1 தீமோத்தேயு
ஆசிரியர்
இந்த நிருபத்தின் ஆசிரியர் பவுல் ஆவார், 1 தீமோத்தேயுவின் வார்த்தைகள், இந்த நிருபத்தை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாக தெளிவாகக் கூறுகின்றன. தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் (1 தீமோ 1:1) (1 தீ. 1:1). ஆரம்பகால சபை அது உண்மையிலேயே பவுலின் நிருபம் என்று தெளிவாகக் கூறுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 62-64 க்கு இடையில் எழுதப்பட்டது.
பவுல், எபேசுவில் தீமோத்தேயுவை விட்டுச் சென்றபோது, அவர் மக்கெதோனியாவுக்கு சென்றார். அங்கிருந்து அவர் தீமோத்தேயுவுக்கு எழுதினார். (1 தீமோத்தேயு. 1:3; 3:14, 15).
யாருக்காக எழுதப்பட்டது
பவுலின் பயணத் தோழனும் மிஷனரி பயணத்தில் உதவியாளனுமான தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதுவதால், அழைப்பதாலேயே இந்த நிருபம் தீமோத்தேயு என்று பெயரிடப்பட்டது. தீமோத்தேயு மற்றும் சபை ஆகிய இருவரும் 1 தீமோத்தேயுவின் வாசகர்களே.
எழுதப்பட்ட நோக்கம்
தீமோத்தேயுவை தேவனுடைய குடும்பம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதை (3:14-15) அறிவுறுத்துவதற்கும் தீமோத்தேயு இந்த வழிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்கும் இந்த நிருபம் எழுதப்பட்டது. இந்த வசனங்கள் 1 தீமோத்தேயு நிருபத்திற்கான பவுலின் எண்ணக்கருவாக செயல்படுகின்றன. ஜீவனுள்ள தேவனுடைய சபையார், சத்தியத்தின் தூணும் அஸ்திவாரமுமாய் இருக்கிறவர்கள், தேவனுடைய வீட்டிலே தங்களைச் செய்யவேண்டியது இன்னதென்று அவர்களுக்குத் தெரியும்படிக்கு அவர் எழுதுகிறார். பவுல் கடிதங்களை அனுப்பி, சபைகளை பலப்படுத்துவது மற்றும் கட்டியெழுப்புவது எப்படி என்று ஆண்களுக்கு அவர் குறிப்பிடுகிறார்.
மையக் கருத்து
ஒரு இளம் சீடனுக்கான வழிமுறைகள்
பொருளடக்கம்
1. ஊழியத்தின் பயிற்சிகள் — 1:1-20
2. ஊழியத்தின் கொள்கைகள் — 2:1-3:16
3. ஊழியத்தின் பொறுப்புகள். — 4:1-6:21