படிப்புகள்: 8
Print

      நீங்கள் தொடர்ந்து தோராவைப் படிப்பீர்களாயின், மோசேயைத் தவிர வேறு எந்த யூதர்களும் ஒரு மீதியானியப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று தேவன் கூறியிருக்கிறதைக் காண்பீர்கள். இது முரண்பாடான காரரியம் அல்லவா?

இஸ்ரவேலர்கள் எவரும் மீதியானியப் பெண்களை மணக்க முடியாது என்றும், மோசே மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிற வேத வசனங்களை இந்தப் பெண்ணியவாதி ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. எந்த இடத்திலும் பிற்காலத்தில் எழுதப்பட்ட வேத வாக்கியங்களிலும் இவ்வாறு எழுதப்படவில்லை. இது அந்தப் பெண்ணியவாதியின் அறியாமையா அல்லது வேண்டுமென்றே கூறப்பட்ட சதியா என்று எனக்குத் தெரியவில்லை. மோசே ஒரு மீதியானியப் பெண்ணை மணந்தார் என்பது உண்மைதான். ஆனால் இது நியாயப்பிரமாணம் வழங்கப்படுவதற்கு முன்னரே நடந்த காரியம். சில குறிப்பிட இன மக்களுடன் இஸ்ரவேலர்கள் திருமண உறவு செய்யக்கூடாது என்று சொல்வதற்கான காரணம், அவர்கள் வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அல்ல, அவர்கள் விக்கிரக ஆராதனை செய்கிற மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஆகும். கானானியப் பெண்ணான ராகாப், மோவாபிய பெண்ணான ரூத் ஆகியோர் யூதர்களைத் திருமணம் செய்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மத வழிபாட்டை விட்டுவிட்டு, மெய்யான கடவுளாகிய யெகோவாவைப் பின்பற்றினால் இஸ்ரவேல் வம்சத்தின் ஆண்களைத் திருமணம் செய்ய உரிமை பெற்றிருக்கிறார்கள். மேலும் இவர்களுடைய பெயர்கள் இயேசுவின் வம்சவழிப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறதன் மூலமாக தேவன் அவர்களைக் கனப்படுத்தியிருக்கிறார்.

போரில் பிடிபட்ட பெண்கள் பலமுறை கற்பழிக்கப்பட்டு கருவுற வைக்கப்பட்டனர். ஆயினும் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, திருமணம் ஆனவர்கள் என்ற அந்தஸ்துகூட அவர்களுக்குத் தரப்படவில்லை.

இது முற்றிலும் ஒரு தவறான குற்றச்சாட்டு என்றே கூற வேண்டும். வேண்டுமென்ற அனுமானத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிற குற்றச்சாட்டாகும். பெண்கள் மீண்டும் மீண்டும் கற்பழிக்கப்பட்டு கருவுற்றனர் என்று கூறுவதற்கு எந்த ஒரு வரலாற்று மேற்கோளையும் இந்தப் பெண்ணியவாதியால் வழங்க முடியாது. ஏனெனில் அப்படியான ஆதாரங்கள் எதுவும் அறவே இல்லை!

ஆயினும் அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் அளிப்போம். போரில் சிறைபிடிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன நேரிட்டது? ஆகாயத்தில் சிலம்பம் செய்வதைப் போலில்லாமல், பிற வேதவசனங்களின் துணையோடு, எவ்வித அனுமானத்திற்கும் இடம் கொடாமல் நேர்மையான முறையில் நாம் பதிலளிக்க முயலுவோம். சிறைபிடிக்கப்பட்ட பெண்களை இஸ்ரவேலர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தேவன் அனுமதி அளித்தார். இதுமட்டுமின்றி, அவர்களை மனைவிகள் என்ற முறையில் கண்ணியத்துடன் நடத்தவும் கட்டளை வழங்கியிருந்தார் (வாசிக்கவும் உபாகமம் 21:10-14). அடிமையாகப் பிடித்து வரப்பட்டு, திருமணம் செய்யாதவர்களாக இருந்தால் அவர்களை வேலைக்காரிகளாக வைத்திருப்பார்கள். ஆயினும் இத்தகையோரையும் தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகளே இருந்தன (யாத்திராகமம் 21:26-27, உபாகமம் 23:15-16). இக்கட்டளைகள் அனைத்தும் வழக்கமான பழங்காலப் போர்களில் இருந்து வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கால கலாச்சாரத்தில் இவ்வாறு போரில் பிடிக்கப்படுகிற பெண்கள் தகாதவிதமாய் நடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் அவர்களை அடிமைகளாக விற்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, இஸ்ரவேலர்கள் ஒரு மாதம் காத்திருந்து, அந்தப் பெண்ணை மணந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை இருந்தது. இது மனிதர்கள் என்ற முறையில் பெண்களுடைய ஆளுமையை மதிக்கக் கற்றுக்கொடுத்திருந்தது.

உபாகமம் 20:13-15: இந்த வசனத்தில், கர்த்தர் ஒரு பட்டணத்தை உங்கள் கைகளில் ஒப்படைக்கும்போது, அங்குள்ள உள்ள ஆண்களையும், சிறுவர்களையும், கொன்றுவிடுங்கள். ஆனால் கற்பழிப்பதற்காக பெண்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என்று உள்ளது. இது ஒரு பெண்களுக்கு எதிரான ஒரு மோசமான காரியம் அல்லவா?

உபாகமம் 20:13-15: நாம் இந்த பகுதியிலுள்ள வசனங்களில் உண்மையிலேயே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று காண்போம்: “உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,  ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக”.

எண்ணாகமம் 31 -ஆம் அதிகாரத்தில் உள்ளதைப் போலவே, இந்த வேதபகுதியிலும் கற்பழிப்பு பற்றியோ அல்லது பாலியல் வன்செயல் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, வேதவசனங்களிலுள்ள உண்மையைப் பார்க்காமல், தன் கருத்துக்கு ஏற்றவாறு அனுமானங்களை இட்டுக்கட்டுகிறார் இந்தப் பெண்ணியவாதி என்று தன்னை அழைத்துக்கொள்பவர். உண்மையில், இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தேவன் அனுமதித்தார்.  மேலும் அவர்கள் தங்கள் மனைவிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பெண்கள் முதலாவது தங்கள் குடும்பங்களை நினைத்து துக்கங்ககொண்டாட வேண்டும். அவளை மனைவியாக்கிய பிறகு அவளைத் தவறாக நடத்தக் கூடாது (உபாகமம் 21:10-14). திருமணம் செய்யாதவர்களை அவர்கள் வேலைக்காரர்களாக ஆக்கியிருந்தார்கள். ஆயினும் நாம் முன்னரே சிந்தித்ததுபோல அவர்களை தவறாக நடத்துவதற்கு எதிரான விதிகள் இருந்தன.

மேலும் இந்த வேதபகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்னவெனில், இந்தப் பெண்ணிவாதி கூறுவதுபோல சிறுவர்கள் கொல்லப்படவில்லை. ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆகவே இந்த வகையில் சிறுவர்களும் பெண்களும் தேவனுடைய அன்பான கரிசனைக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.