சாலொமோனின் உன்னதப்பாட்டு
தலைப்பு:
எபிரேய மாசோரெடிக் உரை - யூத வேதாகமத்தின் பாரம்பரிய உரையைபின்பற்றி - கிரேக்க செப்டுவஜிண்ட் (LXX) மற்றும் லத்தீன் வுல்கேட் (vg.) மொழிபெயர்ப்புக்கள் - 1:1 வசனத்தில் உள்ள முதல் இரண்டு வார்த்தைகள் “பாடல்களின் பாடல்”, உன்னதப்பாட்டு என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள பெயரை தலைப்பாகக் கொண்டுள்ளது. 1:1 வசனத்தின் ஒட்டுமொத்த பொருளான “உன்னதப்பாட்டு” என்ற தலைப்பைப் பெற்றுள்ளன. யாத்திராகமம் 26:33,34 மகாபரிசுத்தஸ்தலம் எனவும் வெளிப்படுத்தல் 19:16 - “ராஜாதிராஜா” என மிகைப்படுத்துவதைக் காண்கிறோம். அதனைப்போன்றே, ”உன்னத” என்ற மிகைப்படுத்தும் வார்த்தை சாலமோனின் 1005 பாட்டுக்களில் (1ராஜா.4:32) இந்த பாடல் உன்னதமானது எனக் காண்பிக்கிறது. ”பாடல்” என்ற வார்த்தை கர்த்தரை மகிமைப்படுத்தும் இசை என்ற அர்த்தத்தையே அதிகமான இடங்களில் குறிக்கிறது (உறுதிப்படுத்தும் வார்த்தைகள் 1 நாளா.6:32,32; சங்கீதம் 33:3;40:3; 144:9).
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
ஒன்று சேர்க்கப்பட்ட ராஜ்ஜியங்களின் ராஜாவாக 40 ஆண்டுகள் (கி.மு. 971-931) அரசாண்ட சாலொமோனின் பெயர் ஏழுமுறை இந்த புத்தகத்தில் தோன்றுகிறது (1:1,5; 3:7,9,1; 8:11,12). அவருடைய எழுதும் திறமைகள், இசையில் இயல்பான திறன் (1ராஜா.4:32), 1:1 வசனம் சாலொமோன் பாடின என்று உறுதியாக சொல்வதால், வேதாகமத்தின் இந்த பகுதி சாலொமோனின் ஆட்சிகாலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். சாலொமோனின் விளக்கங்கள் மற்றும் பிரயாண குறிப்புகளில் வடக்கு மற்றும் தெற்கு பட்டணங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், எழுதப்படிருக்கலாம் என்று எண்ணப்படும் காலமும், உண்மையில் எழுதப்பட்ட காலமும் சாலமோனின் ஆட்சிகாலம் முடிவடைவதற்கு முன் இருந்த ஒன்றுசேர்ந்த ராஜ்ஜிய காலத்தையே குறிக்கிறது. வேதவாக்கியங்களின் இந்த பகுதி, ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட ஒரே பாடல் – அதாவது இதனை ஒன்றுபட்ட கவிதை மற்றும் ஞான இலக்கியமாக காண்கிறோமே அல்லாமல், ஆசிரியர் இல்லாத, பொதுக்கருப்பொருள் இல்லாத காதல் பாடல்களின் வரிசை என எடுத்துக்கொள்ள முடியாது.
பிண்ணனி மற்றும் அமைப்பு
இந்த வியத்தகு மெய்-வாழ்வின் காதல் பாடலில், இரண்டு நபர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சாலொமோன் மற்றும் அவருடைய அரசாட்சி 5 முறை குறிப்பிடப்பட்டுள்ளது (1:4,12; 3:9,11; 7:5), அவர் “நேசராக” தோன்றுகிறார். “சூலமித்தியாள்” (6:13) என்ற நபர் குறித்து தெளிவான தகவல் இல்லை, அவள் கலிலேயாவின் கீழ் உள்ள இஸ்ரவேலில் இருந்து 3 பாகை வடக்கே இருக்கும் சூனேம் என்னும் பகுதியை சேர்ந்தவளாக இருந்திருக்கலாம். தாவீது ராஜாவுக்கு சேவை செய்த சூனேம் தேசத்து அபிசாக் ஆக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர் (1ராஜா1:1-4,15). சூனேம் பகுதியில் இருந்து பெயர் அறியப்படமுடியாத சாலொமோனால் வேலைக்கு அமர்த்தப்பட்டவளாக இருக்கலாம் எனவும் கருதலாம். அவள் சாலொமோனின் 699 மனைவிகள் மற்றும் 300 மறுமனையாட்டிகளைச் சேர்த்துக்கொண்டு (1ராஜா.11:3) பாவம் செய்வதற்கு முன் இருந்த சாலொமோனின் முதல் மனைவியாக இருந்திருக்கலாம் (பிரசங்கி 9:9).
இந்த புத்தகத்தில் வேறு சில குழுக்களின் சிறிய பங்களிப்புக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலாவது, “எருசலேமின் குமாரத்திகள்” எனப்படுவோர் சாலொமோனின் வீட்டு பணிவிடைக்காரர்களாக இருந்திருகலாம். அங்கங்கே காணப்படும் அவர்களின் வர்ணனைகள் (1:4b; 8:11; 3:6-11; 5:9; 6:1,10, 13a; 7:1-5; 8:5a). இரண்டாவது, 5:1-ல் நாம் காணும் உறுதிமொழி தம்பதியர் ஒன்றுசேர்ந்த போது உச்சரிக்கப்பட்ட தேவனின் ஆசீர்களாக இருக்கலாம். மூன்றாவது, சூனேமியாளின் சகோதரர்கள் பேசுவது (8:8,9).
காட்சி அமைப்பு: நகர்ப்புற மற்றும் கிராமப்புற காட்சிகள். சில காட்சிகள் சூனேமியாள் வாழ்ந்த இடம் (6:13) சாலொமோன் திராட்சைத்தோட்டங்களை நாட்டினதும், ஆடு முதலான திரண்ட ஆஸ்திகள் கொண்டிருந்த (பிரசங்கி 2:4-7) எருசலேமின் வடக்கு மலைப்பிரதேசத்தில் நிகழ்கின்றன. இதர சம்பவங்கள் சாலொமோனின் விவாகம் மற்றும் அதற்குப்பின் வாழ்ந்த சாலோமோனின் தங்குமிடம் இருந்த நகர்ப்புறத்தில் அடங்கியிருக்கின்றன(3:6-7:13).
முதல் மாரிகாலம் குறித்து 2:11-13-லும் இரண்டாவது மாரிகாலம் குறித்து 7:12-லும் காண்கிறோம். காலவரிசையில் இடைவெளி இல்லை என எடுத்துக் கொண்டால், உன்னதப்பாட்டின் சம்பவங்கள் நிறைவேறின காலம் ஒரு வருஷம், ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்க முடியாது.
இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்
சாலோமோனின் உன்னதபாடல்களின் 117 வசனங்களும் யூதர்களால் அவர்களின் புனித எழுத்துக்களின் ஒரு பங்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மெகில்லோத் அல்லது ஐந்து தோல்சுருள்கள் என்று அழைக்கப்படும் பழைய ஏற்பாட்டு புத்தகங்களாகிய – ரூத், எஸ்தர், பிரசங்கி மற்றும் புலம்பலுடன் சேர்க்கப்பட்டுள்ளது. யூதர்கள் பஸ்கா அன்று “மகாபரிசுத்தம்” என்று அழைத்து இந்த பாடலை பாடினர். ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், 8:6-ல் மறைமுகமாக உள்ளதைத் தவிர, வேறு எங்கும் தேவன் என்ற வார்த்தை இந்த பாடலில் எந்தவொரு இடத்திலும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. முறையான இறையியல் கருப்பொருள் எங்கும் வெளிப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் எந்தவொரு இடத்திலும் நேரடியாக உன்னதப்பாட்டு குறித்த குறிப்பு இல்லை (குறிப்பிடப்படாத இதர புத்தகங்கள் எஸ்தர், ஒபதியா மற்றும் நாகூம்).
துறவு பெற்று விலகியிருத்தல் மற்றும் விவாகத்திற்கு வெளியே காணப்படும் காம வக்கிரம செயல்கள் என்ற இரண்டு சிதைந்த தீவிரங்களுக்கு மாறாக, இந்த சாலொமோனின் பண்டைய கால காதல் பாட்டு திருமண பந்தத்தினால் உண்டாகும் அன்பு மற்றும் காதலில் உள்ள புனிதத்தை குறித்து உயர்வாக பேசுகிறது. ஏனைய வேதாகமவாக்கியங்களுடன் இசைந்து திருமணத்தைக் குறித்த தேவனின் திட்டம் மற்றும் கணவன் மனைவிக்கு இடையில் பாலுறவினால் உண்டாகும் புனிதத்தை உயர்வாக எடுத்துக்காட்டுகிறது. இந்த கருப்பொருளின் அடிப்படை வேதவாக்கியங்களுடன் சரிசமமாக நின்று, உரிமையுடன் தனது கருத்தினையும் தெரிவிக்கிறது. உதாரணமாக, ஆதி.2:24; சங்கீதம் 45; நீதிமொழிகள் 5:15-23; 1கொரி.7:1-5; 13:1-8; எபே. 5:18-33; கொலோ.3:18,19; மற்றும் 1பேதுரு3:1-7. எபிரேயர் 13:4, இந்த பாடல்களின் அடிப்படைக் கருத்தை “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என அழகாக எடுத்துக்காட்டுகிறது.
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
”உருவக” விளக்கம் அளிக்க முற்படுபவர்களால் இந்த பாடல் அனேக கறைபடிந்த விளக்கங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அவர்கள் இந்த பாடலுக்கு எந்த ஒரு வரலாற்று அடிப்படையும் இல்லை எனவும், இஸ்ரவேலைக் குறித்த தேவனின் அன்பு உடன்/அல்லது சபையைக் குறித்த கிறிஸ்துவின் அன்பினை குறித்து சித்தரிக்கிறது என அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். துதிபாடல்களில், கிறிஸ்துவே சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம் (2:1) என்ற வழிவிலகச் செய்யும் கருத்து இதில் இருந்தே உண்டாகிறது. ”வகைப்படுத்தும்” விளக்கமளித்தல் வரலாற்று உண்மையை அனுமதிக்கிறது. ஆனால், இது மணவாளராகிய கிறிஸ்து மணவாட்டியாகிய சபையினிடத்தில் காட்டும் அன்பையே இறுதியாக சித்தரிக்கிறது என முடிக்கிறது.
சாலொமோனின் உன்னதப்பாட்டிற்கு விளக்கம், நேரடியாக இருக்கும் அர்த்தத்தை எடுத்துக்கொண்டு, எப்படி நாம் வழக்கமாக கவிதை உருவகங்களுக்கு விளக்கம் அளிப்போமோ அப்படி விளக்கம் அளிப்பதே சாலச் சிறந்தது. இப்படிச் செய்வதற்கு கீழ்க்காணும் சாலொமோன் பற்றிய செய்திகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். 1) அவரின் அரசவை நாட்கள் 2) அவரது முதல் திருமணத்தின் ஆரம்ப நாட்கள், அதனைத் தொடர்ந்து 3) இந்த ராஜ தம்பதியினர் வாழ்க்கையின் நல்ல மற்றும் பொல்லாத நாட்களினால் முதிர்ச்சி அடைந்தது. உன்னதப்பாட்டு, ஆதியாகமம் 2:24-ல், வேதாகமம் ஆதியில் திருமணத்திற்கு கொடுத்த அறிவுரைகளின் மீதே கட்டுகிறது, இதினால், வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் திருமண இசைவிற்கு, மனரம்மியமான ஆவிக்குரிய இசையினை மீட்டுகிறது. மனித உறவில் மிகவும் விலையேறப்பெற்ற மதிப்பை பெற்றிருப்பது திருமண உறவு எனவும் இந்த நெருக்கமான உறவு தேவனின் காதல் மற்றும் அன்பு இவை இரண்டின் அடிப்படையில் கட்டப்பட்டது என்பதே திருமணம் குறித்த தேவனின் நோக்கம். இந்த அடிப்படை நோக்கத்தையும், 1பேதுரு3:7 கூறும், “அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால்” என்பதையும் நிரூபிக்க நம் கரங்களில் அளிக்கப்பட்டதே சாலொமோனின் உன்னதப்பாட்டு.
திருமண உறவில் காணப்படும் அந்தரங்கத்தினை மறைத்திடும் வண்ணம் இந்த புத்தகம் தேவனால் உருவகம் மற்றும் சொற்பொழிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசை, காதல் மற்றும் பேராவலின் மகிழ்ச்சி குறித்த பொதுவான நுண்ணறிவை நமக்கு தருவதற்காக காதல்-அன்பினை மிக அழகாக கவிதை மொழியில் எடுத்துக் கூறுகிறது. இந்த விதத்தில், இந்த பாடல்கள் திருமணபந்தத்தின் அன்பின் அற்புதத்தை அழகாக வெளிப்படுத்தும் அதேவேளையில், உணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்துக்களில் இருந்து தன்னை தூரப்படுத்திக்கொள்கிறது. இந்த புத்தகத்தின் கண்ணியத்தினை அடிப்படையாக இந்த புத்தகத்திற்கு விளக்கம் கொடுக்கும் பொழுது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதில் இல்லாத ஒன்றை உட்புகுத்தியும் வாசிக்க கூடாது.
சுருக்கம்
I. காதல்உறவு: “விட்டுபிரிதல்” (1:2-3:5) “Leaving”
அ. காதலர்களின் நினைவுகள் (1:2-2:7)
ஆ. காதலர்கள் “தங்களுக்குள் அன்பினை பரிமாறிக்கொள்ளுதல் (2:8-3:5)
II. விவாகம் “ஒன்றுசேர்தல்” (3:6-5:1) “Cleaving”
அ. ராஜரீக மணவாளன் (3:6-11)
ஆ விவாகம் முடிந்து இருவரும் ஒன்றாக முதல் இரவினில் சந்தித்தல் (4:1-5:1a)
இ. தேவனின் சம்மதம் (5:1b)
III திருமணம் - “நெசவுபோல் இசைதல்” (3:6-5:1) “Weaving”
அ. முதல் பெரிய கருத்துவேறுபாடு (5:2-6:3)
ஆ. மீட்டெடுத்தல் (6:4 -8:4)
ஈ. கிருபையில் வளர்தல் (8:5-14)