நாளும் தீங்கு நினையாள்.
கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்: தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.
அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிடலாம்: அவள் உணவுப் பொருள்களைத் தொலையிலிருந்து வாங்கி வருவாள்.
வைகறையில் துயிலெழுவாள்: வீட்டாருக்கு உணவு சமைப்பாள்: வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.
ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்: தன் ஊதியத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.
சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்: அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.
தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்: அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.
இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்: நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.
எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.
குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது: ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.
தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்: அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.
அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்: மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.
அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்: வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை விற்பனை செய்வாள்.
அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்: வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள்.
அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்: அன்போடு அநிவரை கூறுவாள்.
தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்: உணவுக்காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பியிருக்கமாட்டாள்.
அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என் வாழ்த்துவார்கள்: அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.
“திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு: அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே” என்று அவன் சொல்வான்.
எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்: ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.
அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்: அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.