“அவர்கள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்” (மத்தேயு 1:23)
இம்மானுவேல் என்கிற பெயரைக் கேட்கும்போது உங்கள் மனதில் வருவது என்ன? அநேக மக்களுக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகை நினைவுக்கு வரும். “வாரும், வாரும், இம்மானுவேலரே” என்ற கிறிஸ்துமஸ் கேரல் பாடலில் வரும் வரியை சிலருக்கு ஞாபகம் வரலாம். ஆனால் ‘இம்மானுவேல்’ என்பது வேதாகமத்தில் காணப்படும் மகிமையான சத்தியமாகும். இந்த வசனம் சொல்வதுபோல, இம்மானுவேலின் பெயருக்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
தேவன் ஆதாம், ஏவாளைப் படைத்து அவர்களை ஏதேன் தோட்டத்தில் இருக்கச் செய்தார். அவர்களுடன் தேவன் இருந்தார். தேவன் வந்து அவர்களுடன் உறவாடுவதைப் பற்றி ஆதியாகமம் 3:8 வசனத்திலிருந்து நாம் அறிகிறோம். அவர்களிடத்தில் வருகிற தேவனுடைய சத்தத்தை அவர்கள் கேட்டர்கள். அது எத்தனை மகிமையானதாக இருந்திருக்க வேண்டும்! ஆனால் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அவர்களுக்கும் தேவனுக்கும் பிரிவினை உண்டாயிற்று. 8-வது வசனத்தில் அவர்கள் தேவன் வருகிற சத்தத்தைக கேட்டபோது, அதற்கு முன்பு வரை செய்யாத ஒன்றைப் புதிதாகச் செய்தனர். அவர்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை விட்டு ஓடி, தங்களை ஒளித்துக் கொண்டனர். தேவன் அவர்களுடன் இருக்கவில்லை, ஏனெனில் அவர்கள் தேவனுடன் இருக்கவில்லை. இந்தப் பிரிவினை என்பது வெளிப்படையாக ஆதியாகமம் 3:24-ன் படி உறுதிப்படுத்தப்பட்டது. தேவன் மனிதனை ஏதேன் தோட்டத்தை விட்டுத் துரத்திவிட்டதாக வாசிக்கிறோம்.
தேவன் ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களைத் துரத்துவதற்கும் முன், ஆதியாகமம் 3:15-ல் ஒரு வாக்கு கொடுக்கப்பட்டது. ஸ்திரீயின் வித்தானவர் வந்து சாத்தானாகிய சர்ப்பத்தை நசுக்கிப்போடுவார். ஆகவேதான் வெளிப்படுத்தல் 12:9-ல் “பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய அந்தப் பெரிய வலுசர்ப்பம்” என்று சர்ப்பத்தை அடையாளப்படுத்துகிறது. தேவனுடைய வாக்குத்தத்தம் மறுபடியும் ஏசாயா 7:14-ல் திரும்பச் சொல்லப்படுகிறது. “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்”. இந்த வாக்குப்பண்ணப்பட்ட இம்மானுவேல், அதாவது “தேவன் நம்மோடு” என்பவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. யோவான் இந்த தேவன் மாம்சமாகி நம் மத்தியில் வாசம்பண்ணினார் என்கிறார் (யோவான் 1:14). தேவன் நம்மோடு இருக்கிறார். நம்மைத் தேவனிடம் திரும்பக் கொண்டு வரும்படியாக இயேசு உலகத்திற்கு வந்தார். மேலும் யாரையெல்லாம் அவர் தேவன் வசம் திரும்பக்கொண்டு வருகிறாரோ, அவர்கள் அவரிடமிருந்து ஓடிப்போக வேண்டிய அவசியம் இராது.
மத்தேயு சுவிசேஷம் தேவன் நம்மோடு இருக்கிறார் என்கிற இம்மானுவேலரின் வருகையுடன் தொடங்குகிறது. மத்தேயு 18:20-ல் சபைக்கு இந்த வாக்கு தரப்பட்டுள்ளது, “ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்”. தேவன் நம்மோடு இருக்கிறார். மத்தேயு சுவிசேஷம் கிறிஸ்து இயேசுவின் பரமேறுதலுக்குச் சற்று முன்னதாக நிறைவு பெறுகிறது. மத்தேயு சுவிசேஷத்தின் கடைசி வார்த்தைகளில் வரும் வாக்கு, “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்தேயு 28:20). இயேசு பிதாவினிடத்திற்கு பரமேறிச் சென்றாலும், அவர் இப்போதும் இம்மானுவேலராகவே இருக்கிறார். தேவன் நம்மோடு இருக்கிறார்.
“நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று தேவன்” சொல்லுகிறார் என்று 2கொரிந்தியர் 6:16-ல் வாசிக்கிறோம். தேவன் நம்மோடிருக்கிறார்.
நம்மைத் தேவனிடம் திரும்பக் கொண்டு வரும்படியாக இயேசு உலகத்திற்கு வந்தார். மேலும் யாரையெல்லாம் அவர் தேவன் வசம் திரும்பக்கொண்டு வருகிறாரோ, அவர்கள் அவரிடம் இருந்து ஓடிப்போக வேண்டிய அவசியம் இராது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையுடன் இந்த உலகம் முடிவுக்கு வந்து விடும். இதற்குப் பின்னர் புதிய வானமும், புதிய பூமியும் உருவாகும். அதைக் குறித்து வெளிப்படுத்தல் 21:3-ல் சொல்லுகிறது, “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது. அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார். அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடே கூட இருந்து, அவர்களுடைய தேவனாயிருப்பார். இம்மானுவேல், நித்திய காலமாக தேவன் நம்மோடு கூட இருக்கிறார்! “தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவரைத் தரிசிப்பார்கள்” என்று வெளிப்படுத்தல் 22:3,4-ல் வாசிக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் இம்மானுவேலராக இப்போது இருப்பாரானால், அவர் நித்திய காலமாக உங்கள் இம்மானுவேலராகவே இருப்பார்.