தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்
- தமிழ் வேதாகமத்திலுள்ள (BSI - பழைய பதிப்பு) அர்த்தம் புரியாத வார்த்தைகளைத் தொகுத்து அதற்கான பொருளை வாசகர்களின் வசதிக்காக இங்கே கொடுத்திருக்கிறோம். மேலும் நமது தளத்தில் கடின வார்த்தைகள் நீக்கப்பட்ட திருத்திய இந்திய பதிப்பையும் (IRV), புதிதாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள எளிய வாசிப்பு பதிப்பையும் (ERV) வெளியிட்டிருக்கிறோம். இந்த வேதாகமங்களுடன் ஒப்பிட்டு படித்தும், அர்த்தம் புரியாத வார்த்தைகளின் பொருளை அறிந்துக்கொள்ளலாம்!
கடின வார்த்தை | பொருள் | வசன முகவரி |
---|---|---|
அகணிநார் | நரம்புக் கயிறு, நார்க்கயிறு | நியா 16:7,8 |
அகத்தியம் | கட்டாயம் | எண் 18:15, எஸ் 4:8, லூக் 14:18 |
அகாதமான | ஆழமான படுகுழி | ஏசா 14:15 |
அசங்கியம் | அருவருப்பு | எஸ் 9:11 |
அசம்பி | உடல் | 1சாமு 21:5 |
அசறு | சொறி, சிரங்கு | லேவி 13:6-8; 14:56; 21:20 |
அசனம் | உணவு | 2சாமு 9:11,13; 12:21 |
அசுப்பிலே | திடீரென்று | யோபு 9:23; 22:10; எரே 4:20 |
அசுப்பீம் வீடு | பண்டக சாலை | 1நாளா 26:15,17 |
அசூசம் | தீட்டு | புல 1:9 |
அஞ்சனம் | மந்திரவாதம் | உபா 18:10 |
அஞ்சிக்கை | நடுக்கம், அச்சம் | ஓசி 3:5 |
அடைப்பம் | பை | 1சாமு 17:40,49 |
அநாதி | நித்தியமான, முடிவற்ற | உபா 33:27 |
அநுக்கிரகம் | கருணை | ஆதி 19:21 |
அபரஞ்சிப் பூஷணம் | பசும்பொன், ஆபரணம் | நீதி 25:12 |
அபேட்சை | விருப்பம், எதிர்பார்ப்பு | 1சாமு 9:20; யோபு 34:36; நீதி 10:28; 11:7 |
அப்போஸ்தலர் | திருத்தூதுவர் | மாற் 6:30 |
அமஞ்சிவேலை | அடிமை வேலை | 1ராஜா 5:13,14; 9:21 |
அமரிக்கை | அமைதி | ஏசா 32:17 |
அம்பறாத்தூணி | அம்புகளை வைக்கும் கூடு | ஆதி 27:3; சங் 127:5 |
அம்பாயம் | வலி | ஏசா 26:17; மீகா 4:10 |
அம்பாரம் | பெரும் குவியல் | 2நாளா 31:10; உன் 7:2 |
அயனம் | கிரகணங்கள் சுற்றும் பாதை | நியா 5:20 |
அயுக்தம் | அறிவற்ற விவாதம் | 2தீமோ 2:23 |
அரணிப்பானது | உறுதியானது | எண் 13:28; 21:24; 24:21 |
அரதேசி | அகதி, அந்நியர் | 1நாளா 29:15 |
அரிபிளவை | புற்றுநோய், தசை அழுகல் | 2தீமோ 2:17 |
அருக்களிப்பு | பயமுறுத்துதல் | யோபு 3:5 |
அருண்டு | திடீரென்று | ரூத் 3:8 |
அர்ப்பிதம் | புனிதமான | எசே 45:1; 48:8-10,12,18,20,21 |
அல்லத்தட்டுதல் | புறக்கணித்தல் | சங் 141:5 |
அவயங்காத்தல் | அடை காத்தல் | எரே 17:11 |
அவிழ்தம் | மருந்து | எரே 46:11; எசே 47:12 |
அழிம்பு | அழிவு | எரே 6:7, 2சாமு 14:11, தானி 8:24 |
அழுங்கு | அறனை அகழெலி | லேவி 11:30 |
அளகபாரம் | கூந்தல் | உன் 6:5 |
அறுதி | நிரந்தரம் | லேவி 25:23 |
அறுமீன் | கார்த்திகை விண்மீன் | யோபு 9:9; 38:31 |
அஸ்தகடகம் | கழுத்து பொற் சங்கலிகள் | யாத் 35:22; எண் 31:50; 2சாமு 1:10; ஏசா 3:19 |
அஸ்திராயுதம் | படைக்கருவி | எரே 50:25; 51:20 |
அஸ்வங்கள் | குதிரைகள் | எரே 8:16 |
ஆகடியம் | ஏளனம் | நீதி 1:26,27; 6:12; எசே 25:6; ஆப 1:10 |
ஆகாமியம் | தீயகுணம், தீமை, பொல்லாங்கு | நீதி 4:17 |
ஆக்கினை | தண்டனை | யாத் 21:28 |
ஆசாரங்கள் | மரபுகள், ஒழுங்குகள் | மாற் 7:4 |
ஆணம் | கறிக்குழம்பு | நியா 6:19,20; ஏசா 65:4 |
ஆதியோடந்தம் | தொடக்கமுதல் இறுதிவரை | 1நாளா 29:29 |
ஆதீனம் | உடைமை | ஆதி 47:19, அப் 1:7 |
ஆயம் | வரி | எஸ் 7:24 |
ஆயுததாரி | படைக்கலன் தாங்குபவர் | 1சாமு 16:21 |
ஆரங்கள் | அணிகலன்கள் | யாத் 35:22; உன் 1:10 |
ஆவலாதி | புகார் பழிச்சொல் | உபா 22:14,17 |
ஆளோட்டி | வேலை வாங்கும் அதிகாரி | யாத் 3:7; 5:6,10,13,14 |
இடும்பு | ஆணவம் | யாத் 18:11 |
இதமியம் | மகிழ்ச்சி | நியா 18:20 |
இரட்டைப்புரை | தடிமனான | நீதி 31:21 |
இரண்டகம் | கலகம். புரட்சி | யோசு 22:19,22 |
இரத்தாம்பரச் சிவப்பு | கருஞ்சிவப்பு | ஏசா 1:18 |
இராமாறு | இரவுக்காவல் | நெகே 4:22 |
இல்லாள் | உரிமை மனைவி | நீதி 30:23 |
இளக்கரிப்பு | சோர்வு | யோபு 23:16; ஏசா 42:4 |
ஈளை | உருக்கு நோய் | லேவி 26:16; உபா 28:22 |
ஈனம் | பழிப்பு | ரூத் 2:15 |
உக்கல் | உளுத்துபோன, கெட்டுப்போன | ஆப 3:16 |
உக்கிரம் | கோபக்கனல் | ஆதி 31:36; உபா 9:19 |
உக்கிரானகாரன் | மேற்பார்வையாளர் | 1ராஜா 16:9 |
உசாவுதுணை | அறிவுரை | யோபு 26:3 |
உச்சிதங்கள் | அரும்பொருள்கள் | 2ராஜா 8:9 |
உச்சிதங்கள் | அன்பளிப்புகள் | ஆதி 24:53 |
உடுமானம் | ஆடை | எரே 10:9 |
உத்தண்டம் | கட்டாயபடுத்துதல் | எசே 45:9 |
உத்தரமண்டலம் | வடபுறம் | யோபு 26:7 |
உத்தரித்தல் | எதிர்த்து நிற்பது | யோபு 31:23 |
உபாதி | துன்பம் | யாத் 32:35 |
உபாயம் | தந்திரம், சூழ்ச்சி | யாத் 1:10 |
உம்பிளிக்கை | உரிமை சொத்து | எஸ் 9:12 |
உருட்சியான | தட்டையான | யாத் 16:14 |
உளுப்பு | உளுப்பு பூச்சி | ஒசி 5:12 |
உளைவு | வலி | ஏசா 21:3 |
உறுமால் | கைக் குட்டை | அப் 19:12 |
ஊத்தை | அழுக்கு | செப் 3:1 |
எத்தனம் | முயற்சி | அப் 9:29 |
எத்தனாய் | ஏமாற்றுக்காரனாய் | ஆதி 27:12 |
எரிபந்தம் | கொப்புளம் | உபா 28:22 |
எறிவல்லயம் | எறியும் வில் | யோபு 41:7 |
ஏங்கல் | பெரும்மூச்சி | சங் 38:9; 119:131 |
ஏபோத்து | மேல் ஆடை | 1சாமு 2:18 |
ஒலிமுக வாசல் | கோட்டைக் கதவு | ரூத் 4:11 |
ஒளஷதம் | மருந்து | நீதி 16:24 |
ஒற்தலாம் | புதினா | மத் 23:23; லூக் 11:42 |
ஓரிகள் | நரிகள் | ஏசா 13:22; 34:14 |
கடல் சஞ்சாரி | கடற்கரை தலைவர்கள் | எசே 26:17 |
கடாட்சம் | கருணை | உன் 8:10 |
கடாட்சித்தார் | கண்ணோக்கினார் | யோபு 2:18 |
கடுக்கன் | காதணி | நியா 8:24 |
கட்கம் | வாள் | நீதி 25:18; 30:14 |
கட்டியக்காரன் | அறிவிக்கும் தூதன் | தானி 3:4 |
கணங்கள் | சிலைகள் | ஏசா 57:13 |
கந்தவர்க்கங்கள் | நறுமனப் பொருட்கள் | 1ராஜா 10:10 |
கந்தாயத்து | முதலில் பழுத்த | எரே 24:2; ஆமோ 7:1 |
கப்பிகள் | தீவனம் | ஏசா 30:24 |
கப்புக்கவர் | அரிவாள் | ஏசா 18:5 |
கப்புச்சுவர் | செடியின் குருத்து, தழைகள் | ஏசா 18:5 |
கம்மாளா | கைவினைஞர் | 1நாளா 29:4 |
கரிகறுத்தல் | துக்கத்தினால் கறுத்துப்போனேன் | எரே 8:21; 14:2 |
கரிய போளம் | வாசனைப் பொருள் | யோவா 19:39 |
கருக்காய் | அம்மை நோய் | உபா 28:22 |
கருக்கான | கூர்மையான | யாத் 4:25; யோசு 5:2 |
கர்த்தத்துவம் | ஆட்சி | ஏசா 9:6; தானி 4:22 |
கலாதி | கலகங்கள் | எஸ் 4:15 |
கலிக்கம் | மருந்து | வெளி 3:18 |
கல்தச்சர் | கொத்தர் | 1நாளா 14:1 |
கவுதாரி | காட்டுக்கோழி | 1சாமு 26:20; எரே 17:11 |
கழலை | கழிச்சல் நோய் | லேவி 22:22 |
கழுந்துகள் | பொறுத்தும் பகுதிகள் | யாத் 26:17,19; 36:22,24 |
கறளை | காட்டுகழுதை | எரே 17:6; 48:6 |
கனதி | தடிம அளவு | 1சாமு 17:7; 1நாளா 11:23 |
கஜானா | பண்டகச்சாலை | எஸ்தர் 3:9; 4:7; 5:17; 6:1; 7:20 |
காங்கை | வெயில் | ஏசா 25:5 |
காடி | புளிப்பு | சங் 69:21 |
காணியாட்சி | நிலப்பகுதி | லேவி 25:10 |
காய்மகாரம் | பொறாமைக்கண் | 1சாமு 18:9 |
காளவாய் | சூளை | உபா 4:20 |
கிடாரி | இளம் பசு | ஆதி 15:9 |
கிரணம் | ஒளிக்கதிர் | ஆப 3:4 |
கிராதி | ஜன்னல், பலகணி, பின்னல் தட்டி | 2ராஜா 1:2; உன் 2:9 |
கிரியிருப்பவர்கள் | பிணைக்கைதிகள் | 2ராஜா 14:14; 2நாளா 25:24 |
கிர்த்தியங்கள் | தீய செயல்பாடுகள் | நியா 2:19 |
கிலேசம் | துயரம் | ரூத் 1:21 |
குச்சு | சிறிய இடம் | ஏசா 1:8 |
குடாக்கள் | துறைமுகப் பகுதி | நியா 5:17 |
குலாரிவண்டில் | மூடுபல்லக்கு | ஏசா 66:20 |
குறுணி | ஒரு மரக்கால் | ஏசா 5:10 |
கூகை | பருந்து | லேவி 11:16; உபா 14:15 |
கூளிகள் | பருந்துகள் | ஏசாயா 34:15 |
கெடி | திகில், அச்சம் பயங்கரம் | தானி 7:7 |
கெவுனி | மதில்சுவர் | 2சாமு 18:24,33 |
கைத்தாய் | செவிலித்தாய் | ஏசா 49:23 |
கொடிமாசி | மேகம் | யோபு 38:37 |
கொண்டல் காற்று | கீழ் காற்று | யோபு 15:2; 27:21 |
கொம்மை | காம்பு பிடிகள் | 1ராஜா 7:30,34 |
கொம்மை | காவல் கோபுரம் | நெகே 3:1,11,25,26,27 |
கொளுவகிறான் | உருவாக்குகிறான் | நீதி 29:22 |
கொறுக்கை | கோரைபுல் | ஏசா 19:6 |
கோராவாரி | சூறாவளி | எரே 30:23 |
கோரி | சமாதி | யோபு 21:32 |
கோளிகை கழுதை | பெண் கழுதை | ஆதி 12:16; 32:15; 45:23; 49:11 |
சக்கந்தம் | ஏளனம் | நெகே 4:1 |
சக்கராகாரம் | வளைவான விழிம்பு, வட்ட வடிவம் | 2நாளா 4:2 |
சதிசர்பனை | கைவினைச் செயல் | ஏசா 25:11 |
சப்பரம் | தேர், பல்லக்கு | ஆமோஸ் 5:26 |
சமஸ்த | அனைத்து | எண் 1:50 |
சம்பாரம் | நறுமணப் பொருள் | எசே 24:10; 27:22 |
சம்பாஷணை | உரையாடல் | லூக்கா 9:30 |
சம்பிரதி | நகர ஆணையர், செயலர், எழுத்தர் | அபோ 19:35 |
சரப்பணி | தங்கச்சங்கிலி | ஆதி 41:42; நியா 8:26 |
சருவம் | அண்டா | 1சாமு 2:14 |
சர்ப்பனை | சதி சூழ்ச்சி | அப் 23:16,30 |
சலக்கரணை | அரசியல் குற்ற மன்னிப்பு | 2இராஜா 4:13; எஸ் 2:18 |
சல்லடங்கள் | கால் சட்டைகள் | யாத் 28:42; 39:28 |
சன்னதக்காரன் | சூன்யம் செய்பவர் | உபா 18:11, ஏசா 19:3 |
சன்னதம் | திருவுளம் | 1இராஜா 18:29; 2இராஜா 16:15 |
சன்னது | ஆவண மடல் | எஸ்ரா 8:36 |
சன்னது | ஆவணம் | எஸ்றா 7:11, 8:36 |
சாக்குருவி | ஆந்தை | ஏசா 34:14 |
சாங்கோபாகம் | பாதுகாப்பு, நலம் | யோபு 8:6; 12:6 |
சாந்துக் காறை | இளம்பிறை அணிகலன் | நியா 8:21 |
சாமக்கூட்டண்டை | காவல்மேடு | 2நாளா 20:24 |
சாமாசி | மத்தியஸ்தன் | யோபு 33:23 |
சாலகம் | கால்வாய் வாய் | 2சாமு 5:8; 2இரா 18:17; 20:20 |
சாவதானம் | கவனம் | யோசு 22:5; 2நாளா 33:8 |
சித்திக்காது | வெற்றியடையாது | 2நாளா 13:12 |
சிரபூஷணம் | தலை அணிகலன்கள் | ஏசா 3:20 |
சிறங்கை | கைப்பிடி அளவு | எசே 13:19 |
சீதளம் | குளிர் | ஆதி 8:22 |
சீரிஷம் | மார்கழி விண்மீன் | யோபு 9:9; 38:31 |
சுட்டிகள் | நெற்றி அணிகலன்கள் | ஏசா 3:18 |
சுமுத்திரையான | சரியான அளவுள்ள | லேவி 19:36; நீதி 11:1 |
சுயாதீனம் | தன்னுரிமை | 1 கொரி 10:29 |
சூதகம் | மாதவிலக்கு | லேவி 21:10, 18:19 |
சேர்வைக்காரர் | படைத்தலைவர் | 2ராஜா 10:25 |
சேஷ்ட புத்திரபாகம் | தலைமகன் உரிமை | ஆதி 25:31,32 |
சோரமார்க்கமாய் | கள்ளத்தனமான | யாத் 34:15,16; லேவி 17:7 |
தகசுத்தோல் | வெள்ளாட்டு தோல் | யாத் 25:5 |
தண்டுகள் | படைப்பிரிவுகள், கொள்ளைக்கூட்டத்தினர் | 2ராஜா 5:2; 13:20 |
தத்தமாக | பரிசாக | எண் 8:19; 18:6,7 |
தர்ப்பணம் | கண்ணாடி | யாத் 38.8 |
தவனம் | தாகம் | 2சாமு 17:29 |
தழுவணை | காப்புக்கயிறு | எசே 13:18 |
தளவரிசை | நடை மேடை | எசே 42:3 |
தஸ்திர அறை | பத்திர அறை | எஸ்ரா 6:1 |
தாணையம் | எல்லைக்காவல் | 1சாமு 10:5 |
தாணையம் | படைத்தளம் | 2சாமு 23:14 |
தாளடி | வைக்கோல் | யாத் 5:12, யோபு 39:21 |
தாற்பரியம் | உட்பொருள் | எசே 17:12 |
திரணை | தோரணம் | யாத் 25:11,24,25 |
திரவிய சம்பன்னன் | செல்வந்தன் | பிர 2:9; வெளி 3:17 |
திரிகை | மாவரைக்கும் கல் | உபா 24:6; எரே 18:3; லூக் 17:35 |
துண்டரிக்கக்ககாரன் | கொடூரக்காரன் | தானி 11:14 |
துபாசி | மொழிபெயர்பாளர் | ஆதி 42:23 |
துராகிருதன் | தீச்செயல் புரிபவன் | 1சாமு 25:3 |
துரிசாய் | விரைவாக | எஸ்றா 5:8 |
துரிஞ்சில் | வெளவால் | ஏசா 2:21 |
துருத்தி | தோல் பை | ஆதி 21:14 |
துரைத்தனம் | அதிகாரம், ஆதிக்கம் | ஆதி 37:8; 2சாமு 23:3 |
துர்ச்சனப்பிரவாகம் | அழிவின் சூழல்கள் | 2சாமு 22:5 |
துலக்கம் | பளபளக்கும் | ஏசா 49:2 |
துன்னாள் | துன்பப்பட்டவன் | யோபு 30:25 |
தூபஸ்தம்பம் | புகைத்தூண் | உன் 3:6 |
தூலம் | இருப்புக்கோல் | ஏசா 28:27 |
தெற்றுகள் | பாசறை | ஏசா 29:3 |
தொந்தம் | நெருங்கிய உள்ளன்பு | நீதி 18:24 |
தொழுங்கு | குலை | உன் 7:7 |
நடைகாவணங்கள் | கூந்தலின் சுருள்கள் | உன் 7:5 |
நமுட்டு | நாரை, சிட்டுக்குருவி | ஏசா 38:14 |
நலவு | நயந்து பேசு | நியா 19:3 |
நாச்சியார் | உரிமை மனைவி | நீதி 30:23 |
நாற்சாரி | நான்கு திசைகள் | 2ராஜா 10:21 |
நிக்கிரகம் | அழிவு | ஆதி 6:7; ஏசா 54:16 |
நிசார் | உள்ளாடை | தானி 3:21 |
நிபச்சொல் | பொல்லாத வார்த்தை | ஏசாயா 58:9 |
நிமித்தம் | சகுனம் | எசே 21:21 |
நியாயப்பிரமாணிக்கன் | அரசுரிமை உடையவர் | ஆதி 49:10; உபா 33:21 |
நிருபம் | கடிதம் | அப் 15:23 |
நிர்த்தூளி | தகர்த்து | லேவி 26:30; சங் 90:3 |
நிறைபாரம் | அதிக பாரம் | ஆமோ 2:13 |
நிஜஸ்தர் | நேர்மையாளர் | ஆதி 42:11,31,33,34 |
நெடிதாங்கி | தாழப்பணிந்து | 1சாமு 28:20 |
நேரஸ்தர் | குற்றமற்றவர் | 2நாளா 19:10 |
நொதிக்கிற | சீழ் வடையும் புண்கள் | ஏசாயா 1:6 |
பகுதி கட்டுதல் | கப்பம் கட்டுதல், தீர்வை கட்டுதல் | நீதி 12:24, எஸ்தர் 10:1 |
பணையம் | ஈட்டுத்தொகை | எசே 16:34; ஓசி 2:12 |
பண்டம்பாடி | பொருள்கள் | யோசு 7:11 |
பயில்காட்டி | சீழ்க்கை ஒலியால் அழைப்பது | ஏசாயா 5:26; 7:18 |
பரஸ்திரீ | விலைமாது | நியா 11:1 |
பரிகாரி | குணமளிப்பவர் | யாத் 15:26; 2நாளா 16:12 |
பரிசாரகி | பாதுகாப்பாளன் | அப் 19:35 |
பரிசைபிடிக்கிறவன் | கேடயம் பிடிக்கிறவன் | 1சாமு 17:7 |
பரிச்சேதம் | நிச்சயமாக | எரே 6:15; 8:12; மத் 5:34 |
பருக்கைக் கற்களால் | சரளைக்கல் | நீதி 20:17; புல 3:16 |
பலக்கப்பண்ணினார் | வலிமையடையச் செய்தார் | நியா 3:12 |
பலட்சயமாயிருக்கிறது | சோர்வு, பலவீனம் | எரே 8:18 |
பவிஞ்சுகளாய், பவுஞ்சு | கூட்டம், பிரிவு | ஆதி 14:15; உன் 1:9, யோபு 1:17 |
பறைமுறை | ஆணை பிறப்பித்தல் | 1ராஜா 15:22; தானி 5:29 |
பிகெமோத் | பெரிய விலங்கு | யோபு 40:15 |
பிச்சுக்கலந்த தண்ணீர் | பித்த நீர் | எரே 8:14; 9:15 |
பிரபை | தெளிவு | யாத் 24:10 |
பிராதுபண்ணி | முறையீடு | அப் 24:1; 25:2,15; 1தீமோ 5:19 |
பிறைச் சிந்தாக்கு | இளம்பிறை அணிகலன் | நியா 8:26 |
புல்வாய் | கருப்பு மான் | உபா 14:5 |
பெத்தரிக்கம் | இறுமாப்பு, புகழ், பெருமை | எரே 48:2 |
பேடு | பெண் | அதி 7:3 |
பேர்டாப்பு | பெயர்பட்டியல் | 1நாளா 23:24 |
பொலிசை | அதிக வட்டிபணம் | எசே 18:8 |
போதிகை | மேல்தளம் | ஆமோ 9:1 |
மச்சுப்பாவி | மாடி வைத்து | ஆகாய் 1:4 |
மரைக்குட்டி | இளம் ஆண்மான் | உன் 2:9 |
மிலாறு | கோல், தண்டனை | 2சாமு 7:14 யோபு 21:9 |
முகாந்தரம் | காரணம் | யோசு 5:4; நியா 14:4; எஸ் 4:15 |
முக்காரம் | கனைத்தல் | எரே 50:11 |
முதிராப்பிண்டம் | செத்துப்பிறந்த குழந்தை, வளர்ச்சியடையாத கரு | யோபு 3:16 |
முள்துறடு | அள்ளு கருவிகள் | யாத் 27:3; 1நாளா 28:17 |
யஸ்பி | வண்ணக்கல் | யாத் 28:20; 39:13; எசே 28:13 |
யுத்தசன்னதர் | போர்வீரன் | யோபு 15:24 |
யுத்தசன்னத்தரானவர்கள் | போருக்கு தயாரானவர்கள் | யோசு 6:7 |
ரஸ்துக்கள் | பயண மூட்டைகள் | ஏசா 10:28; 1சாமு 25:13 |
ராஜாளி | கழுகு | லேவி 11:19; யோபு 39:26 |
லபியாது | கிடைக்காது | 2நாளா 26:18 |
லிவியாதான் | பெரிய கடல் உயிரினம் | யோபு 3:8; ஏசா 27:1 |
வசனிப்பு | சொல்லலாங்கார வார்த்தைகள் | மத் 6:7 |
வம்சபதிகளை | குலத்தலைவர்களை | உபா 1:15 |
வர்த்தமானங்கள் | நிகழ்ச்சிகள், செயல்கள் | 1ராஜா 14:19 |
வலசை வாங்குதல் | ஓட்டம் | ஏசா 10:31; எரே 49:5 |
வலுசர்ப்பம் | பெரிய பாம்பு, அரக்கப்பாம்பு | எரே 51:34; வெளி 12:4,9,16 |
வல்லயங்களை | ஈட்டிகளை | 2சாமு 8:14 |
வல்லடிக்காரரின் | கொடுமைக்காரர் | யோபு 6:23 |
வாச்சிகள் | உளிகள் | 1ராஜா 6:7 |
வாது | சண்டை | நீதி 13:10 |
வாலவயது | இளமை | சங் 103:5 |
விக்கினங்கள் | ஆபத்துக்கள், துன்பங்கள் | சங் 57:1 |
விதானித்திருந்தது | பிணைக்கப்பட்டிருந்தது | எஸ் 1:6 |
வியாச்சியத்தில் | வழக்க்கில் | யாத் 23:3,6 |
வியார்த்தி | விளக்கம் | நியா 7:15; தானி 5:12 |
வியாஜ்யமுள்ளவர்கள் | வழக்கு | 2சாமு 15:4; நீதி 25:9 |
விருத்தாப்பியம் | முதிர்வயது | ஆதி 35:28 |
விஸ்தீரணமான | அகன்ற | எரே 51:58 |
வெளிமான் | பெண் மான் | உபா 12:15 |
வெள்ளாட்டிகளாக | அடிமைப்பெண்களாக | எஸ்தர் 7:4 |
வேக்காடு | தீக்காயம் | லேவி 13:24, 28 |
ஜலப்பிரளயம் | வெள்ளப்பெருக்கு | ஆதி 7:6,10,17 |
ஜல்லடம் | சல்லடை | லேவி 6:10; 16:4; ஆமோ 9:9 |
ஜனசதளங்கள் | மக்களினங்கள் | 2நாளா 7:20; சங் 45:5 |
ஜாதி | இனம் | ஆதி 1:11 |
ஜாதிலிங்க வர்ணம் | செவ்வண்ணம் | எரே 22:13 |
ஜீவித்துபோய் | உயிர் நீத்து | ஆதி 49:33 |
ஸ்திதி | அந்தஸ்து | எஸ்தர் 1:7; 2:18 |