நற்செய்தி கைப்பிரதிகள்

Logopit 1734603510288

ஆசிரியர்: நரசிம்முடு.

தமிழாக்கம்: ஜோசப்கோவிந்த்.

மேஷ் என்ற நபர் தான் எதிர்க்கொண்ட இன்னல்களால் தான் அறிந்த கடவுள்களை வணங்கிய பிறகும் துன்பங்கள் அவனை விட்டு நீங்காத காரணத்தால் எவ்வளவோ மன வருத்தகத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து செல்கையில் வழியில் அவனது நண்பனான சுரேஷ் என்பவன் அவனை சந்தித்தான். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கவனியுங்கள்.


சுரேஷ்: என்ன ஆச்சி மாமா?


ரமேஷ்: எனக்கு வாழ மனமில்லை மாமா, என் பிரச்சனையெல்லாம் தீர்ந்து போகவேண்டுமென்று எல்லாக் கடவுளையும் வேண்டிக்கிட்டேன், என் அழுகையை ஒரு கடவுளும் கேட்கவில்லை. ஆதாலால் நான் வாழ விரும்பவில்லை மாமா!


சுரேஷ்: மாமா, கடவுளைப் பற்றியும், அவர் உன்னை என்ன நோக்கத்திற்காகப் படைத்தார் என்றும் தெரிந்துக்கொள்ளாமல் அப்படிப் பேசாதே என்றான்.


ரமேஷ்: நான் தெரிந்துக்கொள்ள வேறென்ன இருக்கு?


சுரேஷ்: தெரிஞ்சுக்க எவ்வளவோ இருக்கு, நம்ம பிரச்சனைகளை எல்லாம் போக்க கடவுள் இருக்கான்னு நினைக்கிறீயா? நம்ம இந்த உலகததுல எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்று நினைக்கிறாயா?


ரமேஷ்: எனக்குத் தெரிந்தவரை அப்படித்தான் என்று நினைக்கிறேன் மாமா. கோவிலில் பூசாரியும் அப்படிச் சொன்னார், சர்ச்சுக்குப் (திருச்சபை) போனால் அங்குள்ள பாஸ்டாரும் அப்படித்தான் சொல்கிறார், முஸ்லிமிடம் போனால் அவரும் அப்படித்தான் சொல்கிறார். கடவுளை நம்பினால் நமக்கு எந்தவித நோயும் நீங்கும், எல்லா கஷ்டங்களும் நீங்கும் என்று சொன்னார்கள். உன் வீட்டில் ஏதோ பில்லி சுன்னியம் இருப்பதாக ஒருவர் சொல்லி அது விலக இந்த மந்திர பலகை வாங்கி வீட்டில் வைக்க சொன்னார், அதையும் வாங்கினேன். ஒரு திருச்சபை போதகர் என்னிடம் ஜெபம் செய்த எண்ணெய் வாங்கச் சொன்னார், நானும் வாங்கினேன். முஸ்லிம் தாயத்து வாங்கச் சொன்னார், அதையும் வாங்கினேன். ஆனால் அதில் எந்தவித பலனில்லை. தேவன் இருப்பது நமக்காக இல்லையென்றால் கடவுள் ஏன் இருக்கிறார்? கடவுளை நம்புவதால் என்ன பயன்?


சுரேஷ்: ஒரு காரியத்தை நீ சிந்திக்கவேண்டும். கடவுள் நமக்காக மட்டுமே இருக்கிறார் என்றால், இவ்வுலகில் தேவ பக்தியுள்ளவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும், இல்லையா? ஆனால், கூகுளில் தேடினால் முதல் பத்து பணக்காரர் பட்டியலில் ஏழு பேர் நாத்திகர்களே இருக்கிறார்கள்.


ரமேஷ்: அப்படியா! நான் இப்படி எப்போதும் சிந்திக்கவில்லை, (கூகுள் தேடலுக்குப் பிறகு) ஆம் மாமா, நீ சொல்வது சரிதான், முதல் பத்து பேரில் ஏழு பேர் 1. ஜெஃப் பெசோஸ், 2. பில் கேட்ஸ், 3. மார்க் ஜுக்கர்பெர்க், 7. வாரன் பஃபெட், 8. லாரி பேஜ், 9. எலான் மஸ்க், 10. செர்ஜி பிரின் - 7 ஆகஸ்ட் 2020 வரை) நாத்திகர்களாக உள்ளனர். ஆனால் நாம் ஏன் கடவுளை நம்ப வேண்டும்? நம்புவதில் என்ன பயன்?


சுரேஷ்: இந்த உலகில் கிட்டத்தட்ட 90% மக்கள் ஏதோ ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள். ஏறக்குறைய எல்லா மதங்களும் மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் மற்றும் நரகம் உள்ளது என்று சொல்லுகின்றன. கடவுள் நம் செயல்களுக்கு ஏற்ப நம்மை நியாயந்தீர்க்கிறார், அவருடைய பார்வையில் நீதியுள்ளவர்களுக்கு இரட்சிப்பை அதாவது சொர்கத்தை தருகிறார் என்று அது சொல்கிகிறது.


ரமேஷ்: அப்படியானால் கடவுள் சொர்கத்தை கொடுப்பதற்கு மட்டுமா? இந்த வாழ்க்கையில் ஏற்ப்படும் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் அவரால் தீர்க்க முடியாதா?


சுரேஷ்: இந்த கஷ்டங்கள் அவரால் தீர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை, தேவனுக்கு நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதே அவருக்கு முக்கியம். அதற்கு நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்.
1) நாம் யாரை நம்புகிறோமோ, அவர் உண்மையான கடவுளாகவும், அவர் நம்பகமானவராக இருக்க வேண்டும்.
2) நாம் அவரை உத்தம இதயத்துடன் விசுவாசிக்க வேண்டும்.


ரமேஷ்: உண்மையான கடவுள் என்றால் என்ன? எல்லா கடவுளும் கடவுள் தானே? எனக்குப் பிடிக்காதது இதுதான். இவ்வளவு பேர் கடவுள்களாக இருக்கும்போது ஒருவரே உண்மையான கடவுள் என்று சொல்லுகிறாய்?


சுரேஷ்: மாமா! என்னை 2 நிமிடம் பேச விடு.


ரமேஷ்: 2 நிமிஷம் தானே சரி பேசு.


சுரேஷ்: உண்மையான கடவுளுக்கு அன்பு, சத்தியம் ஆகிய குணங்கள் உண்டு. இதை நீ ஒப்புக்கொள்கிறயா?


ரமேஷ்: ஆமா! அந்த குணங்கள் இல்லாவிட்டால் கடவுள் என்று எப்படி சொல்ல முடியும்? இவை எல்லா கடவளிடமும் உள்ளன.


சுரேஷ்: அந்த குணங்கள் எல்லா கடவளிடமும் இருக்காது, உண்மையான கடவுளிடம் மட்டுமே உள்ளது.


ரமேஷ்: அது எப்படி கொஞ்சம் விவராமாக சொல்லு?


சுரேஷ்: ஒரு பள்ளி ஆசிரியருக்கு ஒரு பிரச்சனை வந்தது. ஒரு மாணவனின் வினா தாளைத் திருத்தும் போது அவன் பெற்ற மதிப்பெண் 34, தேர்ச்சி மதிப்பெண் 35 தானே?


ரமேஷ்: ஆமா, 100க்கு 35 வேணும், அப்ப தான் தேர்வில் வெற்றிபெற முடியும். இதில் எந்த பிரச்சனையும் இல்லை, '1' மதிப்பெண் சேர்த்து அவனை தேர்ச்சி பெற செய்ய முடியும் தானே?


சுரேஷ்: ஆமா மாமா, நீ சொன்ன மாதிரி '1' மதிப்பெண் சேர்த்து தேர்ச்சி பெற செய்ய முடியும், அவ்வாறு செய்தால் அந்த ஆசிரியரிடம் உண்மை இருக்காது. அன்பு காட்டி '1' மதிப்பெண் சேர்த்தால் சத்தியம் இருக்காது. எனவே நீங்கள் சத்தியத்தைப் பின்பற்றி சரியாகத் திருத்தினால், உங்களுக்கு 34 மதிப்பெண்கள் கிடைக்கும். அப்போது அந்த மாணவன் தோல்வி அடைவான். அந்த ஆசிரியர் இரக்கமும், அன்பும் இல்லாதவராக இருப்பார். அன்பைக் காட்டினால் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது, சத்தியத்தைப் பின்பற்றினால் அன்பைக் காட்ட முடியாது மாமா?


ரமேஷ்: ஆமா! நான் எப்போதும் இப்படி யோசித்ததில்லை! பின்பு இப்போ எப்படி!


சுரேஷ்: மாணவன் தேர்ச்சி பெற வேண்டும், அதே நேரத்தில் சத்தியத்திதைப் பின்பற்ற வேண்டும். இது சாத்தியமா?


ரமேஷ்: எனக்குத் தெரிந்தவரை இது சாத்தியமில்லை. நீ சொன்னது போல் இந்த ஆசிரியர் பெரும் சிக்கலில் தான் இருக்கிறார். பின்ன இப்போது எப்படி?


சுரேஷ்: இப்ப உனக்கு கொஞ்சமாவது புரிந்திருக்க வேண்டும். ஒரு நபர் ஒரே நேரத்தில் சத்தியம் மற்றும் அன்பு போன்ற குணங்களைக் கொண்டிருப்பது எளிதான காரியம் அல்ல.


ரமேஷ்: சரி இப்ப எப்படி?


சுரேஷ்: இந்த ஆசிரியருக்கு இதுதான் பிரச்சனை. இதே பிரச்சனை ஒரு அரசருக்கும் வந்தது. அந்த அரசன் இந்தப் பிரச்சனையைத் தீர்த்தான்.


ரமேஷ்: அப்படியா! அது எப்படி?


சுரேஷ்: ஒரு நாட்டை ஒரு அரசன் ஆட்சி செய்து வந்தான். அந்த அரசனுக்கு அந்த நாட்டில் அன்பானவன், நியாயமானவன், நீதியுள்ளவன் என்று நல்ல பெயர் அந்த அரசன் பெற்றிருந்தான். அரசனை நேசித்த நண்பர் ஒருவர் அரசவையில் பணிபுரிந்து வந்தார். அந்த நண்பருக்கும் அரசன் என்றால் மிகவும் பிடிக்கும், அதனால் அவரும் மிகவும் விசுவாசமானவர், நேர்மையானவர் அவன் மிக உத்தமத்தொடு பணிசெய்பவான். ஒருமுறை நடந்தது என்னவென்றால், அரசனுடைய நண்பர் மிகவும் சிரமப்பட்டார், அரசனக்குத் தெரியாமல் அதே ஊரில் உள்ள பல பணக்காரர்களிடம் பெரும் தொகையை கடன் வாங்கி இருந்தான், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பணத்தைத் திருப்பித் தர அவனால் முடியவில்லை. பிறகு அவனுக்கு கடன் கொடுத்தவர்கள் அவனை அரசனிடம் அழைத்து வந்து அவனை தண்டிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அப்போது அரசன் மிகவும் வருத்தப்பட்டான். இப்போது அந்த அரசன் சட்டசபையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட இடத்தில் அரசனுடைய நண்பன் நிற்கிறான். இப்போது அந்த அரசன் என்னவென்று தீர்ப்பளிக்க முடியும்? அவன் நண்பனை மன்னித்தால் அந்த ஊரில் உள்ளவர்கள் அரசனுடைய நண்பனுக்கு ஒரு நியாயம், நாட்டு மக்களுக்கு ஒரு நியாயமா? என்று சொல்லுவார்கள். மேலும், அந்த அரசனிடம் சத்தியமில்லை. அவர் நீதியுடன் மட்டுமே தண்டிக்கப்படுவார் என்றால், அவரை அதே மக்களைத் அரசன் தனது நண்பர் என்று கூட பார்க்காமல், அவனை தண்டித்துவிட்டார். மக்களாகிய நம்மை அவர் எப்படி நேசிப்பார். இந்த சூழ்நிலையில் அரசன் அன்பு காட்டினால் நியாயம் செய்ய முடியாது. நியாயம் காட்டினால் அவனால் அன்பைக் காட்ட முடியாது. இப்போது அரசன் தன் நண்பனை மன்னித்து நியாயம் செய்ய வேண்டும். இது சாத்தியமா?


ரமேஷ்: அது சாத்தியமில்லை, இப்போது அரசனும் பெரும் சிக்கலில் இருக்கிறார்?


சுரேஷ்: இந்த அரசன் எப்படி இந்த பிரச்சனையை தீர்த்தார் என்று தெரிந்து கொள்வதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி.


ரமேஷ்: ம்..! கேள் என்றான்.


சுரேஷ்: ஒரு தப்பும் செய்யாமல் பரிபுரனாமான நபர் யாராவது இந்த உலகத்தில் உண்டா?


ரமேஷ்: இல்லை, அப்படிப்பட்டவர் யாரும் இல்லை.


சுரேஷ்: கடவுள் நீதியுள்ளவர் என்பது உனக்குத் தெரியும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நீதியாக தண்டிக்கப்பட்டால் என்ன நடக்கும்?


ரமேஷ்: எல்லாரும் நரகத்துக்குப் போக வேண்டியது தான். ஐயோ! கற்பனை செய்து பார்க்கவே மிகவும் பயமாக இருக்கிறது. இப்போது நரகத்திலிருந்து இரட்ச்சிப்பை பெறுவது எப்படி?


சுரேஷ்: இப்போது அந்தக் கதையில் வரும் அரசனுக்குப் பதிலாக நீ கடவுளாக என்று அழைக்கப்படும் எந்தக் கடவுளையும் வைத்துக் கொள். நீ அந்த குற்றவாளியின் இடத்தில் நில் உன்னை அந்த நரகத்திலிருந்து காப்பாற்ற முடியுமா என்று கற்பனை செய்து பார்.


ரமேஷ்: இப்படிப் பார்த்தால் நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால் கடவுள் என்னை நியாயமாக தண்டிக்காமல் என்னை மன்னித்தால், கடவுள் அநியாயமாக தீர்ப்பளிப்பதாக இருக்கும். கடவுள் எப்போதும் நீதியுள்ளவர் என்பதை நான் அறிவேன். அப்படியானால் என் பாவங்கள் எப்படி மன்னிக்கப்படும்? என்னை நரகத்தில் இருந்து காப்பாற்றுவது எப்படி? அந்த அரசனுக்குப் பதிலாக நான் கற்பனை செய்த தெய்வங்களை எல்லாம் வைத்து பார்த்தேன். இந்த இரண்டு குணங்களும் (அன்பு மற்றும் சத்தியம்) யாரிடமும் இருப்பது சாத்தியமாகத் தெரியவில்லை. அன்பினால் நான் காப்பாற்றப்பட்டால், அது அநீதியாகும், எனக்கு நியாயமான தண்டனை கிடைத்தால் அன்பு எங்கே காணப்படும்?


சுரேஷ்: கடவுள் நம்மை நியாயமாக நியாயந்தீர்த்து மன்னிக்க வேண்டும். கடவுள் அல்லாத பொய்யான கடவுள்களுக்கு இது சாத்தியமற்றது தான். ஆனால் நம்மைப் படைத்த உண்மையான கடவுளால் எல்லாம் சாத்தியம். உனக்குத் தெளிவாகப் புரிய வேண்டுமானால், நான் முன்பு சொன்ன கதைக்கு வருவோம் அதன் பின்பு அந்த அரசன் என்ன செய்தார் என்பதை விளக்குகிறேன். அவர் தனது நண்பனை நியாயமாக தீர்ப்பளித்து மற்றும் அவனது குற்றத்திற்காக அவனுக்கு ஒரு பெரிய தொகையை அபராதம் விதித்தார். பின்னர் அவர் தனது அரச அங்கிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரியணையில் இருந்து இறங்கி, குற்றம் சாட்டப்பட்டவரின் இடத்தில் நின்று அபராதத்தை அவரே செலுத்தினார். அதாவது, அரசனுடைய நண்பனின் குற்றத்திற்காக நியாயமாக தீர்ப்பளித்தார். அதே நேரத்தில் அவருடைய நண்பனுக்காக அன்புடன் அபராதம் செலுத்தினார். இதனால் அவர் தனது நண்பரை தண்டனையிலிருந்து நியாயமாக காப்பாற்றினார். அவ்வாறே, நம்முடைய கடவுளும் தான் நேசித்த மக்களுக்காக மனிதனாகி, கல்வாரி சிலுவையில் மனிதர்கள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும், கீழ்ப்படியாமைக்கும் நியாயமான தண்டனையை அவரே பெற்றார். அவரில் பாவம் இல்லை, ஆனால் அவர் உலக மக்களின் பாவத்தைச் சுமந்தார். அவர் தம் மக்களின் பாவங்களுக்காக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். சுருக்கமாகச் சொன்னால், கடவுள் உண்மையாக இருப்பதால், மனிதனாக வந்து பாவத்தை நியாயமாக தண்டிக்காமல், மக்களின் பாவங்களை மன்னிக்க முடியவில்லை. அதனால்தான் ஆண்டவர் இயேசுவிடம் மட்டுமே சத்தியமும், மற்றும் அன்பும் இருக்கிறது.


ரமேஷ்: நீ ஆரம்பத்தில் சொன்னது உண்மைதான். உண்மையான கடவுள் யார் என்று இப்போது அறிந்துக்கொண்டேன். என் பாவங்களை மன்னிக்கத் தம்முடைய உயிரை ஈவாக கொடுத்த கடவுளின் உண்மையையும் அன்பையும் அறியாமல், கடவுள் என் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று இருந்தேன். ஆனால் இப்போது என் உண்மையான தேவையை நான் அறிந்துக்கொண்டேன். நான் மரிக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இயேசு எனக்கு நித்திய ஜீவனை கொடுப்பதற்காக மரித்தார். எனது பிரச்சனைகள் அனைத்தும் இப்போது மிகவும் சிறியதாகத் தெரிகிறது, அவர் எனது எல்லாவித பிரச்சனையிலிருந்து (நித்திய நரகத்தில்) என்னைக் காப்பாற்றினார்.


சுரேஷ்: இந்த சத்தியத்தை அனைவருக்கும் அறிவிக்க முயலும்போது, ​​மதமாற்றம், என்றும் நீங்கள் மதவெறியை உண்டாக்குகீறிர்கள் என்று பலரும் எங்களை விமர்சிக்கிறார்கள். எல்லோரும் உன்னைப் போல் நேர்மையான உள்ளத்துடன் சிந்தித்தால் நன்றாக இருக்கும்.


குறிப்பு: இதில் வரும் காட்சிகள் கற்பனையானவை ஆனால் சொல்லப்பட்ட ஆன்மீக விஷயங்கள் அனைத்தும் உண்மையே.


அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்போஸ்தலர் 4:12)


நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.