Wilt
யோபு 4:10
சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்டசிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோகும்.
யோபு 4:11
கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோகும், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோகும்.
சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.
சங்கீதம் 104:21
பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித்தேடும்.
சங்கீதம் 145:15
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.
சங்கீதம் 145:16
நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.