வேதாகம வரலாறுகள்

மத்தேயு எழுதின சுவிசேஷம்

தலைப்பு:

”கர்த்தரின் ஈவு” என்று அர்த்தம் தரும் மத்தேயு என்பது லேவி (9:9) என்னும் பெயரின் வேறொரு பெயர்; இவர் ஆயக்காரர் - கிறிஸ்துவை பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் விட்டு வந்தவர் (லூக்கா 5:27,28). மத்தேயு 12 சீஷர்களில் ஒருவர் (10:3; மாற்கு 3:18; லூக்கா 6:15; அப்போஸ்தலர் 1:13). அவர் தான் எழுதிய அப்போஸ்தலர்களின் பட்டியலிலும் ”ஆயக்காரனாகிய மத்தேயு” (10:3) என தன்னை அழைத்துக் கொள்கிறார். மற்ற சுவிசேஷகர்களும் கூட இவருடைய கடந்த கால பாவ வாழ்க்கையை குறித்து பேசும்போது “லேவி” என்னும் ஏற்கெனவே இருந்த பெயரைக் கொண்டே அழைக்கின்றனர். இது மத்தேயுவின் தாழ்மைக்கு சான்று; மற்ற சுவிசேஷ புத்தகங்களைப் போலவே இந்த புத்தகமும் இதன் ஆசிரியர் பெயரையே தலைப்பாக பெற்றுள்ளது. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

திருச்சபை ஏற்றுக்கொண்ட புத்தகங்கள் வரிசையில் வருவதைக் குறித்தோ அல்லது மத்தேயு தான் இப்புத்தகத்தின் ஆசிரியர் என்பதனையோ ஆதிதிருச்சபையில் எவரும் கேள்வி கேட்கவில்லை. யூசிபியஸ் (கி.பி. 265 -339) மற்றும் ஆரிஜின் (கி.பி. 185 -254) இருந்து கீழ்வருமாறு எடுத்துகாட்டுகின்றனர். 

பரலோகத்தின் கீழ் உள்ள தேவனுடைய திருச்சபையில் மறுக்கமுடியாத ஒன்றாக இருக்கக்கூடிய நான்கு சுவிசேஷ புத்தகங்களிலும், நான் வழக்கத்தின்படி அறிந்து இருப்பது முதல் புத்தகம் மத்தேயுவினால் எழுதப்பட்டது, இவர் ஒருகாலத்தில் ஆயக்காரராக இருந்தார், அதற்குபின் இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலராக மாறிய இவர் எழுதிய புத்தகம், யூதமதத்திலிருந்து கிறிஸ்தவர்களானவர்களுக்கு எழுதிய புத்தகம் (திருச்சபை வரலாறு,6:25). கி.பி. 70-ஆம் ஆண்டு ஆலயம் நிர்மூலமாக்கப்படுவதற்கு முன் இந்த புத்தகம் எழுதப்பட்டது. சில ஆசிரியர்கள் இந்த சுவிசேஷம் கி.பி.50-ல் எழுதப்பட்டிருக்கலாம் என்று  தெரிவிக்கின்றனர். 

பின்னணி மற்றும் அமைப்பு

மத்தேயு சுவிசேஷம் யூதர்களுக்காக எழுதப்பட்டது என்பதை புத்தகம் முழுவதும் நாம் காணமுடிவது குறிப்பிடத்தக்கது. மத்தேயு ஆரம்ப வரிதனில் ஆபிரகாமின் குமாரனாகிய ...... இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு: என ஆபிரகாம் வரைக்கும் மட்டுமே வம்சவழியை எழுதியதில் இருந்தே தெளிவாகிறது. மறுபுறம், லூக்கா - இயேசுகிறிஸ்து மனுக்குலத்தின் மீட்பர் என்பதை காட்டும்படிக்கு ஆதாம் வரை வம்சவரலாற்றை எழுதியுள்ளதாக காண்கிறோம். இஸ்ரவேலின்  ராஜாவும் மேசியாவும் கிறிஸ்துவே என்ற கருத்தை முக்கியப்படுத்துவதே மத்தேயுவின் நோக்கம்; பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன வரிகளில் இருந்து 60 தடவைக்கும் மேலாக மேற்கோள்காட்டி, அவைகளில் காணப்படும் - அனைத்து வாக்குதத்தங்களின் நிறைவேறுதல் கிறிஸ்து - என்பதை மத்தேயு சுவிசேஷம் வலியுறுத்துகிறது. 

மத்தேயு புத்தகம் யூதர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது - என்ற உண்மைக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை பின்வரும் காரணங்களினால் நாம் அறியலாம். மத்தேயு யூதர்களின் பழக்க வழக்கங்களை, மற்ற சுவிசேஷங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதிக விளக்கம் தராமல் குறிப்பிடுகிறார் (மாற்கு7:3; யோவான் 19:40). அவர் கிறிஸ்துவை “தாவீதின் குமாரன்” (1:1; 9:27; 12:23; 15:22; 20:30; 21:9,15; 22:42-45) என நிலையாக அழைக்கிறார். தேவனுடைய நாமத்தைக் குறித்து யூதர்கள் கொண்டிருந்த உணர்வுகளை பாதுகாக்கும் எண்ணத்துடன் நாம் மற்ற சுவிசேஷகர்கள் “தேவனுடைய ராஜ்யம்” எனக் குறிப்பிடுமிடத்தில் “பரலோக ராஜ்யம்” என்ற வார்த்தைகளை மத்தேயு பயன்படுத்துவதைக் காண்கிறோம். புத்தகத்தின் அனைத்து கருப்பொருட்களும் பழையஏற்பாட்டில் வேரூன்றி, மேசியாவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் வெளிச்ச பின்னணியில் அமைந்துள்ளது.  மத்தேயு கிரேக்க மொழியை பயன்படுத்தியது - அவர் பாலஸ்தீன யூதராக நின்று வேறு பகுதிகளில் இருக்கும் கிரேக்க  யூதர்களுக்கு எழுத பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறது. அவர் விவரிக்கும் அனேக சம்பவங்கள் நசரேயனாகிய இயேசுவின் வார்த்தைகள் மற்றும் கிரியைகளை தன் கண்களால் கண்ட சாட்சியாக முதல்நபராக இருந்து எழுதுவதாகக் காண்கிறோம். 

இயேசுவே யூத தேச்த்தார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த மேசியா என்பதனை நிரூபிக்க வேண்டும் என்பதே மத்தேயுவின் நோக்கம் எனத் தெளிவாக காணமுடியும். அவருடைய எண்ணிக்கைக்கு அடங்காத பழையஏற்பாட்டு மேற்கோள்கள் காட்டுதல் – வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியாவிற்கும் வரலாற்று நாயகர் இயேசுவிற்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பினை எடுத்துக்காட்டவே வடிவமைக்கப்பட்டது. அவர் கொண்டிருந்த நோக்கம் எந்த இடத்திலும் கவனம் சிதறியதாக இல்லாமல் இருக்கிறது, மேலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் காணப்படும் தற்செயலான விபரங்களைக்கூட இயேசுவே மேசியா என்று உரிமைபாராட்ட எடுத்துப் பயன்படுத்துவதைக் காண்கிறோம் (உதாரணமாக, 2:17,18; 4:13-15; 13:35; 21:4,5; 27:9,10).

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

இயேசுவே மேசியா, யூதர்களுக்கு ராஜா - என்பதனை நிச்சயமாக அறிவிக்க வேண்டும் - என கருத்தாழம் மிக்கவராக மத்தேயு இருந்தபடியால், இந்த நற்செய்தி புத்தகம் முழுவதும் பழைய ஏற்பாட்டின் ராஜ்ய வாக்குத்தத்தங்களை எடுத்துக் காட்டுவதில் ஓர் ஆர்வம் இருப்பதைக் காணமுடியும். மத்தேயுவின் கையொப்ப வாக்கியம் ”பரலோக ராஜ்யம்” வேதாகம புத்தகத்தில் வேறுஎங்கும் நாம் காணமுடியாது - 32 முறை எடுத்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆரம்ப வரிகளில் நாம் காணும் வம்சவரலாறு - இஸ்ரவேலின் ராஜா - இயேசு கிறிஸ்து என்பதை ஆதாரசான்றுகளுடன் நிரூபிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் இதர அத்தியாயங்கள் இந்த கருப்பொருளை பூரணமாக்குகின்றன. ராஜவம்சத்தின் வழி வந்தவர் கிறிஸ்து என்பதை மத்தேயு எடுத்துக்காட்டுகிறார். வர இருக்கும் ராஜாவைக் குறித்து பழையஏற்பாட்டில் சொல்லப்பட்டிருந்த அனேக வாக்குத்தத்தங்கள் இயேசுவில் நிறைவேறி இருக்கின்றன என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கின்றார். கிறிஸ்துவின் ராஜரீக  தனியுரிமையை நிலைநாட்ட சான்றுகளுக்கு மேல் சான்றுகள் என தந்துகொண்டே இருக்கிறார். புத்தகத்தில் நாம் காணும் இதர வரலாற்று மற்றும் இறையியல் கருப்பொருட்களும் கூட இந்த கருப்பொருளைச் சுற்றியே வந்துகொண்டிருக்கின்றன.

மத்தேயு 5 சொற்பொழிவுகளை குறித்து தந்துள்ளார்: அவை மலைப்பிரசங்கம் (அதிகாரங்கள் 5-7); அப்போஸ்தலர் பணியின் கட்டளையை சீஷர்களுக்கு வழங்குதல் (அதிகாரம் 10); தேவனுடைய ராஜ்யம் குறித்ததான உவமைகள் (அதிகாரம் 13); விசுவாசி ஒரு சிறுபிள்ளையைப் போன்றவர் என்ற சொற்பொழிவு (அதிகாரம் 18); அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்த சொற்பொழிவு (அதிகாரங்கள் 24,25). ஒவ்வொரு சொற்பொழிவும் “இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது” (7:28; 11:1; 13:53; 19:1; 26:1) என்ற வரிகளுடன் முடிவடைவதைக் காண்கிறோம். புதிய விவரித்தலின் மையக்கருத்து இது என அர்த்தப்படுத்துகிறது. ஆரம்ப பகுதி (அதிகாரங்கள் 1-4) நீண்டதானதாவும், முடிவுரை குறுகியதானகவும் (அதிகாரங்கள் 28:16-20) இருக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பது எல்லாம் சுவிசேஷத்தின் பகுதிகள்: 5 பிரிவுகளாக, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சொற்பொழிவும் அத்துடன் விவரிக்கும் பகுதி ஒன்றுமாக இயற்கையாகவே அமைந்து இருக்கிறது. சிலர் இந்த 5 பிரிவுகளும் பழையஏற்பாட்டு மோசேயின் ஆகமங்கள் உடன் இணையொத்ததாக இருப்பதாகக் காண்கின்றனர்.

இயேசுவிற்கும் பரிசேயர்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு, மத்தேயு சுவிசேஷ புத்தகத்தின் பொதுவான மற்றொரு கருப்பொருள் ஆகும். ஆனால், மத்தேயு பரிசேயரின் தவறுகளை ஆர்வமாகச் சுட்டிக்காட்டுவது, தன்னை கவனிக்கும் யூதர்களுக்கு பயன்படும் என்பதே அல்லாமல், தற்பெருமைக்காக அல்ல என அறிகிறோம். பரிசேயரும், ஆயக்காரரும் என்ற உவமை மத்தேயுவை சாதகமான வெளிச்சத்தில் நிறுத்தியிருக்கும் என்றாலும் - அதனை அவர் தன் சுவிசேஷ புத்தகத்தில் தவிர்த்து விடுகிறார். 

மற்ற சுவிசேஷ புத்கங்களைக் காட்டிலும் அதிகமாக சதுசேயர்கள் குறித்து மத்தேயு குறிப்பிடுகிறார். தொடர்ச்சியாக, பரிசேயரும் சதுசேயரும் எதிர்மறை கருத்துக்களுக்காக எடுத்துக்காட்டப்பட்டு நம்மை எச்சரிக்கும் தீப்பந்தங்களாக நிற்கின்றனர். அவர்கள் உபதேசம் புளித்தமா போன்றது; முற்றிலும் தவிர்க்க வேண்டும் (15:11,12).  இவ்விருதிறத்தாரும் தங்களுக்குள் கொண்டிருந்த கொள்கையில் வேறுபட்டிருந்தாலும், இயேசுவினிடத்தில் காட்டும் வெறுப்பில் ஒன்றுசேர்ந்து நின்றனர். கிறிஸ்துவை ராஜா என்று ஏற்றுக்கொள்வதை நிராகரிக்கின்ற இஸ்ரவேலில் இருந்த அனைவருக்கும் அடையாளமாக - பரிசேயரும் சதுசேயரும் மத்தேயுவிற்கு முன் நின்றனர். 

இஸ்ரவேலல் மேசியாவை நிராகரித்தல் என்பதும் மத்தேயு புத்தகத்தில் தொடர்ச்சியாக இழையோடி வரும் மற்றொரு கருப்பொருள். இயேசுவிற்கு எதிராக வந்த எதிர்ப்புகள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல மற்ற எந்த சுவிசேஷ புத்தகத்திலும் அதிகமாக எடுத்துக்காட்டப்படவில்லை. எகிப்திற்கு ஓடிச்சென்றதில் இருந்து சிலுவையின் காட்சிவரை, மற்ற சுவிசேஷகர்களைக் காட்டிலும் மத்தேயு மிக அழகாக இயேசு யூதர்களால் நிராகரிக்கப்பட்டார் என்ற விபரங்களைச் விவரிக்கிறார்.. சிலுவைப்பாட்டினைக் குறித்து மத்தேயு எழுதுவதில், உதாரணமாக, மனம்திரும்பும் கள்ளனைப் பற்றி அல்லது சிலுவையைச் சுற்றியிருந்த இயேசுவிற்கு அன்பானவர்கள் மற்றும் நண்பர்களைக் குறித்து குறிப்பிடவில்லை. அவருடைய மரணத்தில் தேவனாலும் அவர் கைவிடப்பட்டார் (27:46). என்று இவர் சுட்டிக்காட்டுவதில் இருந்து, கைவிடப்பட்ட சூழ்நிலையின் நிழல் இவர் எழுதும் சம்பவங்களில் இருந்து எந்த ஒரு இடத்திலும் வேறுபிரிக்கப்படவில்லை என அறிகிறோம். ஆனாலும், மத்தேயு இயேசுவை வெற்றி சிறந்த ராஜாவாக – ஒருநாளில் திரும்ப வர இருக்கின்ற ராஜாவாக - மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிற ராஜாவாகத் (24:30) தான் நமக்கு முன்வைக்கிறார்.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

மேலே நாம் கண்டது போல, மத்தேயு 5 சொற்பொழிவுகளைச் சுற்றி தன் சுவிசேஷ புத்தகத்தின் விபரங்களை தெரிவிப்பதை அமைத்திருக்கிறார். காலவரிசைப்படி விபரங்களைச் சொல்வதில் கவனம் செலுத்தாமல், ஏனைய சுவிசேஷ புத்தகங்களை ஒப்பிட்டு பார்ப்போமானால், சம்பவங்களை ஒழுங்கற்று மத்தேயு அமைத்திருப்பதைக் காணலாம். மத்தேயுவின் எழுத்துக்களில் கருப்பொருளுக்கும் உட்கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றாரே அல்லாமல் காலவரிசைப்படி அமைக்கவேண்டும் என்பதற்கல்ல என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். 

தீர்க்கதரிசன பத்திகளில் நாம் விளக்கம் அளிப்பதில் சவாலை சந்திக்கிறோம். இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவில் – உதாரணமாக, கி.பி.70யில் வன்முறையாக ஆலயம் இடிக்கப்பட்டுப்போகும் என்பதை விளக்க சில உருவங்கள் விவரிக்கப்படுகின்றது. சிலர் மத்தேயு 24:34-ல் ”இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இருக்கின்றகின்ற படியால் - ரோமர்கள் வெற்றி சிறந்த நாட்களில் நிறைவேறிவிட்டன – உண்மையில் சொல்லப்பட்ட நாட்களில் இல்லாது அதற்கும் முன்பே நிறைவேறிவிட்டன என்கிறனர். இதனை ”முன்னோடிவாதம்” என்று கூறுகின்றனர். இப்படி கூறுவது விளக்கம் அளிப்பதில் உள்ள தவறு – சோல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளில் ஆவிக்குரிய பொருள் எடுத்துக் கொள்கிறோம் என்றுச் சொல்லிக்கொண்டு - உண்மையான அர்த்தத்தை விட்டு விலகிச் செல்வது தவறு; வரிசைப்படி, வரலாற்றுப்படி சொல்லப்பட்ட இடத்தின் இலக்கண வரம்பிற்குள் நின்று முக்கியமான தீர்க்கதரிசனங்களுக்கு விளக்கம் அளிப்பது, விளக்கம் அளிப்பதில் நிலைத்தன்மையை, எதிர்காலத்திற்குரிய புரிந்துகொள்ளுதலை சரியாக உருவாக்குகிறது. 

சுருக்கம்

I. (முன்னுரை) ராஜாவின் வருகை (1:1-4:25)
அ. அவரின் பிறப்பு (1:1-2:23)
1. அவரின் பரம்பரை (1:1-17) 
2. அவரின் வருகை (1:18-25)
3. அவரின் எதிரிகள் (2:13-23)
 
ஆ. அவரின் பொது மக்கள் ஊழிய பிரவேசம் (3:1 -4:25)
1. அவரின் முன்னோடிகள் (3:1-12)
2. அவரின் ஞானஸ்நானம் (3:13-17)
3. அவரின் சோதனை (4:1-11) 
4. அவரின் ஊழியத்தின் ஆரம்ப காலம் (4:12-25)


II. ராஜாவின் அதிகாரம் (5:1 – 7:29)
அ. சொற்பொழிவு 1 மலைப்பிரசங்கம் (5:1 -7:29)
1. நீதியும் மனமகிழ்ச்சியும் (5:1-12)
2. நீதியும் சீஷத்துவமும் (5:13-16)
3. நீதியும் வேதாகம வசனங்களும் (5:17-20)
4. நீதியும் ஒழுக்கமும் (5:21-48)
5. நீதியும் நடைமுறை மார்க்கமும் (6:1-18)
6. நீதியும் இம்மைக்குரியவைகளும் (6:19-34)
7. நீதியும் மனுஷ உறவுகளும் (7:1-12)
8. நீதியும் இரட்சிப்பும் (7:13-29)
 
ஆ. விபரம் 1 நிரூபிக்கும் அற்புதங்கள் (8:1 – 9:38)
1. தொழுநோயாளி சுத்தமாகுதல் (8:1-4)
2. நூற்றுக்கதிபதி வேலைக்காரன் சுகம் பெறுதல் (8:5-13)
3. பேதுருவின் மாமி சுகம் பெறுதல் (8:14,15)
4. பெரும் கூட்டத்தினர் சுகம் பெறுதல் (8:16-22)
5. காற்றையும் கடலையும் அதட்டுதல் (8:23-27)
6. பிசாசு பிடித்த இருவர் விடுவிக்கப்படுதல் (8:28-34)
7. பிடிவாதக்காரன் மன்னிக்கப்பெற்று சுகம் பெறுதல் (9:1-8)
8. ஒரு ஆயக்காரன் அழைப்பைபெறுதல் (8:9-13)
9. ஒரு கேள்விக்கு பதில் அளிக்கப்படுதல் (9:14-17)
10.மரித்த பெண் உயிரோடு எழுப்பபடுதல் (9:18-26)
11.இரண்டு குருடர்கள் பார்வையடைதல் (9:27-31)
12. ஊமையன் பேசுதல் (9:32-34)
13. பெரும் கூட்ட்த்தினரை மனதுருக்கத்துடன் பார்த்தல் (9:35-36)
 
III ராஜாவின் நிகழ்ச்சிநிரல் (10:1 -12:50)
அ. சொற்பொழிவு 2 : பன்னிரண்டு சீஷர்களை நியமித்தல் (10:1-42)
1. எஜமானரின் ஆட்கள் (10:1-4)
2. சீஷர்களை அனுப்பிவிடல் (10:5-23)
3. சீஷத்துவத்தின் தரக்குறியீடு (10:24-42) 
 
ஆ. விபரம் 2 ராஜாவின் பணி (11:1-12:50)
1.யோவான்ஸ்நானகனின் சீஷர்களுக்கு இயேசுவின் அடையாளம் உறுதிபடுத்தப்படுதல் (11:1-19)
2. மனம்வருந்தாதவர்களுக்கு ஐயோ! (11:20-24)
3. வருத்தப்படுகிறவர்களுக்கு இளைப்பாறுதலை தருதல் (11:25-30)
4. ஓய்வுநாளுக்கும் ஆண்டவர் என்று உறூதியாக கூறுதல் (12:1-13)
5. யூத தலைவர்கள் எதிர்ப்பை தூண்டுதல் (12:14-45)
6. ஆவிக்குரிய வழிமரபினால் நித்திய உறவினை நிலைநாட்டுதல் (12:46-50)
 
IV. ராஜாவின் எதிராளிகள் (13:1 – 17:27)
அ. சொற்பொழிவு 3 ராஜ்யத்தின் உவமைகள் (13:1-52)
1. நிலங்கள் (13:1-23)
2. கோதுமையும் களையும் (13:24-30; 34-43)
3. கடுகு விதை (13:31,32)
4. புளித்த மா (13:33)
5. மறைந்திருக்கும் பொக்கிஷம் (13:44)
6. விலையேறப்பெற்ற முத்து (13:35,46)
7. சேர்த்து வாரிக்கொள்ளும் வலை (13:47-50)
8. வீட்டெஜமானாகிய மனுஷன் (13:51,52)
 
ஆ. விபரம் 3 ராஜ்யத்தில் முரண்பாடு (13:53-17:27)
1. நாசரேத் ராஜாவை நிராகரித்தல் (13:53-58)
2. ஏரோது யோவான் ஸ்நானகரைக் கொலைசெய்தல் (14”1-12)
3. இயேசு 5000 பேரைப் போஷித்தல் (14:13-21)
4. இயேசு கடலின் மேல் நடத்தல் (14:22-33)
5. பெருந்திரளான மக்கள் சுகமளிக்க வேண்டி வருதல் (14:34-36)
6. வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடம் சவால் விடுதல் (15:1-20)
7. சீதோன் பட்டணத்தில் இருக்கும் கானானிய ஸ்திரி விசுவாசித்தல் (15:21-28)
8. இயேசு பெருந்திரளான ஜனத்தாருக்கு சுகமளித்தல் (15:29-31)
9. இயேசு 4000 பேரை போஷித்தல் (15:32-39)
10. பரிசேயரும் சதுசேயரும் ஒரு அடையாளத்தைத் தேடுதல் (16:1-12)
11. பேதுரு இயேசுவை அறிக்கை செய்தல் (16:13-20)
12. இயேசு தன் மரணத்தை முன்னறிவித்தல் (16:21-28)
13. இயேசு தம் மகிமையை வெளிப்படுத்துதல் (17:1-13)
14. இயேசு ஒரு சிறுபிள்ளையைச் சுகப்படுத்துதல் (17:41-21)
15. இயேசு தான் காட்டிக்கொடுக்கப்படுவேன் என்பதை முன்னரே தெரிவித்தல் (17:22,23)
16. இயேசு ஆலய வரியினை கட்டுதல் (17:24-27)
 
V ராஜாவின் நிர்வாகம் (16:1 -18:1-35)
அ. சொற்பொழிவு : விசுவாசி சிறுபிள்ளையைப் போன்றவன் (18:1-35)
1. சிறுபிள்ளையைப் போன்று விசுவாசிக்க அழைப்பு (18:1-6)
2. குற்றங்களுக்கு விரோதமாக எச்சரிப்பு (19:7-0)
3. காணாமல் போன ஆட்டைக் குறித்த உவமை (18:10-14)
4. சபை ஒழுக்கத்திற்கு முன்மாதிரி (18:15-20)
5. மன்னிப்பை குறித்த பாடம் (18:21-25)
 
ஆ. விபரம் 4: எருசலேம் ஊழியம் (19:1-23:39)
1. சில ராஜரீக பாடங்கள் (19:1 – 20:28)
அ. விவாகரத்து குறித்து (19:1-10)
ஆ. பிரம்மச்சாரியத்தைக் குறித்து (19:11,12)
இ. பிள்ளைகள் குறித்து (19:13-15)
ஈ. சரணடைதல் குறித்து (19:16-20)
உ. யார் ரட்சிக்கப்படக்கூடும் என்பது குறித்து (19:23-39)
ஊ ராஜ்யத்தில் யாவரும் சமம் என்பது குறித்து (20:1-16)
எ. அவருடைய மரணம் குறித்து (20:17-18)
ஏ. உண்மையில் யார் பெரியவர் என்பது குறித்து (20:20-28)
 
2. சில ராஜரீக செயல்கள் (20:29-34)
அ. இரண்டு குருடர்களை அவர் பார்வையடையச் செய்கிறார் (20:29-34)
ஆ. வழிபடுதலை ஏற்றுக்கொள்கிறார் (21:1-11)
இ. தேவாலயத்தைச் சுத்தப்படுத்துகிறார் (21:12-27)
ஈ. அத்திமரத்தை சபிக்கிறார் (21:18-22)
உ. ஒரு சவாலுக்கு பதில் அளிக்கிறார் (21:23-27)
 
3. சில ராஜரீக உவமைகள் (21:28-22:14)
அ. இரண்டு குமாரர்கள் (21:28-32)
ஆ. பொல்லாத திராட்சைத் தோட்டக்காரர்கள் (21:33-46)\
இ. கலியாண விருந்து (22:1-14)
 
4. சில ராஜரீக பதில்கள் (22:15-46)
அ. ஏரோதியரிடம்: வரிசெலுத்துவது குறித்து (22:15-22)
ஆ. சதுசேயர்களுக்கு உயிர்த்தெழுதலைக் குறித்து (22:23=33)
இ. வேதபாரகர்களிடம்: முதல் மற்றும் பிரதான கட்டளை குறித்து (22:34-40)
ஈ. பரிசேயர்களிடம்: தாவீதின் பெரிய குமாரன் குறித்து (22:41-46)
 
5. சில ராஜரீக பிரகடனங்கள் (23:1-39)
அ. வேதபாரகர்களுக்கும் பரிசேயர்களுக்கும் ஐயோ (23:1-36)
ஆ, எருசலேமுக்கு ஐயோ (23:37-39)
 
VI ராஜா பலியாகசெலுத்தப்படுதல் (24:1 – 25:36)
அ. சொற்பொழிவு 5: ஒலிவ மலை சொற்பொழிவு (24:1 -25:46)
1. ஆலயம் தகர்க்கபடுதல் (24:1,2)
2. காலத்தின் அடையாளங்கள் (24:3-31)
3. அத்திமரத்தின் உவமை (25:32-35)
4. நோவாவின் பாடம் (24:36-44)
5. இரண்டு வேலையாட்கள் உவமை (24:51-51)
6. பத்து கன்னிகைகள் உவமை (25:1-13)
7. தாலந்துகள் உவமை (25:14-30)
8. தேசங்கள் நியாயம்தீர்க்கப்படுதல் (25:31-36)
 
ஆ. விபரம் 5: சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதல் (26:1-28:15)
1. ராஜாவை கொல்ல திட்டம் தீட்டுதல் (26:1-5)
2. மரியாளின் அபிஷேகம் (26:6-13)
3. யூதாஸ் காட்டிக்கொடுத்தல் (26:14-16)
4. பஸ்கா பண்டிகை (26:17-30)
5. பேதுரு மறுதலிப்பான் என்று முன்னமே உரைத்தல் (26:31-35)
6. இயேசுவின் மனவேதனை (26:36-46)
7. இயேசு கைது செய்யப்படல் (26:47-56)
8. சனகெரிப்பு சங்கத்தின் முன் விசாரிக்கப்படுதல் (26:57-68)
9. பேதுரு மறுதலித்தல் (26:69-75)
10. யூதாஸ் நான்று கொண்டு மடிதல் (27:1-10)
11. பிலாத்துவின் முன்பு விசாரிக்கப்படுதல் (27:11-26)
12. சேனைவீரர்களின் கேலிபேச்சு (27:27-31)
13. சிலுவையில் அறையப்படுதல் (27:32-56)
14. அடக்கம் செய்யப்படுதல் (27:57-66)
15. உயிர்த்தெழுதல் (28:1-15)
 
VII (இறுதியுரை) ராஜாவின் நிர்ணயம் (28:15-20)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.