லூக்கா எழுதின சுவிசேஷம்
தலைப்பு:
மற்ற மூன்று சுவிசேஷ புத்தகங்களுக்கு எப்படி தலைப்பு பெறப்பட்டதோ, அப்படியே இந்த புத்தகத்திற்கும் ஆசிரியரின் பெயரே தலைப்பாகி இருக்கிறது. பாராம்பரிய கருத்தின்படி லூக்கா ஒரு புறஜாதியார். அப்போஸ்தலனகிய பவுல் இந்த கருத்தை உறுதி செய்வதை கொலோசேயர் 4:11,14-ஆம் வசனங்களில் காண்கிறோம். ”விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்” என்பதில் லூக்காவை வேறுபடுத்திக் காட்டுகிறார். இதிலிருந்து லூக்கா மாத்திரமே பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒரு புத்தகத்தை எழுதிய யூதரல்லாத, புறஜாதியார் ஆவார். புதிய ஏற்பாட்டில் அதிக பங்குகளை எடுத்துக்கொள்ளும் லூக்கா சுவிசேஷ பகுதி மற்றும் அப்போஸ்தலரின் நடபடிகள் புத்தகம் இரண்டையும் எழுதியவர் இவர்.
லூக்காவைப்பற்றி நாம் அறியவருவது மிக சொற்பமானதே. அவருடைய புத்தகத்தில் அவரைப் பற்றி எதுவும் எழுதவில்லை, இவருடைய பின்னணி அல்லது அவர் எப்படி மனம்மாறினார் என்பது போன்ற விபரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. வரலாற்று ஆசிரியர்களான யொசிபஸ் மற்றும் யெரோம், இவர் அந்தியோகியா பட்டணத்தார் எனக் குறிப்பிடுகின்றனர். இதினால் தான் என்னவோ அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தின் அனேக நிகழ்வுகள் அந்தியோகியா பட்டணத்தைச் சுற்றியே நிகழ்கின்றன (அப்.11:19-27; 13:1-3; 14:26; 15:22,23 30-35; 18:22,23). லூக்கா அதிகமாக பவுல் அப்போஸ்தலனுடன் பிரயாணப்பட்டவர்; பவுலின் மக்கோதொனியா தரிசனத்தில் (அப்:16:9,10) இருந்து பவுல் இரத்த சாட்சியாக மரித்த நாள் மட்டும் (2தீமோ.4:11) பவுலைப் பின்பற்றினார் எனலாம்.
அப்போஸ்தலர் பவுல் லூக்காவை வைத்தியர் எனக் குறிப்பிடுகிறார் (கொலோ.4:14). இயேசு கிறிஸ்துவின் சுகமாக்கும் செயல்களுக்கு இவரது எழுத்துக்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருப்பதில் இருந்தே இவர் ஒரு வைத்தியர் என்பது புலனாகும் (4:38-40; 5:15-25; 6:17-19; 7:11-15; 8:43-47; 49-56; 9:2,6,11; 13:11-13; 14:2-4; 17:12-14; 22:50,51). லூக்காவின் காலங்களில் மருத்துவர்கள் அவர்களுக்கே உரிய பிரத்யேக நுட்பமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை; இதினால், லூக்காவின் வார்த்தைகள் மற்ற சுவிசேஷ ஆசிரியர்களின் வார்த்தைகளிலும் வேறுபட்டதாக நாம் காண்பதில்லை.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
லூக்கா சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் இரண்டும் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டவை (1:1-4, அப்.1:1). இவர் தன்னுடைய பெயரை எங்கேயும் குறிப்பிடவில்லை என்றாலும், இவர் “நாங்கள்” என அப்போஸ்தலருடைய நடபடிகளில் பல இடங்களில் குறிப்பிடுவதால், இவர் பவுல் அப்போஸ்தலனுடன் அதிகமாக பிரயாணம் மேற்கொண்டவர் என்பது தெளிவாகிறது (அப்.16:10-17; 20:5-15; 21:1-18; 27:1- 28:16). பவுல் தன்னுடன் ஊழியம் செய்தவர்களில், லூக்காவின் பெயரை மாத்திரமே தன்னுடைய நிருபத்தில் குறிப்பிட்டு எழுதியுள்ளார் (கொலோ.4:14; 2தீமோ.4:11; பிலேமோன் 24); இவற்றில் இருந்து லூக்காதான் இந்த இரு புத்தகங்களுக்கும் ஆசிரியர் ஆக இருக்ககூடும் என்பதற்கு பொருத்தமானவராக இருக்கிறார். இது ஆதி திருச்சபை ஏகமனதாக லுக்கா தான் இந்த சுவிசேஷ புத்தகத்தை எழுதினார் என்று ஏற்றுக் கொண்ட பாரம்பரியத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறது. இவருடைய இந்த இரண்டு புத்தகங்களிலும், லூக்கா முதலாவதாகவும், அப்போஸ்தலருடைய நடபடிகள் இரண்டாவதாகவும்; அதே வேளையில் அவை ஒரேநேரத்தில் எழுதப்பட்டவைகளாகத் தோன்றுகின்றன. ”தெயோப்பிலு” என்பவருக்கு 2 தொகுப்புகளாக இந்த இரண்டு புத்தகங்களும் – கிறிஸ்தவத்தின் அடிப்படை கருப்பொருள் மற்றும் அமைப்பை விவரித்து எழுதிய புத்தகங்கள், கிறிஸ்துவின் பிறப்பு முதல் பவுல் ரோம பேரரசினால் வீட்டு காவலில் வைக்கப்பட்டது வரை விவரிக்கின்றன (அப்.28:30,31).
அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம், பவுல் இன்னும் ரோமாபுரியில் இருப்பதுடன் முடிவடைவதால், பவுல் சிறைச்சாலையில் இருந்த நாட்களில் ரோமாபுரியில் இருந்து லூக்கா இப்புத்தகங்களை எழுதினார் என்பது தெளிவாகிறது (கி.பி.60-62). எருசலேம் நிர்மூலமாக்கப்படும் (கி.பி.70) என்ற இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை லூக்கா குறிப்பிடுகிறார், ஆனால் அத்தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. பொதுவாக, லூக்கா எந்தவொரு தீர்க்கதரிசன நிறைவேறுதலையும் குறிப்பிடுபவர் (அப்.11:28) ஆகையால் ரோமர்கள் எருசலேமை கைப்பற்றியதற்கு முன்பே இப்புத்தகங்களை எழுதியிருக்கலாம்.. கி.பி.64-ல் ஆரம்பித்த நீரோ மன்னனின் வன்கொடுமை குறித்தும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் குறிப்பு இல்லை. மேலும் அனேக வேதசாஸ்திரிகள் யாக்கோபு இரத்த சாட்சியாக மரித்தத்து கி.பி.62-ல் என குறிப்பிடுகின்றனர். இச்சம்பவம் லூக்கா புத்தகம் எழுதுவதற்கு முன் நிறைவேறி இருந்தால் நிச்சயமாக லூக்கா குறிப்பிட்டிருப்பார் – ஆனால், குறிப்பிடவில்லை! எனவே இந்த சுவிசேஷ புத்தகம் எழுதப்பட்ட காலம் கி.பி.60- 61 ஆக இருக்கலாம்.
பின்னணி மற்றும் அமைப்பு
”மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே” (அர்த்தம், தேவனை நேசிப்பவர்) என அழைத்து தனது சுவிசேஷபுத்தகத்தை லூக்கா ஆரம்பிக்கிறார் (லூக்.1:1; அப்.1:1). இராயனுடைய அரண்மனையில் (பிலிப்பியர் 4:22) இருந்த போது கிறிஸ்துவிடம் மனம் திரும்பிய ரோம சாம்ராஜ்யத்தின் கனவான்களில் ஒருவராக “தெயோப்பிலு” இருந்திருக்க கூடும். இவர் மகா கனத்திற்கு உரியவராக இருந்திருக்க வேண்டும். இது ஒரு பதவி அல்லது புனைப்பெயர் ஆக இருந்திருக்கலாம். இந்த ஒரே மனிதருக்கு என்று இல்லாமல், மிகப்பெரிய அளவிலான வாசகர்களை மனதில் நிறுத்தித்தான் லுக்கா எழுதினார் என்பது நிச்சயம். இன்றைய நாகரீக புத்தகங்களில் நாம் சமர்ப்பணம் என்று காண்கிறோமே, அப்படி லூக்கா தன் புத்தகத்தை சமர்ப்பித்து எழுதுகிறார். இது நிருபங்கள் எப்படி அழைத்து ஆரம்பிக்கின்றதோ அப்படிப்பட்ட ஆரம்பம் இல்லை இது.
”ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு, வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே” என்று லூக்கா வெளிப்படையாகவே இந்த சுவிசேஷம் கண்கண்ட சாட்சிகளின் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டது, தான் கண்ணுற்று எழுதியதாக அல்ல என தெரிவிக்கிறார். இயேசுவின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை ஓர் ஒழுங்கின்படி தொகுத்து வழங்கவேண்டும் என்பதே லூக்காவின் நோக்கம் என்பதை நாம் முன்னுரையில் இருந்து அறிந்துகொள்கிறோம், ஆனாலும், அவர் எல்லா இடங்களிலும் காலவரிசையின்படி எழுதினார் என்றும் அர்த்தப்படுத்தாது.
நடப்பில் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு எழுதினேன் என்று லூக்கா ஒப்புக்கொண்டாலும், லூக்கா அவருடைய பணி தேவனுடைய ஆவியானவரின் உந்துதலின்படியே நிறைவேறியது என்பதை மறுக்கவில்லை. வேதாகம வாக்கியத்தினை எழுதும் இயல்பான ஆசிரியரின் ஆள்தத்துவம், வார்த்தைகள் மற்றும் நடையில் இருந்து அகத்தூண்டுதல் ஒருபோதும் வழிவிலகிச் செல்லவோ அல்லது புறக்கணிக்கவோ செய்யவில்லை. வேதாகம வாக்கியங்களை எழுதும் ஆசிரியர்களின் தனித்தன்மை வேதவாக்கியங்களில் அழியாமல் எப்பொழுதும் முத்திரை பதிக்கப்படுகிறது. லுக்காவின் ஆராய்ச்சியும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல! அவருடைய ஆராய்ச்சியும் கூட தெய்வீக வழிநடத்துதலின்படியே பண் ஒன்று சேர்ந்து இசைப்பது போல ஒன்றாக இணைக்கப்பட்டது. அவருடைய எழுத்துக்களை – லூக்கா - ”தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” என்று 2பேதுரு 1:21 ல் நாம் காண்பது போல் எழுதினார். ஆகையால், இவர் எழுதும் வார்த்தைகள் யாவும் நிச்சயமான சத்தியம்.
வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்
மிகவும் படித்த, மேதையின் வார்த்தைகளுக்கு ஒப்பாக லூக்காவின் வார்த்தைகள் மற்றும் மொழி நடை இருக்கிறது. இவர் உன்னிப்பாக கவனித்து எழுதும் வரலாற்று ஆசிரியர் போல் எழுதியுள்ளார். இதில் அவர் சொல்லும் சம்பவங்களுக்கு தொடர்புடைய வரலாற்று சூழலை நாம் அடையாளம் காணவும் உதவி செய்வதை காண்கிறோம் (1:5; 2:1,2; 3:1,2; 13:1-4). அனைத்து சுவிசேஷங்களையும் ஒப்பிடும் போது, இயேசுவின் பிறப்பு குறித்து லூக்கா கொடுத்திருக்கும் தகவல்கள் பரிபூரணமானவைகள் (லூக்காவின் இதர எழுத்துக்கள் போலவே). மேலும் அவற்றின் இலக்கிய நடை மெருகூட்டப்பட்டது. இயேசுவின் பிறப்பை விவரிக்கும் போது அதில் சில துதி சங்கீதங்களை சேர்த்து தந்துள்ளார் (1:46-55; 1:68-79; 2:14; 2:29-32,34, 35). இவர் ஒருவர் மாத்திரமே – யோவான் ஸ்நானகனின் பிறப்பின் போது நிகழ்ந்த அசாதாரணமான நிகழ்வுகள், மரியாளுக்கு முன் அறிவித்தல், முன்னணையில் கிடத்தியிருத்தல், மேய்ப்பர்கள் மற்றும் சிமியோன், அன்னா வந்து தரிசித்தல் போன்ற விபரங்களை எழுதுகிறார் (2:25-38).
லூக்கா சுவிசேஷம் முழுவதும் வியாபித்திருக்கிற கருப்பொருள் – புறஜாதியார், சமாரியர்கள், பெண்கள், பாலகர்கள், ஆயக்காரர்கள், பாவிகள் மற்றும் இஸ்ரவேலில் எப்பொழுதும் தள்ளி வைக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள் = குறித்து இயேசு கொண்டிருந்த மனதுருக்கம். எப்பொழுது எல்லாம் ஆயக்காரர் என்று அவர் பேசுகிறாரோ (3:12; 5:27; 7:29; 15:1; 18:10-13; 19:2), அப்பொழுது எல்லாம் அவர்களின் நேர்மறையான விஷயத்தை குறித்தே பேசுகிறார். அதேவேளையில், ஐசுவரியவான்கள் மற்றும் கனத்திற்குரியவர்களின் இரட்சிப்பை குறித்து பேச தவறவில்லை, உதாரணமாக, 23:50-53 காண்க. ஆரம்பத்தில் நிறைவேறின இயேசுவின் வெளியரங்கமான ஊழியத்திலிருந்து (4:18) சிலுவையில் இயேசு மொழிந்த கடைசி வார்த்தைகள் வரை கிறிஸ்துவின் ஊழிய கருப்பொருளை சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு லூக்கா முக்கியத்துவம் கொடுத்து எடுத்துச்செல்கிறார். தங்கள் தேவை என்ன என்பதை நன்கு உணர்ந்திருந்தவர்களுக்கு ”மிகப்பெரிய மருத்துவர்” எப்படியாக உதவிசெய்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் லூக்கா எடுத்துக் காட்டுகிறார் (5:31,32; 15:4-7,31,32; 19:10). பெண்களுக்கு லூக்கா அதிமுக்கியத்துவம் கொடுப்பது கவனிக்கத்தக்கது. இயேசுவின் பிறப்பின் வம்சவழியில் மரியாள், எலிசபெத், அன்னாள் ஆகிய பெண்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளார் (அதிகாரங்கள் 1,2), உயிர்த்தெழுதலின் காலை வேளையில் பெண்கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பதை லூக்கா மீண்டும் எடுத்துக்காட்டுகிறார். நமது ஆண்டவரின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் பெண்களின் பங்கு அதிகம் என்பதை லூக்கா வலியுறுத்துகிறார் (7:12; 15:37-60; 8:2,3 43-48; 10:38-42; 13:11-13; 21:2,4; 23:27-29,49,55,56). லூக்கா சுவிசேஷபுத்தகத்தில் நினைவிற்குவரும், வேறு சில அடிக்கடி நிகழும் நிகழ்வுகள் இழையோடி இருக்கின்றன. தேவனுடைய சமூகத்தில் மனுஷருடைய பயம், மன்னிப்பு (3:3;5:20-25; 6:37; 7:41-50; 11:4; 12:10; 17:3,4; 23:34; 24:47); மகிழ்ச்சி; தெய்வீக சத்தியத்தின் இரகசியங்களில் உள்ள அதிசயங்கள்; பரிசுத்தாவியானவரின் பங்கு (1:15, 35, 41,67,; 2:25-27; 3:16,22; 4:1,14, 18; 10:21;11:13; 12:10,12); எருசலேமின் தேவாலயம் (1:9-22;2:27-38, 46-49; 4:9-13; 18:10-14; 19:45-48; 20:1-21:6; 21:37,38; 24:53); மற்றும் இயேசுவின் ஜெபங்கள். லூக்கா 9:51-ஆம் வசனத்தில் இருந்து, லூக்கா, இயேசு எருசலேமுக்கு சென்ற கடைசிநாட்களில் நடந்த சம்பவங்களை விவரிக்க 10 அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார். இந்த பகுதிகளில் காணும் அனேக சம்பவங்கள் தனித்தன்மை வாய்ந்தவை, லூக்கா சுவிசேஷ புத்தகத்தில் மட்டுமே காணக் கிடைக்கும், இது லூக்கா சுவிசேஷ புத்தகத்தின் இருதயம் போன்ற முக்கிய பகுதி என்றும் சிலுவையை நோக்கி இயேசு சென்ற பாதையின் இடைவிடாத முன்னேற்றத்தை எடுத்துகாட்டுவது லூக்கா சுவிசேஷ புத்தக கருப்பொருளின் விசேஷ அம்சம். இந்த ஒரு நோக்கத்தை நிறைவேற்றவே இயேசு இப்பூவுலகிற்கு வந்தார். அதனை தள்ளிப்போட மாட்டார். பாவிகளை இரட்சிப்பதே இயேசு கிறிஸ்துவின் முழுமையான திட்டம் / நோக்கம்; இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார் (19:10).
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
மத்தேயுவைப்போல் இல்லாது, மாற்கு புத்தகத்தைப் போல் லூக்கா சுவிசேஷ புத்தகம் புறஜாதியாரை கருத்தில் கொண்டு எழுதினார். யூதர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்த இடங்களை லூக்கா அடையாளப்படுத்தி எழுதுகிறார் (உதாரணமாக, 4:31; 23:51; 24:13); இதிலிருந்து லூக்கா சுவிசேஷ புத்தகத்தை வாசிப்பவர்கள் - பாலஸ்தீன பூகோள அமைப்பை நன்கு அறிந்தவர்களை காட்டிலும் அதிகமான வேறுபகுதிகளில் இருந்தோருக்கும் எழுதப்பட்டது என அறிகிறோம். லூக்கா கிரேக்க வார்த்தைகளையே எபிரேய வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக எடுத்துப் பயன்படுத்துகிறார் (உதாரணமாக, 23:7,8ல் கொல்கதாவிற்கு பதிலாக “கல்வாரி”). யூதரை வெறுக்கிற வார்த்தைகள் உதாரணமாக, “அப்பா” (மாற்கு 14:36); ரபீ (மத்.23:7,8); யோவான் (1:38,49) மற்றும் “ஓசன்னா” (மத்.21:9; மாற்கு 11:9,10; யோவான்:12:13) போன்ற வார்த்தைகளை லூக்கா எடுத்துப் பயன்படுத்தவில்லை அல்லது அதற்கு இணையான கிரேக்க வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். லூக்கா, மத்தேயுவைக் காட்டிலும் சுருக்கமாக பழையஏற்பாட்டில் இருந்து எடுத்தாளுகிறார். அப்படியே பயன்படுதினாலும் எபிரேயத்தில் இருந்து மொழி பெயர்த்து கிரேக்க மொழியில் எழுதிய LXX மொழிபெயர்ப்பினையே எடுத்துப் பயன்படுத்துகிறார். மேலும் விரிவாக பார்த்தோமானால், லூக்கா பழையஏற்பாட்டில் இருந்து நேரடி மேற்கோள்களுக்கு பதிலாக குறிப்பீடுகளையே பயன்படுத்துகிறார் எனவும் அதிலும் அவை இயேசு பேசும் வார்த்தைகளில் வெளிப்படுகின்றனவே அல்லாமல் லூக்கா விவரிக்கும் பகுதிகளில் காணப்படவில்லை (2:23,34; 3:4-6; 4:4,8,10-12, 18,19; 7:27; 10:27; 18:20; 19:46; 20:17, 18, 37, 42, 43; 22:37).
லூக்கா, மற்ற சுவிசேஷ எழுத்தாளர்களை விட ”சுவிசேஷத்தின் அழைப்பு உலகளாவிய நோக்கம் கொண்டது” என்பதை முன்னிலைப்படுத்துகிறார். இயேசு இஸ்ரவேலினால் மறுதலிக்கப்பட்டு பின்னர் உலகத்திற்கு பரிசாக அளிக்கப்பட்ட மனுஷகுமாரன் என்பதை எடுத்துகாட்டினார். மேலே நாம் கருப்பொருள் பகுதியில் கண்டபடி, இயேசுவின் கண்களில் தயவு பெற்ற புறஜாதியார், சமாரியர்கள், மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களை லூக்கா திரும்பத் திரும்ப நமக்குமுன் மதிப்புள்ள உறவுகளாக எடுத்துக்காட்டுகிறார். ”புறஜாதியாருக்கு அப்போஸ்தலராக” இருந்தவருடன் மிக நெருக்கமாக பயணங்களை மேற்கொண்டவரின் எழுத்துக்கள் இப்படித்தான் இருக்கும் என நாம் எதிர்பார்த்தது போலவே லூக்கா விடாப்பிடியாகப் பேசுகிறார் (ரோமர் 11:13).
ஆனாலும் சில குறைகாண்கிறவர்கள் லூக்காவின் இறையியலுக்கும் பவுலுடையதற்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காண்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். உண்மைதான் – லூக்கா தன்னுடைய மொழி நடையில் பவுலின் சொற்களை எடுத்துப்பயன்படுத்தவில்லை. லூக்கா தனக்கே என்று ஒருபாணி வகுத்துக்கொண்டு அதன்படி எழுதினார், ஆனாலும் அப்போஸ்தலரிகளின் இறையியலுடன் கனகச்சிதமாக இவரது இறையியல் இசைந்து போகிறது. பவுலுடைய உபதேசத்தின் மைய்யப்ப்பொருள், விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்பதே (ரோ.3:24); விசுவாசத்தினால் நீதிமான் பிழைபான் என்ற கருத்தை, லூக்காவும் பரிசேயன் மற்றும் ஆயக்காரன் உவமை (18:9-14), பிரசித்தமான கெட்டகுமாரன் கதை (15:11-32); சீமோன் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் (7:36-50); மற்றும் சகேயுவின் இரட்சிப்பு (19:1-10) போன்ற வற்றில் மேம்படுத்தி விவரிக்கிறார்.