படிப்புகள்: 7
Print

      தோரா எழுதப்பட்ட சமயத்தில் எபிரெயர்கள் மிகவும் பேரினவாத (இனப்பற்று) சமூகமாக இருந்தனர். எனவே தோராவில் பாலியல் பாகுபாடு மிகவும் பரவலாக உள்ளது.

தோராவைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், முக்கியமாகத் தோராவில் பாலியல் பாகுபாடு இருந்ததா? அல்லது இல்லையா? என்பதைப் புரிந்துகொள்வதற்கு அது எழுதப்பட்ட காலத்தில் இருந்த பிற மதக் கலாச்சாரங்கள், மதங்களுக்காக மக்கள் கடைப்பிடித்துவந்த நடைமுறைகள் மற்றும் சமுதாய விதிமுறைகள் ஆகியவற்றை நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். எனவே எபிரெயர்களை ஒரு பேரினவாத சமூகம் என்று கூறுவதற்கு, தோராவை எழுதிய ஆசிரியர் பிற பண்டைய கலாச்சாரங்களைப் பார்த்து அவற்றின் அடிப்படையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அது பற்றி ஆசிரியர் இங்கே தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு முனைவர் “ஹன்னி ஜே. மார்ஸ்மேன்” என்பவரின் ஆய்வுகள் நமக்கு வெளிச்சத்தைக் காட்டுகின்றன. இஸ்ரவேலர்களின் தேவனை வழிபடும் பெண்களின் நிலையானது, இஷ்த்தாரையோ, அஷேராவையோ அல்லது வேறு எந்த தெய்வங்களையோ வணங்கும் பெண்களின் நிலையைக் காட்டிலும் மோசமானது என்று குரல் எழுப்புவோரின் உண்மையான நோக்கத்தைத் வெளியே கொண்டுவரும் நோக்கத்துடன் இவ்விரு வகையான பெண்களின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். இதன் ஆய்வுகளின் முடிவை அவர் கீழ்க்காணுமாறு விவரிக்கிறார்: “இஸ்ரவேல் பெண்களின் சமூதாயம் மற்றும் மத நிலையானது உகாரித்தின் (சிரியாவிலுள்ள ஒரு நகரம்) பெண்களின் நிலையும் ஏறத்தாழ ஒரே மாதிளரியாகவே இருந்துள்ளது. மேலும் என்னால் அறிய முடிந்தவரை, பண்டைய அண்மைக் கிழக்கிலுள்ள உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை விட ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்தாலும் கூட, எல்லா இடங்களிலும் பெண்களின் நிலைகளும் ஒட்டுமொத்தமாக ஆண்களுக்கு அடிபணியக் கூடியதாகவே இருந்தது.” (ஹன்னி ஜேமார்ஸ்மேன்உகாரிட் மற்றும் இஸ்ரவேலில் உள்ள பெண்கள்பண்டைய அன்மைக் கிழக்கிலுள்ள சூழலில் அவர்களின் சமூக மற்றும் மதநிலை, பிரில் வெளியீடு, 2003, பக்-738).

எனவே, இஸ்ரேலிய கலாச்சாரத்தை மட்டும் ஒரு பேரினவாதக் கலாச்சாராமாக தனிமைப்படுத்துவது சரியானதன்று. உண்மையில் சொல்வதென்றால், இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்கு பரிந்துரைத்த பெரும்பாலான நடவடிக்கைகள், பெண்களைப் பாதுகாப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு ஏதுவாகவுமே இருந்தன.

ஒரு பெண்ணியவாதியாக, அவர்களுடைய வழிபாட்டுக் காரியங்களில் பின்பற்றப்படும் பாலியல் பாகுபாடு பற்றிக் கூறும் வசனங்களைத் கண்டறிந்து அவற்றை என் சக பெண்களுக்கு அறிவிக்க வேண்டியதை எனது கடமையாகக் கருதுகிறேன்.

பழங்கால எழுத்துக்களின் சூழலையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொண்டு, எது சரியல்ல என்பதைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது உண்மையில் உன்னதமானது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்து, தோராவில் பெண்களுக்கு எதிரான காரியங்கள் இருந்தால் பிறரை எச்சரிப்பது நல்லது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் நீங்கள் தோராவுக்கு உண்மையாக இருக்க வேண்டியது அவசியம்.

தோராவில் பெண்களுக்கு எதிராக உள்ள அனைத்து அநீதிகளையும் என்னால் பட்டியலிட முடியாது. கிருபையிலிருந்து விழுந்துபோனதற்கு காரணமானவர்களாக “லிலித்” முதல் பிற அனைத்துப் பெண்களும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். “லலித்” ஆதாமுக்குக் கீழ்ப்படியாததனால் ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்டவர் எனக் கருதப்படுபவர்).

லிலித் தோராவில் சொல்லப்பட்ட ஒரு கதாபாத்திரம் அல்ல. ஆதியாகமம் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள ஆதாம் மற்றும் ஏவாள் வாழ்ந்த வெகு காலத்திற்குப் பிறகு, யூத நாட்டுப்புற இலக்கியங்களிலும், யூதப் பாரம்பரியத்திலும் இடம் பெற்றிருக்கிற ஒரு கற்பனைக் கதாபாத்திரமே இந்த லலித் என்ற கதாபாத்திரம் ஆவாள்.

தோராவில் பெண்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் வசனங்களின் ஒரு மாதிரிப் பட்டியலைத் தருவதோடு இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நான் தோராவைப் புரட்டிப் பார்க்கும்போது வெளிப்படும் வசனங்களை அப்பட்டியலுடன் சேர்ப்பேன். அதுவரைக்கும் நீங்கள் இங்கே பார்க்கும் எந்த வசனத்தையும் பயன்படுத்தத் தயங்க வேண்டாம்.