ERV

சங்கீதம் அத்தியாயம் 129
என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர். இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல்.
என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர். ஆனால் அவர்கள் என்னை மேற்கொள்ளவில்லை.
என் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்படும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள். எனக்கு நீளமான, ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
ஆனால் நல்லவராகியக் கர்த்தர் கயிறுகளை அறுத்துக் கொடியோரிடமிருந்து என்னை விடுவித்தார்.
சீயோனை வெறுத்த ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்கள் போரிடுவதை நிறுத்தி, ஓடிப்போய்விட்டார்கள்.
அவர்கள் கூரையின் மேலுள்ள புல்லைப் போன்றவர்கள். வளரும் முன்னே அப்புல் வாடிப்போகும்.
ஒரு வேலையாளுக்கு ஒரு கை நிரம்ப அந்த புல் கிடைக்காது. ஒரு குவியல் தானியமும் கிடைப்பதில்லை.
அவர்களருகே நடக்கும் ஜனங்கள், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறமாட்டார்கள். ஜனங்கள், “கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள்.