IRV

சங்கீதம் அத்தியாயம் 16
தாவீதின் மிக்தாம் என்னும் பாடல் தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.
அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
கர்த்தர் என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர்.
நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.
எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை.
வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.