யாத்திராகமம் – என்று அழைக்கப்படும் மோசேயின் இரண்டாம் புத்தகம்
தலைப்பு: இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் இருந்து புறப்பட்டதே (19:1) இந்த புத்தகத்தில் மோலோங்கி நிற்கும் வரலாற்றுக் கருத்தாக இருந்தபடியால் பழைய ஏற்பாட்டின் கிரேக்க செப்டுவஜிண்ட் LXX மற்றும் லத்தீனின் வுல்கேட் பதிப்பும் மோசேயின் இரண்டாம் புத்தகத்திற்கு “யாத்திராகமம்” என்ற தலைப்பினைத் தந்தனர்.” ஆங்கில மொழிபெயர்ப்பிர்ல் “Now (and) these are the names of children of Isreal” என்று தொடங்குவதாலும், மேலும் இவ்வார்த்தைகளே எபிரேய வேதாகமத்திலும் தொடக்க வார்த்தைகளாக இருப்பதால் இந்த புத்தகம் மோசேயின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தினைத் தொடர்ந்து வரும் புத்தகம் என ஏற்றுக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறது. (தமிழ் மொழிபெயர்ப்பில் இந்த அமைப்பை காண முடியாது). இஸ்ரவேலின் புத்திரர்கள் எகிப்தை விட்டு “புறப்படுவார்கள்” அல்லது “வெளியேறுவார்கள்” என்பதை ஏறக்குறைய 350 வருடங்களுக்கு முன்னரே (கிமு 1804) தனது மரணப்படுக்கையில் இருக்கும் வேளையில் (கிமு 1445) கண்டு, பேசிய யோசேப்பின் விசுவாசத்தை எபிரேயர் 11:22 பாராட்டுகிறது.
ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
எந்தவித தயக்கமும் இல்லாமல், மோசே தான் இதன் ஆசிரியர் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மோசே - தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றி, “கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதி வைத்தார் (யாத் 24:4). இவற்றில் அமலேக்கியருடன் ஆன யுத்தம் (17:14), பத்து கட்டளைகள் (34:4, 27-29) மற்றும் உடன்படிக்கையின் புத்தகம் அடங்கும். மோசே தான் இதனை எழுதியவர் என்பது ஏனைய ஐந்து ஆகம புத்தகங்களும் உறுதியாகச் சொல்கின்றன. எண்.33:2 ல் “அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்” எனவும் உபாகமம் 31:9 ல் “மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி” எனவும் பார்க்கிறோம்.
பழைய ஏற்பாட்டின் மேற்சொன்ன வசனங்கள் மோசே தான் இதன் ஆசிரியர் எனக் கூறியதை இந்த வசனங்களும் (யோசுவா 1:7,8; 8:31,32; 1 ராஜா.2:3; 2 ராஜா.14:6; நெகே.13:1; தானியேல் 9:11-13; மற்றும் மல்கியா 4:4) உறுதிப்படுத்துகின்றன. புதிய ஏற்பாட்டும், மாற்கு 12:26-ல் தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில் மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? என யாத்திராகமம் 3:6-ஐ எடுத்துப் பயன்படுத்துவதில் இருந்தும், லூக்கா 2:22,23-ல் “மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே” என மேற்கோள் காட்டுவதினால் புதிய ஏற்பாடும் மோசே தான் ஆசிரியர் என ஒப்புக்கொள்கிறது. மேலும் இயேசுவும் “மோசேயும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறானே” என மோசேயைக் குறிப்பிட்டு அறிக்கையிடுகிறார். (யோவான் 5:46:47).
தனது 80ஆம் வயதில் தொடங்கி 120 வயது வரை (யாத்.7:7, உபாக.34:7) இஸ்ரவேலின் தலைவராக இருந்த 40 ஆண்டு கால இடைவெளியில் மோசே தான் எழுதிய ஐந்து புத்தகங்களில் இந்த இரண்டாம் புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வோமானால், மோவாப் சமவெளிப்பகுதியில் நெபோ மலைப்பகுதிக்கு வெளியேறி வந்த பின்னும் அவரது மரணத்திற்கு முன்னும் எழுதியிருக்க வேண்டும். எகிப்தைவிட்டு வெளியேறி வந்த நாட்கள் (1445 கிமு) - இப்புத்தகம் எழுதப்பட்டதால், இப்புத்தகம் எழுதப்பட்ட காலம் கி.மு 15-ஆம் நூற்றாண்டு எனத் தீர்மானிக்க உதவுகிறது.
சாலமோன் ராஜாவின் ஆட்சிக்காலத்தின் நான்காம் ஆண்டில் அவர் தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார் (கிமு 966/65). இது எகிப்தில் இருந்து வெளியேறிய நாட்களில் இருந்து 480 ஆண்டுகளுக்குப் பிறகு (1ராஜாக்கள் 6:1) என்பதால், கிமு 1445-ல் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம். யெப்தாவின் நாட்களில், இஸ்ரவேலர் எஸ்போனில் 300 ஆண்டுகள் குடியிருந்தனர் - என்று யெப்தா குறித்து வைத்துள்ளார். யெப்தாவின் நாட்களில் இருந்து முன்னும் பின்னுமாகவும், அந்நியர்கள் அடிமைப்படுத்தல், நியாயாதிபதிகள் மற்றும் ராஜாக்கள் காலம், வனாந்திரத்தில் சுற்றி அலைந்த காலம், யோசுவாவின் தலைமையின் கீழ் வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்து கைப்பற்றிய நாட்கள் இவைகளை வைத்து, 480 ஆண்டுகள் எனக் கணக்கிட்டதை உறுதிபடுத்தியுள்ளனர். வேதவசனம் – “இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் 430 வருஷம்” (12:40) என்பதில் இருந்து யாக்கோபும் அவனது நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினர் எகிப்திற்குள் பிரவேசித்தது 430 வருஷங்களுக்கு முன் (கிமு.1875) என அறிகிறோம். இதினால் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், யோசேப்பு வாழ்ந்த காலம் 12-வது ராஜவம்சம் எனவும், அது எகிப்து ராஜ்ய வரலாற்றின் நடுத்தர காலம் எனவும், மேலும், மோசேயின் நாட்கள் மற்றும் இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்தில் குடியிருந்ததில் இறுதி மற்றும் அடிமைதனத்திற்கு உட்பட்டிருந்த ஆண்டுகள், நடுத்தர காலம் எனவும், 18-வது ராஜவம்சம் அல்லது புதிய ராஜ்யத்தின் காலம் என்றும் குறிப்பிடுகின்றனர். சிலகாலம் எகிப்தில் குழப்பமான சூழ்நிலை இருந்த போது ஹைக்ஸோஸ் (Hyksos, கிமு. 1730 -1570) என்னும் அன்னிய தேசத்தார் படையெடுத்து வந்தனர், யோசேப்பு எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக ஆனதினால் (ஆதி:45:8) அவர்களால் முழு எகிப்து தேசத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியவில்லை. ஹைக்ஸோஸ் - கூட்டு வில்லை (composite bow) அறிமுகம் செய்த செமிட்டிக் கலப்பினத்தவர்கள். இந்த போர்க்கருவிகளைச் செயல்படுத்தியது இஸ்ரவேலர் எகிப்தில் இருந்து வெளியேறுவதைச் சாத்தியமாக்கியது.
பிண்ணனி மற்றும் அமைப்பு
எகிப்தின் பதினெட்டாவது ராஜவம்சத்தின் காலம், எகிப்திலிருந்து இஸ்ரவேலின் வியத்தகு வெளியேற்றம் நடைபெற்ற நாட்கள் – எகிப்து வரலாற்றில் வலுவிழந்த அல்லது தெளிவற்ற காலக்கட்டம் எனக் கூறமுடியாது. உதாரணமாக, தட்மோஸ்-III, அடக்குமுறை பார்வோன் “பண்டைய கால எகிப்தின் நெப்போலியன்” என அழைக்கப்பட்டவன், எகிப்தின் இயற்கையான எல்லைகளுக்கும் அப்பால் அவனது ஆட்சியை விரிவாக்கினான். இதே ராஜவம்சம்தான், நூற்றாண்டுகளுக்கு முன் அமோஸே-I-ன் தலைமையின் கீழ் ஹைக்ஸோஸ் ராஜாக்களை நாட்டை விட்டு துரத்தி, நாட்டின் பொருளாதார, ராணுவ, மற்றும் இராஜதந்திரத்தில் வளரச்செய்யும்படி மாற்றினர். எகிப்தை விட்டு இஸ்ரவேலர் வெளியேறின போது, எகிப்து பலமுள்ள தேசமாக இருந்தது; பலவீனமான தேசமாக இல்லை.
மோசே, கிமு 1525-ஆம் ஆண்டு பிறந்தவர் (அவருக்கு கிமு.1445-ல், 80 வயது) மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு” (அப்.7:22), தட்மோஸ்-I, II மற்றும் ராஜஸ்திரீ ஹட்ஷுப் சூட் (Hatshepsut) அடங்கிய பார்வோன்களின் அரசவையில் 40 ஆண்டுகள் வாழ்ந்தான் (அப்.7:23). தட்மோஸ்-III ஆண்ட காலத்தில் மீதியானியர்கள் வெளியே சென்ற காலத்தில் தனக்குத் தானே நியமித்துக்கொண்டு, மேலும் 40 வருடங்கள் வாழ்ந்தான் (அப்.7:30). பின்னர் யாத்திராகமத்தில் நாம் காணும் அமென்ஹோதேப்-II (Amenhotep) பார்வோனின் ஆரம்ப ஆட்சி காலத்தில், மோசே, தேவனின் வழிநடத்துதலின்படி இஸ்ரவேல் ஜனத்தாருக்கு தலைவனாக ஆனார். பராக்கிரமசாலியான பார்வோனின் முன் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவனாக நிற்கவும், சீனாய் வனாந்திரத்தின் வழியாக அவரது கடைசி 40 ஆண்டுகள் ஜனங்களை வழிநடத்த வல்லவனாக மாற்ற அவர் எகிப்தில் கல்வி பயின்றதையும், மீதியானில் இருந்து வெளியேறியது, இவ்விரண்டையும் தேவன் பயன்படுத்தினார் (அப்.7:36). மோசேயின் கோபம் மற்றும் அவமதிப்பின் நிமித்தமாக (எண். 20:1-3) தேவனது நியாயத்தீர்ப்பு அவர்மீது காணப்பட்டபடியால் மோசே 120 வயது ஆகும் போது நெபோ மலையில் மரித்தார் (உபாகமம் (34:1-16). தூரத்தில் இருந்து வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்தைக் கண்டாரே அல்லாமல், அவர் அதனுள் பிரவேசிக்கவில்லை. பல நூற்றாண்டுகள் கழித்து சீஷர்களுக்கு மறுரூப மலையில் தோன்றினார் (மத்.17:3).
வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்
தேவனுடைய கால அட்டவணையின்படி, ஆபிரகாமின் வழித்தோன்றல்களின் அடிமைத்தனத்தின் முடிவை யாத்திராகமம் குறித்தது, மேலும் ஆபிரகாமிற்கு தேவன் தந்த உடன்படிக்கை வாக்குதத்தத்தின் நிறைவேறுதலாக, அவரின் வம்சத்தார் வாக்குத்தத்த தேசத்தில் வசிப்பது மட்டுமல்ல, அவர்கள் பெருகி, பெரிய தேசமாக மாறுவார்கள் (ஆதி 12:1-3,7) என்பதும் ஆரம்பமாகியது. இந்த புத்தகத்தின் நோக்கத்தினை இப்படியாக கூறலாம்: எகிப்தில் இருந்து வெளியேறிய யாக்கோபின் வழித்தோன்றல்கள் தேவனைச்சார்ந்து இருக்கும் தேசத்தை நிறுவ எப்படி - விரைவான வளர்ச்சியைக் கண்டனர் என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள உதவுகிறது.
சரியான வேளையில், சீனாய் மலையிலும் மோவாப் வனாந்திரத்திலும் தேவனைச் சார்ந்திருக்கும் ஜனங்களாக இஸ்ரவேலர் வாழ்வதற்குத் தேவையான சட்டங்கள், சட்ட அமைப்புக்களைத் தேவன் தந்தார். இதினால் அவர்கள் மற்ற தேசத்தாரைக் காட்டிலும் வேறுபட்டு இருந்தனர் (உபா.4:7,8; ரோமர் 9:4,5).
தேவனின் சுய-வெளிப்படுத்தலின்படி, இஸ்ரவேலர்கள் அவர்களது தேவனின் குணாதிசயங்களான, பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஒரே தேவனின் இறையாண்மை, மகத்துவம், நன்மை மற்றும் பரிசுத்தம், கிருபை மற்றும் இரக்கம் குறித்த கட்டளைகளைப் பெற்றிருந்தனர். (விசேஷமாக யாத்திராகமம் 3,6,33,34-ஐ பாருங்கள்). யாத்திராகமம் குறிப்பிடுபவைகளும் மற்றும் தொடர்ந்து நிறைவேறின சம்பவங்களும், வேதாகமத்தின் ஏனைய பகுதிகளில் காணப்படும் வெளிப்படுத்தல்களின் அடிப்படையாக இருக்கின்றன. (சங்.105:25-45, 106:6-27, அப். 7:17-44; 1கொரி. 10:1-13, எபிரேயர் 9:1-6, 11:23-29).
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
எகிப்து தேசம் பத்து வாதைகளால் வாதிக்கப்பட்டது மற்றும் பார்வோனின் சேனைகள் செங்கடலில் அமிழ்ந்து அழிந்தது குறித்து எகிப்து தேசத்து குறிப்புகள் ஏதும் இல்லை என்பதால் இப்படிப்பட்ட வரலாற்றுச் சம்பவம் உண்மையில் நிறைவேறினதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியதில்லை. ஏனெனில், எகிப்தின் வரலாற்று ஆசிரியர்கள் பார்வோன்களின் தடுமாற்றங்கள் மற்றும் இழிவான தோல்விகளை ஒருபோதும் குறிப்பு எழுதுவதில்லை. யோசுவாவின் தலைமையின் கீழ், இஸ்ரவேல் மூன்று பட்டணங்களை எரித்து நாசமாக்கப்பட்டதைக் குறித்து (யோசுவா 6:24, 8:28, 11:11-13) வேதவாக்கியம் குறிப்பிடுகிறது. இந்த வெற்றி சொல்லப்போனால், ஏற்கெனவே அமைப்பாக இருந்த பட்டணத்தையும் அதின் குடியிருப்புகளையும் கையகப்படுத்திக் கொண்டதாக இருந்ததே அல்லாமல், அழித்துப் போடும்படி மேற்கொண்ட யுத்தம் அல்ல. பிற்காலத்தில் பட்டணங்களில் எரிந்து போன இடங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சினை வைத்து கானான் தேசத்துக்குள் இஸ்ரவேலர் பிரவேசித்த நாட்களை கணக்கிட்டு உறுதிபடுத்த முடியாது.
வேதாமத்திற்கு வெளியில் எந்த ஒரு தடயமும் இல்லாதிருந்தும், கிழக்கத்திய நாடுகளின் எபிரேய அடிமைத்தனம், கொள்ளைநோய்கள், வெளியேற்றம் மற்றும் வெற்றி சம்பந்தப்பட்ட குறிப்புகள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சான்றுகள் ஆரம்ப நாட்களை உறுதிப்படுத்துகின்றன. எகிப்தின் கீழ்ப்பகுதியில் கட்டிடங்கள் கட்டி சான்றுகளாக அனைத்து பார்வோன்களும் 15-ஆம் நூற்றாண்டில் விட்டுச்சென்றனர். டெல்டா வனப்பகுதியில் கோசேனுக்கு அருகில் - மோசே சென்றடையத்தக்க இடத்திலேயே இந்த பகுதிகள் இருந்தன.
ஆசரிப்புக்கூடாரத்தில் அச்சுக்கலையின் முக்கியத்துவம் மிகுந்த பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. கூடாரத்தின் ஒவ்வொரு தட்டுமுட்டுச்சாமான்களையும் அதன் ஒவ்வொரு கட்டுமானப் பொருட்களையும் புத்திசாலித்தனமாக கிறிஸ்துவுடன் இணைத்துச் சொல்வது புதிராகத் தோன்றும், புதிய ஏற்பாட்டின் குறிப்புகள் அப்படி இணைத்துப் பார்ப்பதை ஆதரிக்கவில்லை என்றால், வேதாகமத்தை விளக்கும் இறையியல் துறை அதை எச்சரிப்புடன் கையாள வேண்டும். அழகிற்காக, அதன் செயல் திறனுக்காக ஆசரிப்புக் கூடாரமும், அதன் அலங்கரிப்பின் அமைப்பும் சொல்லியிருக்கும் விதமாக அமைக்கப்பட்டது என்பது சரி, ஆனால் அதில் மறைந்திருக்கும் அர்த்தம் மற்றும் அது இதைத்தான் குறிக்கிறது என எங்கேயும் குறிப்புகள் இல்லை. முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஆசாரிப்புக் கூடாரத்தில் எப்படி பலி செலுத்தப்பட்டது மற்றும் ஆராதனை செய்யப்பட்டது, வரவிருக்கும் மேசியாவின் மீட்பின் செயலை முன்னறிவிப்பவையாக அவை இருக்கின்றன என்பதை விளக்க, புதியஏற்பாட்டின் வசனங்கள் அந்த தலைப்பினை/ பொருளை எப்படி கையாள்கிறதோ அதற்கு விட்டு விட வேண்டும்.