நற்செய்தி கைப்பிரதிகள்

 

 

ஆசிரியர்: பெயர் அறியப்படாதவர்.

 

ஒலி வடிவில் கேட்பதற்கு,

தொடர்வண்டி தனது பயணத்தை ஆரம்பித்து இரயில் நிலையத்தை மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது அந்த தொடர்வண்டி. நான் என் பொருட்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று எனக்கு அருகில் இருந்த பெட்டியில் பெரிய சத்தமும் கூச்சலும் எழுந்தது. எல்லோரும் சத்தம் வந்த திசையை நோக்கினார்கள். இரண்டு பயணிகள் ஒரு இருக்கைக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இருவரும் பதிவு செய்த சீட்டை எடுத்துக்காட்டினர். இது எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் என இருவரும் அந்த இடத்திற்காக உரிமைபாராட்டினார்கள். காரணம் என்னவென்றால் பதிவு செய்யப்பட்ட இருக்கையின் எண் ஒரே இலக்கமே இருவருடைய பயணச்சீட்டிலும் காணப்பட்டது. அவர்களோடு பயணம் செய்த அவர்களாலும் அந்த பிரச்னைக்கு முடிவு கூறமுடியவில்லை.

ஓருவர் மற்றவருடைய பொருட்களையெல்லாம் எடுத்து நடை பாதையில் எறிந்தார். இது சிலர் இரயில்வே துறையின் தவறு என்றனர். சிலர் இது கணனியில் இத்தகைய தவறுகள் ஏற்படாது என்றனர். சிறிது நேரத்தில் டிக்கட் பரிசோதகர் அங்கே வந்தார். முதலில் அவரும் குழப்பமடைந்தாலும் சற்று நேரத்தில் தவறு என்ன என்பதைக் கண்டுகொண்டார். சண்டையிட்ட பயணிகளில் ஒருவர் தவறான இரயிலில் ஏறியிருந்தார். அது யாரென்றால் அந்த சண்டையில் வன்மையாக சண்டையிட்டவரே! இந்தப்பெரிய தவறைச் செய்திருந்தார். தவறைச் சுட்டிக்காட்டிய போது அவர் முகம் வெட்கித் தலைகுனிந்தார். அடுத்த நிலையத்தில் அவர் இறங்க வேண்டியதாயிற்று. எவ்வளவு பெரிய தவறு. எவ்வளவு அவமானம்! எத்தனை கொடிய விளைவு!

எல்லா தொடர் வண்டிகளும் ஒரே ஊர்களுக்குச் செல்வதில்லை. எல்லாப் பெரிய தெருக்களும் ரோம் நகரத்தை இணைப்பதில்லை. எல்லா நதிகளும் ஒரே கடலுக்குள் பாய்வதில்லை. எல்லா இரயில்களும் ஒரே மாதிரியாகவே இருக்கும். எல்லா பெருந்தெருக்களும் ஒரே மாதிரியாகவே இருக்கும். எல்லா நதிகளும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆயினும் இவை சென்றடையும் இடங்கள் வெவ்வேறாக உள்ளன. நாம் சரியான வண்டியில் சரியான பாதையில் முறைப்படி பயணம் செய்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். இல்லையேல் முடிவில் நமது பயணம் ஆபத்தாக முடிந்துவிடும். முன் பார்த்த அந்த பயணியைப் போல நமது வாழ்விலும் நஷ்டமும், இழப்பும், அவமானமும் நமக்கு கொண்டுவந்து விடும். உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது. அது சரியானதா? தவறானதா? என்பதையும் காலதாமதமின்றி உறுதி செய்வது அவசியம்.

வாழ்க்கையும் ஒரு பயணம் தான்.

“பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை" எமது வாழ்க்கைப் பயணமும் இந்த இரயில் பயணத்துக்கு ஒத்ததாகவே உள்ளது. அப்படியானால் நாம் செல்லும் இலக்கு என்ன? என்பதை தீர்மானித்து சந்தேகத்துக்கு இடமின்றி சரியான பாதையையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? பரிசுத்த வேதம் இரண்டு வழிகளைக் காட்டுகிறது. 1. இடுக்கமான நித்திய ஜீவபாதை 2. விசாலமான நித்திய அழிவு பாதை. இந்த இரண்டு பாதைகளும் வவ்வேறான இடத்துக்கு கொண்டு செல்கின்றன. குறுகிய பாதை கவர்ச்சியின்றி இடுக்கமும் துன்பமும் நிறைந்ததாக இருப்பினும், அதன் முடிவோ நித்திய மகிழ்ச்சியுள்ள பரலோக வாழ்வாகும். இவ்வழியில் பயணம் செய்வோர் சிலரே! மாறாக கவர்ச்சியுள்ள விசாலமான பாதையில் பயணிப்போர் பலர். அது பாவமும், சுயநலமும், களியாட்டும், சிற்றின்பமும் நிறைந்த பாதையாக உள்ளது அதன் முடிவோ நித்திய அழிவு.

நித்திய ஜீவ பாதை எது?

அப்படியானால்! ஆசீர்வாதமுள்ள ஜீவ பாதை எது நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். ஆம். அவரே நித்திய வாழ்வுள்ள தேசத்துக்கு வழியாக உள்ளார். மனிதர்களாகிய நாம் வழி தப்பி பாவம் செய்து அலைகிறவர்களாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எம்மைத் தேடி வந்த மேய்ப்பராகிய ஆண்டவரின் அங்கலாய்ப்பை கேளுங்கள்: என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள் அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி பர்வதங்களில் அலைய விட்டார்கள். ஒரு மலையிலிருந்து மறு மலைக்குப் போனார்கள் தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள். (எரேமியா 50:6) ஆம்! தவறான வழியில் சென்று கொண்டிருக்கிற நம்மை நாம் நல்வழிக்கு செல்ல முடியாத நிலையில் இறிருக்கிறோம். தேவன் நம்மை அதிகமாக நேசித்த படியால் ஜீவனுள்ளோர் தேசமாகிய பரலோகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும்படியாக அவரும் ஏழை மானிடராக பாவமின்றி பரிசுத்தராகப் பிறந்து போதனை செய்து மனித குலத்தின் பாவநோயை நீக்கி பரிசுத்தப்படுத்தும்படியாக மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களைத் தாமே ஏற்று சிலுவையில் பலியாகி மனித இனத்தை பரலோகம் செல்வதற்கு தகுதிப்படுத்தினார்.

பரிசுத்த தேவனுடன் சேர முடியாதிருந்த மனித குலத்தின் பாவத்தையும், அக்கிரமத்தையும் எல்லாவற்றையும் பாவமறியாத பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து தனது மரணத்தின் மூலமாக பரிசுத்த தேவனிடத்தில் ஒப்புரவாக்கி பரலோகத்துக்கு செல்லும் பாதையை ஏற்படுத்தினார். உலகத்திலுள்ள எந்த மனிதனாவது எந்த இனமாவது எந்த மொழி பேச கூடியவனாவது பரலோகம் செல்வதற்கு இயேசு கிறிஸ்து ஒருவரே வழியாக இருக்கிறார்.

இந்த உலகத்திலே வேறு எந்த மார்க்கமோ எந்தக் கடவுளோ எந்தவொரு அவதாரமோ பரலோகத்துக்கு வழியை அமைக்க முடியாது. ஆம்! சர்வலோகப் பாவங்களுக்காக பலியான தெய்வம் இயேசு ஒருவரே! ஆனால் எனக்காகப் பலியாகி பரலோக பாதையை அமைத்த தேவன் இயேசு கிறிஸ்து ஒருவரே!

அன்பானவர்களே! நீங்கள் இயேசுவை உங்களுடைய பாவத்துக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார் என்பதை விசுவாசித்து பின்பற்றுவீர்களானால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சரியான பாதையைத் தெரிந்து கொள்ள தேவன் உதவி செய்வார். நீங்கள் என்றைக்கும் வெட்கப்பட்டுப் போவதில்லை. உங்களை நித்திய அக்கினயிலிருந்து பாதுகாத்து மீட்டுக்கொள்வர். நீங்கள் செய்யப்போவது மத மாற்றமல்ல மனமாற்றமே. இதுவே நம்மை படைத்த தேவன் நமக்கு தரும் மாபெரும் நற்செய்தி.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப்போஸ்தலர் 4:12) நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். (1 யோவான் 2:2) தங்களின் சரியான பயணத்தை இரட்சகரான இயேசு கிறிஸ்துவுடன் தொடர தேவன் உதவி செய்வாராக ஆமென்.

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.