படிப்புகள்: 8
Print

     ஆதியாகமம் 38:16-24:  இந்த வேதபகுதி யூதா என்ற மனிதன் தன் விதவை மருமகளுடன் உடலுறவு கொண்ட அந்த நிகழ்வைச் சொல்கிறது. அவள் துக்கத்தின் ஆடை அணிந்திருந்ததை, விபச்சாரியின் ஆடை என்று தவறாகக் கருதி யூதா (ஒரு முட்டாள்தனமான மனிதனாக) அவளுடன் உடலுறவு கொண்டான். பின்னர் அவன் அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டான். இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இல்லையா?

இது மிகவும் சுவாரசியமான கதை என்று சொல்லுகிறார். ஆனால் அவர் முழுக்கதையையும் புறக்கணித்துவிட்டு, கதையில் ஆங்காங்கே சில குறிப்புகளை மட்டும் எடுத்து வைத்து குற்றம் கண்டுபிடிப்பது சரியானது அல்ல. அகவே நாம் இதன் முழுக் கதையையும் பார்ப்போம். இந்த சம்பவத்தின் பின்னணி என்னவென்றால், தாமார் யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவனை மணந்திருந்தாள். இவன் இறந்துவிட்டான். எனவே யூதாவின் இரண்டாவது மகன் ஓனான் அவளை மணந்தான். ஆனால் அவன் தன் சகோதரனின் சந்ததியைப் (இஸ்ரவேலின் பொதுவான வழக்கம்) பாதுகாக்க விரும்பாததால் வேண்டுமென்றே அவளுக்கு குழந்தை உண்டாவதற்கான வாய்ப்பை மறுக்கிறான். இதனால் தேவன்அவனையும் கொன்று விடுகிறார். தேவன் பாலியல் பாகுபாடு காட்டுகிறவர் அல்ல என்பதற்கு இங்கே ஒரு நிரூபணம் இருக்கிறது. ஏனெனில் இந்தக் கதையில் அவர் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு எந்த வகையிலும் சாதகமாக நடந்துகொள்ளவில்லை. ஓனான் தாமாருக்கு கடமை தவறியபோது, ​​தேவன் அவனைக் கொன்றுவிடுகிறார். தேவன் பாலியல் விஷயங்களில் பாரபட்சம் காட்டுகிறார் என்பது உண்மையல்ல. இங்கே ஆண்களுக்குச் சாதகமாக இருந்து ஒருதலைப் பட்சமாக நடந்துக் கொள்ளவில்லை என்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். இதற்கு மாறாக பாலுறவுக் காரியத்தில் பெண்ணின் உரிமையை தேவன் நிலைநாட்டுகிறதையே காண்கிறோம். மேலும் அவளிடம் அநியாயமாக நடந்துக் கொண்டதற்காக தண்டிக்கிறதையும் பார்க்கிறோம்.

இரு மகன்களும் இறந்துவிட்டதால் அவர்களுடைய வழக்கத்தின்படி யூதா இப்போது தனது மூன்றாவது மகனை தாமாருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் மூன்றாவது மகனும் இறந்துவிடுவானோ என்று அஞ்சி அவர் அதைச் செய்யவில்லை. யூதா அவளை அவளுடைய தந்தையின் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இங்கே கவனிக்க வேண்டிய முதலாவது முக்கியமான காரியம் யூதா தாமருடன் உடலுறவு கொண்டபோது, அவள் தனது மாமனாருடன் வசிக்கவில்லை.

இப்போது, ​​தாமருடைய செயலின் நோக்கத்தைக் காண்பதற்காக பின்வரும் வசனங்களை வாசித்துக்கொள்வோம்.

ஆதியாகமம் 38:11-15: “அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து.”

தாமார் அணிந்திருந்த முக்காட்டை யூதா வேசியின் முக்காடாகக் கருதினான் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று இந்த வசனப் பகுதியின் வாயிலாக தெளிவாக அறிந்துகொள்கிறோம்.  தன் மாமனாகிய யூதா தன்னுடைய நகரத்துக்கு வந்திருக்கிறான் என்பதை அறிந்த தாமார், தனது விதவையின் ஆடைகளைக் கழற்றிவிட்டு, வேண்டுமென்றே ஒரு விபச்சாரியின் ஆடையை அணிந்திருந்தாள் என்பது இந்தப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதா தனது மூன்றாவது மகனை தனக்குத் திருமணம் செய்துக் கொடுக்கவில்லை என்பதற்காக அவளுடைய ஒருவிதமாகபழிவாங்கல் இது. எனவே இந்த பெண்ணியவாதி இதை வேண்டுமென்றே இந்தப் பகுதியை தவறாகச் சித்தரித்து குற்றஞ்சாட்டியிருக்கிறார். யூதா ஒரு முட்டாளும் இல்லை, தாமார் விதவையின் உடையிலும் இல்லை. தாமாரின் நோக்கம், ஒரு விபச்சாரியாக நடித்து, யூதாவைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதே ஆகும். இதற்காக அவள் திட்டமிட்டு நாடகமாடினாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. லோத்தின் மகள்களின் காரியத்தைப் போலவே, இங்கேயும் தாமாரே தனது முதல் அடியை எடுத்து வைக்கிறாள். யூதா செய்ததை இது எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. அது தீயது மற்றும் இழிவானது. ஆனால் முழு உண்மையையும் உணர்த்தும் வசனங்களை மேற்கோள் காட்டுவதை எவ்வளவு வசதியாக இந்த பெண்ணியவாதி தவிர்த்திருக்கிறார்.

பின்னாட்களில் யூதா மீண்டும் அந்த இளம் பெண்ணைப் (தாமாரைப்) பார்த்து, அவள் விபச்சாரியாக இருந்ததற்காக எரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இருவரும் இணைந்து தவறான செயலில் ஈடுபடும் போது, அந்தப் பெண் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும் என எவ்வாறு கோரிக்கை வைக்கிறார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்). ஆனால் உண்மை தெரிந்தபிறகு, யூதா அந்தப் பெண்ணை தன் மருமகளாக அங்கீகரித்து, அவள் தன் குழந்தையுடன் இருந்தபோது அவளைக் கொல்ல வேண்டாம் என்று அவன் முடிவு செய்தான். யூதா உடலுறவில் ஈடுபடலாம், தேவைக்கு ஒரு விபச்சாரியைப் பயன்படுத்தலாம், அதுவும் அவனைக் காட்டிலும் மிகவும் இளைய பெண்ணை கர்ப்பந்தரிக்கச் செய்யலாம், ஆனால் அவள் மட்டுமே மரணத்திற்கு தகுதியானவள் என்று அவர் நினைப்பது பாலினப் பாகுபட்டினால் அல்லவா?

யூதாவுக்கும் தாமாருக்கும் இடையே என்ன நடந்ததோ அது எவ்வித ஒளிவு மறைவுமின்றி வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மீண்டும் சொல்ல விரும்புகிறோம். இந்தச் சம்பவமானது, மனிதன் முற்றிலும் பாவத்தால் ஆட்கொள்ளப்பட்டவனாகவும், கறைப்படிந்தவனாகவும், அவனது பாவநடத்தையில் எந்த எல்லைக்கும் அவனால் செல்வான் என்னும் வேதாகமத்தின் மையக் கருத்துக்கு உடன்பட்டதாகவும் ஆதரவளிக்கிறதாயும் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தேவனின் கிருபையையும் இரக்கத்தையும் தவிர அவனுக்கு வேறு எவ்வித நம்பிக்கையும் இல்லை.

நான் முன்பே குறிப்பிட்டது போல, திருமண உறவுக்கு அப்பாற்பட்டு நடக்கிற விபசாரம் போன்ற எந்தவொரு பாலியல் உறவுகளும் பாலியல் பழக்கவழக்கங்களும் தேவனால் தண்டிக்கப்படுகின்றன. யூதாவுக்கோ! அல்லது தாமாருக்கோ! சட்ட விரோதமான பாலுறவில் ஈடுபடும்படி தேவன் எந்த உரிமத்தையும் வழங்கவில்லை. எனவே, “யூதாவால் உடலுறவு கொள்ள முடியும், ஆனால் தாமரால் முடியாது” என்று இந்த பெண்ணியவாதி எப்படிச் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. தேவனுடைய நீதிமன்றத்தில், இருவரும் சமமாகக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள். யூதா தான் உறவு கொண்டவள் தன்னுடைய மருமகளாகிய தாமார் என்று உணர்ந்தவுடன் அவன் அவளிடத்தில் மேலும் உறவு கொள்ளவில்லை என்பது வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூதாவும் கூட இத்தகைய தவறான உடலுறவுக்கு எதிரானவர் என்பதையே இது காட்டுகிறது.

மத்தேயு ஒன்றாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள மேசியாவின் குடும்ப வழிப்பட்டியலில் தாமாரின் பெயர் இடம் பெற்றிருப்பது. குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெண்கள் பரிபூரணமான வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாலும் தேவன் அவர்களை (பெண்களை) எவ்வாறு உயர்த்துகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது அல்லவா!