படிப்புகள்: 26
Print
ஆசிரியர்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்

 

தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். ஐசுவரியவான் தான் தாழ்த்தப்ப ட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான் சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து. புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்: ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான். யாக்கோபு 1:9-11

ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த அறிவு மிக அவசியம். யாக்கோபு இதைப் பற்றி நமக்கு தெளிவாக சொல்கிறார். பணம் என்பது ஒரு நிலையற்றது பணத்தை நம்பி நாம் எதையும் செய்ய முடியாது. தேவனுடைய பார்வையில் பணம் என்பது காய்ந்த புல்லுக்கும், உலர்ந்த பூக்கும் ஒப்பனாதாக என்கிறார்.

உலக கண்ணோட்டத்தில் பணம் மாட்டுமே முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. எல்லாம் பணத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது.

ஒரு கிறிஸ்தவன் பணத்தை எப்படி கையாள வேண்டும்? ஒரு விசுவாசிக்கு வசதிகளையும் வாய்ப்புகளையும் இறையாண்மையுள்ள தேவனே தருகிறார். ஒரு விசுவாசி நியாயமான முறையில் உழைத்து பணத்தை ஈட்ட வேண்டியது மிக அவசியம். வேதம் தெளிவாக சொல்கிறது உழைக்காதவன் சாப்பிடக்கூடாது என்று.

ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய தேவைகளையும் தனது குடும்பத்தார் தேவைகளையும் தன் வருமானத்தை வைத்தே பூர்த்தி செய்ய வேண்டும். தேவன் அவனை வாழும் படியாக அனுமதித்த சூழலில் அவன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். ஒரு நாளும் தேவையற்ற கடன் என்ற சுமைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள கூடாது.

தனது குடும்பத்தாரின் தேவைகளுக்கு தனது உறவினர்களையோ அல்லது சுற்றுப்புறத்தாயோ சார்ந்து இருக்கக் கூடாது. அவனுடைய வருமானத்தில் அவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு ஏற்ப அவன் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு அவனுடைய வாய்ப்புகளை பயன்படுத்தி பணத்தை ஈட்ட வேண்டும். கிறிஸ்தவனுக்கு ஓய்வு என்பது கிடையாது. ஓய்வு சோம்பேறித்தனத்திற்கும், சோம்பேறித்தனம் பாவத்திற்கு அவனை இட்டிச் செல்லும்.

ஒரு கிறிஸ்தவன் திருச்சபைக்கு தசமபாகம் அதாவது காணிக்கை கொடுக்கிற காரியங்களில் மிகுந்த கருத்தோடும், உண்மையோடும் இருக்க வேண்டும். தேவனுடைய ஆசிர்வாதம் நம்முடைய வாழ்வில் தொடர்ந்து நிலைத்திருக்க நாம் நம்முடைய பணத்தை முறையாக திருச்சபைக்கு தசமபாகம் செலுத்த வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் தேவனின் ஆசிர்வாதம் தங்கி இருப்பதற்கு இச்செயல் உதவி செய்வதாக இருக்கிறது. நம்முடைய தசமபாகத்தின் மூலமாக சபையின் தேவைகளும் சபைக்கு ஊழியம் செய்கிற போதகரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மனமுவந்து கொடுக்கிறவனை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது.

ஒரு கிறிஸ்தவன் பணத்தை எப்படி செலவிட வேண்டும்?

  1. முதலில் அவன் தன்னுடைய தேவைகளையும் தனது குடும்பத்தார் தேவைகளையும் தன்னுடைய வருமனத்தைக்கொண்டே கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும்.
  2. இரண்டாவது அவனது திருச்சபைக்கும் திருச்சபையின் மூலமாக நடைபெறும் ஊழியங்களுக்கும் அவனுடைய பணம் பயன்பட வேண்டும்.
  3. மூன்றாவது அவன் பணம் ஏழைகளுக்கு தாராளமாக செலவு செய்யப்பட வேண்டும்.

பணம் எப்போது தீங்கை கொண்டுவருகிறது?

மனிதனுடைய பார்வையில் பணத்திற்கு ஒரு ஆழமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது. என்று அவன் கருதிகிறான். அதினால்தான் பணம் தேவனை மறக்க செய்து பணத்தின் மீது நம்பிக்கை வைக்க நம்மை மயக்கிவிடும்.

ஆடம்பர வாழ்க்கை நம்மையும் நமது குடும்பத்தையும் நமது பிள்ளைகளையும் தவறான பாதைக்கு நம்மை இட்டிச் செல்லும்.

முடிவாக

பணம் என்பது தேவனுடைய கிருபை! அதை தேவனே கொடுத்திருக்கிறார் என்ற அறிவு நமக்கு வேண்டும்.

பணம் அதிகமாக சம்பாதிக்கிறேன் என்ற பெருமையோ அல்லது அகங்காரமும் நமக்கு வரும்போது அது தேவனுடைய பார்வைக்கு அருவருப்பாய் இருக்கிறது. வரலாற்றில் கிறிஸ்தவர்களின் பணம் அதிகமாக தேவனுடைய ஊழியத்திற்க்கும் சுவிசேஷம் அறிவிப்பிற்கும் உதவியாக இருந்திருக்கிறது. இதுவே பரலோகத்தில் நமது பொக்கிஷங்களை சேர்த்து வைப்பதற்கு அடையாளம்.

நமது நிலையில்லாத பணத்தைக் கொண்டு நமது சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வதும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதும் மிக அவசியம்.

நமது பிள்ளைகளை நேர்மையாய் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை ஈட்டுவதற்கும் அந்த பணத்தை நியாமாய் எப்படி செலவிடுவது என்பதை சொல்லிக் கொடுப்பதும் மிக மிக அவசியம்.

பொருளாசை வெல்வதற்கு ஒரே வழி நமது பணத்தை ஆண்டவரின் பணிக்கு செலவு செய்வது மட்டுமே. நமது வருமானத்தைக் கொண்டு தேவனுக்கு மகிமையான வாழ்க்கையை வாழ்வோம்.