ஒலி வடிவில் கேட்பதற்கு,
மனிதப் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு தேவனுடைய சுவிசேஷத்தின் மையமாயிருக்கிற கிறிஸ்துவில் மட்டுமே உள்ளது.
“எல்லோரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டார்கள்” (ரோமர் 3:23).
“என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் நாளிலே இது விளங்கும்” (ரோமர் 2:16). “பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர் 6:23).
"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:28).
“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை (கிறிஸ்து முழுமையாகத் தேவனாகவும், முழுமையாக மனிதனாகவும் இருக்கிறார்) நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி. 5:21).
பரிசுத்தமானவரும் பாவமற்றவரும் தேவ ஆட்டுக்குட்டியானவருமாகிய கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்கான பரிகாரப் பலியாவும், நம்மைத் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கும்படியாவும், மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். பின்னர் பரலோகத்துக்கு ஏறிச்சென்று தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். மரித்தவர்களையும் உயிரோடிருக்கிறவர்களையும் நியாயந்தீர்க்கும்படியாக அவர் மீண்டும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்.
இரட்சிப்பில் திரித்துவ தேவனின் செயல்: பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை நமக்காகக் கொடுத்தார். குமாரனாகிய கிறிஸ்து கல்வாரிச் சிலுவையில் நமக்காகத் தம் ஜீவனைக் கொடுத்தார். பரிசுத்த ஆவியாகிய தேவன் நமக்கு புதிய வாழ்க்கையைக் கொடுத்தார்.
"அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” (2 கொரி. 5:19, 20).
ஆகவே நாம் தேவனோடு ஒப்புரவாக வேண்டியது அவசியம்.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாகமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தம்முடைய குமாரனை அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று” (யோவான் 3:16-18).
“காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று, மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” (மாற்கு 1:15) என்று இயேசு கிறிஸ்து அழைக்கிறார்.
இன்றே உங்களது இரட்சிப்பின் நாள்; ஆகவே உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.