WCV

சங்கீதம் அத்தியாயம் 26
ஆண்டவரே, நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும்: ஏனெனில், என் நடத்தை நேர்மையானது: நான் ஆண்டவரை நம்பினேன்: நான் தடுமாறவில்லை.
ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்: என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்:
ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது: உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.
பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை: வஞ்சகரோடு நான் சேர்வதில்லை.
தீயோரின் மன்றத்தை நான் வெறுக்கின்றேன்: பொல்லாரின் நடுவில் நான் அமர்வதில்லை.
மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்: ஆண்டவரே, உம் பலிபீடத்தை வலம் வருவேன்.
உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்: வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்:
ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்பிகின்றேன்: உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்:
பாவிகளுக்குச் செய்வது போல் என் உயிரைப் பறித்துவிடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்!
அவர்கள் கைகளில் தீச்செயல்கள்: அவர்கள் வலக்கையில் நிறையக் கையூட்டு.
நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்: என்னை மீட்டருளும்: எனக்கு இரங்கியருளும்.
என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன: மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.