WCV

சங்கீதம் அத்தியாயம் 16
இறைவா, என்னைக் காத்தருளும்: உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்: உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்.
பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.
வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்: அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்து கொள்ளேன்: அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்.
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து: அவரே என் கிண்ணம்: எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே:
இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன: உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்: இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே, நான் அசைவுறேன்.
என் இதயம் அக்களிக்கின்றது: என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது: என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்: உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு: உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.