ERV

சங்கீதம் அத்தியாயம் 13
கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்? என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர். என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்? எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?
எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்! எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்! இல்லையெனில் நான் மடிவேன்.
அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான். என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.
கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன். நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.