WCV

சங்கீதம் அத்தியாயம் 75
உமக்கு நன்றி செலுத்துகின்றோம்: கடவுளே, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்: உமது பெயரைப் போற்றுகின்றோம்: உம் வியத்தகு செயல்களை எடுத்துரைக்கின்றோம்.
நான் தகுந்த வேளையைத் தேர்ந்துகோண்டு, நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.
உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும் நிலைகுலைந்து போகலாம்: ஆனால், நான் அதன் தூண்களை உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)
வீண் பெருமை கொள்வோரிடம், 'வீண் பெருமை கொள்ள வேண்டாம்' எனவும் பொல்லாரிடம், 'உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்:
உங்கள் ஆற்றலைச் சிறிதளவும் காட்டிக்கொள்ள வேண்டாம்: தலையை ஆட்டி இறுமாப்புடன் பேச வேண்டாம்:' எனவும் சொல்வேன்.
கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ, பாலைவெளியிலிருந்தோ, மலைகளிலிருந்தோ, உங்களுக்கு எதுவும் வராது.
ஆனால், கடவுளிடமிருந்தே தீர்ப்பு வரும்: அவரே ஒருவரைத் தாழ்த்துகின்றார்: இன்னொருவரை உயர்த்துகின்றார்.
ஏனெனில், மதிமயக்கும் மருந்து கலந்த திராட்சை மது பொங்கிவழியும் ஒரு பாத்திரம் ஆண்டவர் கையில் இருக்கின்றது: அதிலிருந்து அவர் மதுவை ஊற்றுவார்: உலகிலுள்ள பொல்லார் அனைவரும் அதை முற்றிலும் உறிஞ்சிக் குடித்துவிடுவர்.
நானோ எந்நாளும் மகிழ்திருப்பேன்: யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்:
பொல்லாரை அவர் வலிமை இழக்கச் செய்வார்: நேர்மையாளரின் ஆற்றலோ உயர்வுபெறும்.