வேதாகம வரலாறுகள்

ஒபதியா

தலைப்பு: 

இந்த புத்தகம் தரிசனத்தைப் பெற்ற தீர்க்கதரிசியின் பெயரினையே தலைப்பாகப் பெற்றது (1:1). ஒபதியா என்றால் “கர்த்தருடைய சேவகன்” என்று அர்த்தம். இந்த பெயர், பழைய ஏற்பாட்டில் 20 தடவைக்கும் மேலாக, வேறு நபர்களைக் குறிக்கும் அர்த்தத்தில் வருகிறது. பழைய ஏற்பாட்டில் உள்ள மிகச்சுருக்கமான புத்தகம் ஒபதியா. இப்புத்தகத்தில் இருந்து புதியஏற்பாட்டில் எந்தவொரு மேற்கோளும் காட்டப்படவில்லை.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

ஆசிரியர் குறித்த தகவல் எதுவும் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. பழைய ஏற்பாட்டில் நாம் இதர இடங்களில் காணும் இதே பெயர் கொண்டவர்களும் இந்த தீர்க்கதரிசியைத் தான் குறிப்பிடுகின்றனரா என்பதுவும் தெரியவில்லை. இவர்  எருசலேம், யூதா மற்றும் சீயோன் என அடிக்கடி குறிப்பிடுவது இவர் தென் தேசத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது (10-12,17,21). ஒபதியா ஒருவேளை எலியா மற்றும் எலிசா தீர்க்கதரிசிகளின் சமகாலத்தவராக இருந்திருக்கலாம்.

வசனங்கள் 10-14-ல் ஏதோமியர் எருசலேமை தாக்கியதுடன் சம்பந்தப்பட்டிப்பதை நாம் அறிந்திருந்தாலும், எழுதப்பட்டகாலத்தை தீர்மானிப்பது கடினமானதாகவே இருக்கிறது. தாக்குதலுக்கு அடுத்த குறுகிய காலத்திலேயே ஒபதியா இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம் எனத் தெளிவாகிறது. பழைய ஏற்பாட்டு வரலாற்றில் எருசலேம் மீது 4 முக்கிய  படையெடுப்பு நடந்திருக்கிறது. 1) கி.மு. 925-ல்  ஷிஷாக் என்ற எகிப்தின் ராஜா ரெகோபெயாமின் ஆட்சிகாலத்தில் (1ராஜா. 14:25,26; 2நாளா.12); 2) பெலிஸ்தியரும் அராபியரும் சேர்ந்து கி.மு. 848-ல் யூதாவின் யெகோராம் (2நாளா.21:8-20) அரசாண்ட காலத்தில்; 3) கி.மு.790-ல் இஸ்ரவேலின் யோவகாஸ் (2ராஜா.14; 2 நாளா.25); மற்றும் 4) பாபிலோனிய ராஜா, நெபுகாத்நேச்சார் கி.மு.586-ல் எருசலேமின் வீழ்ச்சியின்போது. இந்த நான்கு படையெடுப்புகளில் இரண்டாம் மற்றும் நான்காம் படையெடுப்பு வரலாற்றின் தகவலுடன் பொருந்துவதாக இருக்கிறது. நெபுகாத்தேசாரின் காலத்தில்தான் எருசலேம் முழுவதும் இடிக்கப்பட்டது, ஒபதியா எருசலேம் முழுமையும் இடிக்கப்பட்டது என தெரிவிக்காதிருக்கிறபடியால் இரண்டாம் படையெடுப்பு ஒபதியாவின் காலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  மேலுமான காரணங்கள்: நெபுகாத்நேச்சார் ராஜா எருசலேமை முற்றிலும் தகர்த்தபோது ஏதோமியரும் அதில் ஈடுபட்டிருந்தனர் (சங் 137; புலம்பல் 4:21). ஒபதியா பாபிலோனியரின் பெயரை ஒரு இடத்திலும்  குறிப்பிடவில்லை (ஆனால் மற்ற தீர்க்கதரிசிகள் எருசலேமின் வீழ்ச்சி குறித்து எழுதியுள்ளனர்). ஒபதியா தேவாலயம் இடிக்கப்பட்டதை குறித்தோ அல்லது ஜனங்கள் நாடு கடத்தப்பட்டதை குறித்தோ எதுவும் எழுதவில்லை. உண்மையில், சிறைபிடிக்கப்பட்டவர்கள் பாபிலோனின் தென்மேற்கு பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள், பாபிலோனின் கிழக்கு பகுதிக்கு அல்ல (வசனம் 20).

பின்னணி மற்றும் அமைப்பு

ஈசாக்கு மற்றும் ரெபெக்காள் (ஆதி.25:24-26) தம்பதியினரின் இரட்டைகுழந்தையில் முதல் பிறந்தவர் ஏசாவின் (கருவில் இருக்கும்போதே ஏசா, யாக்கோபுடன் மோதிக் கொண்டிருந்தவன்; ஆதி. 25:22) வம்சவழியில் வந்தவர்கள் ஏதோமியர்கள். ஏசா சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் (ஆதி.25:25). அவனுக்கு ஏதோம் என்றும் பெயர், இதன் அர்த்தம் “சிகப்பு”. ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்டு சிகப்பு கூழைத் தா என வாங்கி குடித்ததால் இந்தப் பெயர் வந்தது (ஆதி.25:30). தேவனுடைய உடன்படிக்கையை மதிக்காமல் இரண்டு கானானிய பெண்களை மணந்தான் (ஆதி.26:34) அதற்குப்பின் இஸ்மவேலின் மகளை மணந்தார் (ஆதி.28:9). தேவனுடன் உடன்படிக்கையில் இல்லாத பெண்களை மணந்தது, அவனுடைய தகப்பனின் ஆசீர்வாதத்தை யாக்கோபு தந்திரமாக வந்து பெற்றுக் கொள்ள விட்டுக் கொடுத்தது அவனை வனசஞ்சாரியாக மாற்றியது (ஆதி.25:27, 27:38-40). சாக்கடலின் தெற்குபகுதியில் இருக்கும் கரடுமுரடான மலைப்பகுதியில் ஏசா சஞ்சரித்து வந்தான் என்று அறிகிறோம் (ஆதி.33:16; 36:8,9; உபா.2:4,5). அந்தப் பகுதி ஏதோம் (கிரேக்க மொழியில் “இதுமேயா” என்று அழைக்கப்படுகிறது). அகோபா வளைகுடா பகுதிக்கு 100 மைல் தெற்கே 40 மைல் பரப்பிற்கு விரிந்து இருக்கும் இடம் இது. பிரபலமான “ராஜபாதை” (எண்.20:17) வடக்கு ஆப்பிரிக்காவை ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களுடன் இணைக்கும் ஒட்டக வழிப்பாதை இந்த கிழக்கு பீடபூமி வழியாகச் செல்கிறது. கர்ப்பத்தில் பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு ஏசாவும் யாக்கோபும் பிறந்தது இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது (ஆதி.25:23) என்னும் கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறுவதற்கு பலத்த பிண்ணனியாக அமைந்துள்ளது.  அவர்களின் வழித்தோன்றல்களாக இருந்த இஸ்ரவேல் மற்றும் ஏதோம் தேசத்தார் நிரந்தர எதிரிகளாக இருந்தனர். இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறிய போது,  அவனது சகோதரனான யாக்கோபு சாக்கடலின் தெற்கே அமைந்துள்ள ஏதோமின் தேசம் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது (எண்.20:14-21). இருப்பினும், இஸ்ரவேலர் ஏதோமியரிடத்தில் அன்பாக இருக்கவேண்டும் என தேவன் கட்டளையிட்டிருந்தார் (உபா.23:7,8). ஏதோமியர் இஸ்ரவேலருடன் தவறாக நடந்து கொண்டபடியால், ஒபதியா- தேவனிடத்தில் இருந்து தரிசனத்தைப் பெற்றதும், ஏதோமியரின் குற்றங்களை அவர்களிடம் விவரித்து அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுப் போவார்கள் என்பதனை அறிவிக்க அனுப்பப்பட்டார்.

ஏதோமியர் சவுலை எதிர்த்தனர் (கி.மு.1043-1011), ஆனால் அவர்கள் தாவீதினால் கி.மு 1011-971 வரைக்கும் சாலமோனால் கி.மு.971-931  வரைக்கும் அடக்கி வைக்கப்பட்டனர். யெகோசபாத்திற்கு விரோதமாக யுத்தம் செய்தனர் (கி.மு.873-848) யெஹோராமை (கி.மு.853-841) வெற்றிகரமாக எதிர்த்து நின்றனர். ஏதோமியர் யூதாவின் ராஜா அமத்சியாவின்  (கி.மு.796-767) காலத்தில் முறியடிக்கப்பட்டனர் எனினும் ஆகாஸ் ராஜா (கி.மு.735-715) அரசாண்டபோது தங்கள் சுதந்திரத்தை மீட்டுக்கொண்டனர். ஏதோம் பின்நாட்களில் அசீரியா மற்றும் பாபிலோன் ராஜ்யத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது; கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் நபாட்டியன்களால் (Nabateans) எதோமியர் அவர்களது பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்து வெளியேறியவர்கள் இஸ்ரவேலின் தெற்கு பகுதியில் குடியேறினர், அந்த பகுதியில் இதுமேயர் என்று அழைக்கப்பட்டனர். ரோம சாம்ராஜ்யத்தில் கி.பி. 37-ல் இதுமேயனாகிய ஏரோது ராஜா யூதர்களுக்கு ராஜாவாகிறார். ஒருவிதத்தில் ஏசா மற்றும் யாக்கோபிற்கு இடையில் இருந்த பகை, ஏரோது இயேசுவை கொல்ல வகை தேடியதில் தொடர்கிறது எனக் காண்கிறோம்.  ரோமர்களுக்கு விரோதமாக மேற்கொண்ட யுத்தத்தில் இதுமேயர்கள் பங்கு கொண்டனர், ஆனால் கி.பி. 70-ல் தீத்து இராயனால் யூதர்களோடு சேர்ந்து இதுமேயர்களும் தோற்கடிக்கப்பட்டனர். முரண்பாடான ஒரு விஷயத்தை இங்கு காண்கிறோம், கி.மு. 586-ல் எருசலேமை அழித்துப் போட்டோம் என்று மெச்சினவர்கள் (சங்கீதம் 137:7) கி.பி. 70-ல் அதனை பாதுக்காக்க போராடிய போது தோற்றுப்போனார்கள் என்று காண்கிறோம். அந்நாட்களுக்குப் பின் ஏதோமியரைக் குறித்து குறிப்பு நாம் எங்கும் காணவில்லை. ஒபதியா தீர்க்கதரிசனமாக வசனம் 10-ல்  ”நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப் போவாய்” என்று சொல்லியபடியே ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி பட்சிக்கப்பட்டுப் போனார்கள் (வசனம் 18).

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

ஆதியாகமம் 12:1-3-ல் சொல்லப்பட்டிருக்கும் சாபங்கள்/ஆசீர்வாதங்களின் ஆய்வு படிப்பே ஒபதியா புத்தகம், இதில் இரண்டு கருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றன. முதல் கருப்பொருள்: இஸ்ரவேலை சபித்ததினால் தேவன் ஏதோமியரை நியாயம் தீர்த்தத்து வெளிப்படையாக இது யூதாவிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது ஏதோமியரின் பெருமையினிமித்தமும் யூதாவின் வீழ்ச்சிக்கு காரணமாக ஏதோமியர் இருந்ததினிமித்தமும். கர்த்தர் தாமே நியாயம் தீர்ப்பார் என்று மீண்டும் உறுதியாக சொல்லப்பட்டிருந்தது. இரண்டாவது கருப்பொருள்: யூதாவின் மறு சீரமைப்பு, இதில் ஏதோமியரின் பகுதியை மீட்டெடுப்பதும் அடங்கும் (வசனம் 19-21; ஏசாயா 11:14).

யூதாவை ஒபதியா ஆசீர்வதித்த ஆசீர்வாதத்தில் ஏதோமின் மரணம் (வசனம் 1-14) தேசத்தின் நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றம் மற்றும் இறுதியில் இஸ்ரவேல் ஏதோம் தேசத்தை கைப்பற்றும் என்பவையும் அடங்கும் (வசனம் 15-21). 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

ஆச்சரியப்படுத்தும் வகையில், ஒபதியா 1-9 வசனங்களுக்கும் எரேமியா 49: 7-22 வசனங்களுக்கும் இடையில் ஒற்றுமை காணப்படுவதில் – எழுதின ஆக்கியோன் யார் யாரிடம் இருந்து கடன்வாங்கினர்கள் என்று தெரியவில்லை. பொதுவான ஆதாரம் என ஒன்று இராதபடியால், எரேமியா தான் ஒபதியாவிடம் இருந்து வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால், மேலே சொல்லப்பட்ட வசனங்கள் ஒபதியா புத்தகத்தில் ஒரே இடத்தில் இருக்கின்றன ஆனால் எரேமியா புத்தகத்தில் பல வசனங்களுக்குள் கலந்து இருக்கின்றன என்பது மேல் சொல்லும் கூற்றுக்கு சரியான ஒரு காரணமாக இருக்கலாம். 

சுருக்கம்

I. ஏதோமியரை தேவன் நியாயம் தீர்த்தல் (1-14)
அ. ஏதோமின் தண்டனை (1-9)
ஆ. ஏதோமின் குற்றங்கள் (10-14)
II தேசங்கள் மீது தேவனின் நியாயத்தீர்ப்பு (15,16)
III. இஸ்ரவேலை தேவன் மீண்டும் சீரமைத்தல் (17-21)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.