IRV

சங்கீதம் அத்தியாயம் 70
நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல் தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக.
ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்; தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்: நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதிக்காமலிரும்.