ERV

சங்கீதம் அத்தியாயம் 51
தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும். என் பாவங்களை அழித்துவிடும்.
தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். என் பாவங்களைக் கழுவிவிடும். என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!
நான் பாவம் செய்தேனென அறிவேன். அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன்.
நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன். தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் தவறு செய்தவன் என் பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக் கையிடுகிறேன். உமது முடிவுகள் நியாயமா னைவை.
நான் பாவத்தில் பிறந்தேன். என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.
தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால் உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும்.
ஈசோப் செடியால் என்னைத் தூய்மையாக்கும். பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சி யாக இருக்கும் வகையைக் கூறும். நீர் நொறுக் கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடை யட்டும்.
எனது பாவங்களைப் பாராதேயும்! அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்
தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத் தைச் சிருஷ்டியும்! எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
என்னைத் தூரத் தள்ளாதேயும்! என்னிடமி ருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடா தேயும்!
உமது உதவி என்னை மகிழ்விக்கிறது! மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும். எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப் படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக் குப் போதிப்பேன், அவர்கள் உம்மிடம் திரும்பு வார்கள்.
தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக் காதேயும். என் தேவனே, நீரே எனது மீட்பர். நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும்.
என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
நீர் பலிகளை விரும்பவில்லை. நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே. தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருத யத்தோடு உம்மிடம்வருபவரை நீர் தள்ளிவிட மாட்டீர்.
தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்க முடையவராகவும் இரும். எருசலேமின் சுவர் களை எழுப்பும்.
அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும். ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.