IRV

எசேக்கியேல் அத்தியாயம் 15
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
மனிதகுமாரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
இதோ, அது நெருப்பிற்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் நெருப்பு எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?
இதோ, அது வேகாமல் இருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாமல் இருக்க, நெருப்பு அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவது எப்படி?
ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள் இருக்கிற திராட்சைச்செடியை நான் நெருப்பிற்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து
என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
அவர்கள் துரோகம்செய்தபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.