தேவன் சுவிசேஷத்தின் மூலம் மனிதர்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்க விரும்புகிறார். ஆனால் மனிதன் அந்த சுவிசேஷத்தின் மீது விசுவாசம் வைப்பதில்லை. ஏனெனில், மனிதர்கள் நாங்கள் செய்த பெரும் பாவங்கள் இவ்வளவு எளிதில் போகுமா? என்ற நம்பிக்கையின்மையில் அவர்கள் வாழ்கிறார்கள். பின்வரும் கதை அவர்களுக்கு சுவிசேஷத்தின் சத்தியத்தையை தெளிவாக விளக்குகிறது.
ஒரு ஊரில் மாபெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அந்த செல்வந்தனுக்கு சொந்தமான பல வீடுகளில் ஏராளமான ஏழைகள் வாடகைக்கு தங்கி இருந்தனர். அவர்கள் அந்த செல்வந்தனின் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக பலர் குத்தகை வாங்கியிருந்தார்கள். ஆனால் அவர்களின் வறுமையின் காரணமாக வீட்டு வாடகையையும், நிலத்தின் குத்தகை தொகையையும் சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் போனது. சில ஆண்டுகளில் அது பெரும் கடனாக மாறியது. அவ்வாறு அந்த செல்வந்தனுக்கு கடன்பட்டவர்கள் அனைவரும் அவருக்கு உறுதிமொழி பத்திரங்களை எழுதினார்கள். இதற்கிடையில், அந்த செல்வந்தன் இயேசு கிறிஸ்துவை தன்னுடைய இரட்சகராக விசுவாசித்தான். மேலும் தேவனின் அன்பை அனுபவித்திருந்தார். இயேசுகிறிஸ்து தன்னை நேசிப்பது போல தானும் மற்றவர்களை நேசிக்கவும், அவர்களிடம் கருணை காட்டவும் அந்த செல்வந்தனுக்கு விருப்பம் இருந்தது. உடனே அவருக்கு தன்னிடம் கடன்பட்ட ஏழை விவசாயிகள் தன் நினைவுக்கு வந்தார்கள். அவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு அவர் மனதிற்குள் ஒரு திட்டத்தை உருவாக்கினார்.
அந்த திட்டம் என்னவெனில் ஒரு "குறிப்பிட்ட நாளில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையில் என்னிடம் கடன் பட்டவர்களும், உறுதிமொழியின் கீழ் கையொப்பமிட்டவர்களும் அந்த செல்வந்தனுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களை எல்லாம் அவர் ரத்து செய்ய விரும்புகிறார். கடன் பெற்றவர்கள் அவரது அலுவலகத்திற்கு நேரில் வந்து அவரிடம் தங்கள் இயலாமையை சொல்லி தங்கள் கடனை ரத்து செய்துக் கொள்ளவும், அவர்களின் கடன் உறுதிமொழி சீட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். என்ற அறிவிப்பை எழுதி அந்த செல்வந்தனின் கையொப்பததோடு அந்த பலகைகளை ஆங்காங்கே வைத்திருந்தனர். இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட அந்த பட்டணத்தார் மத்தியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் இதைக் குறித்தே பேச்சாக இருந்தது. கடனாளிகள் "இது உண்மையா? உண்மையில் நம்முடைய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? அந்த செல்வந்தன் வார்த்தை தவறாதவர் தான். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை எப்படி விட்டுவிடுவார்? இது நடக்குமா? ஒருவேளை இது எல்லாம் புரளியாக இருக்குமா? என அவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு உண்டானது.
செல்வந்தன் சொல்லியிருந்த அந்த நாள் வந்தது. சரியாக 10:00 மணிக்கு செல்வந்தனும், அவருடைய கணக்காளரும் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான கடனாளிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் சலசலப்பு இருந்தது. நாம் இந்த காரியமாக உள்ளே சென்றால் என்ன ஆகுமோ? என்று சிலர் பயந்தனர். யாராவது ஒருவர் உள்ளே சென்று கடன் நிவாரணம் பெற்றுக்கொண்டு வந்தால் நாமும் போகலாம் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு நினைத்தவர்கள் உள்ளே செல்வதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை. 11:00 மணி ஆகியும் யாரும் உள்ளே சென்று தங்கள் கடனை ரத்து செய்துக் கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து ஒருவன் தன் அருகில் இருப்பவனை பார்த்து "நீ சென்று உன் கடனை தீர்த்துக்கொள்ளக் கூடாதா?" என்று கேட்டான். அதற்கு அவன் என்னுடைய கடன் தொகை சிறியது தான், பெரிய கடனாளிகள் முதலில் போகட்டும், பிறகு என்னைப் போன்ற சிறிய கடனாளிகள் போகலாம்" என்று அலச்சயத்தோடு பதில் சொன்னான். விலை மதிப்பற்ற நேரம் கடந்துபோகிறது, ஆனால் யாரும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
11:45- மணியளவில் ஒரு வயதான தம்பதிகள் சோர்வுடன் அங்கு வந்தனர். அங்கே நின்றவர்களிடம் “தம்பி இன்றைக்கு முதலாளி நம்முடைய கடன்களை எல்லாம் ரத்து செய்கிறார் என்று சொன்னது உண்மையா? என்று அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து அந்த முதியவர் கேட்டார். அதற்கு உடனே அங்கிருந்தவர்களில் ஒருவன், இதுவரை ஒரு கடனை கூட ரத்து செய்யவில்லை என்றான். மற்றொருவன் இவையெல்லாம் ஏமாற்று வேலை என்றான். அந்த வயதான தம்பதியினர் மிகுந்த வருத்தம் அடைந்தனர். அவர்களின் கண்கள் ஈரமானது. இவை அனைத்தும் பொய்தான? நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்தோம். நாங்கள் இறப்பதற்கு முன், கடனையெல்லாம் தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும். என்று நினைத்தோம். அனால் இப்படி ஆகிவிட்டதே, என சோர்வுடன் அவர்கள் திரும்பி செல்ல தயாரானார்கள். இதற்கிடையில், அவர்களில் ஒருவன், "இதுவரை யாரும் உள்ளே செல்லாததால் அங்கு என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியவில்லை, ஒருவேளை நீங்கள் உள்ளே செல்லுங்கள் ஒருவேளை உங்கள் கடன் தொகை ரத்து செய்யப்படலாம், அப்படி நடந்தால் உடனடியாக எங்களிடம் வந்து சொல்லுங்கள், நாங்களும் உள்ளே செல்வோம்" என்று சொன்னான். அவர்கள் அந்த வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து, ஒருவித தயக்கத்துடன் கதவை திறந்து உள்ளே சென்றனர். உள்ளே சென்றதும் “வாங்க, வாங்க, உக்காருங்க, உங்க பெரு, உங்க ஊர் என்ன...” என்று மரியாதையான வார்த்தைகளோடு கேட்டனர். அந்த முதியவர் அந்த செல்வந்தனை பார்த்து “ஐயா எங்கள் கடனை ரத்து செய்வோம் என்று சொன்னது உண்மையா?” என்று தயக்கத்தோடு கேட்டார். அதற்கு அந்த கணக்காளர், "ஐயா உங்களை ஏமாற்றி விடுவோம் என்று நினைக்கிறீர்களா?" என்று பதிலளித்தார்.
அந்த முதியவர் அதுவரை வெளியில் நடந்த நிகழ்வை அந்த செல்வந்தனுக்கு விவரமாக சொன்னார். அதற்கு அந்த செல்வந்தன் இவ்விதமாக சொன்னார்: "நீங்கள் நான் சொன்ன அறிவிப்பை விசுவாசித்து வந்து கடனை ரத்து செய்யும் படி கேட்டபடியால், இன்று முதல் உங்கள் கடன் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்த பத்திரத்தை மகிழ்வுடன் வாங்கி செல்லுங்கள்" என்று செல்வந்தன் மகிழ்ச்சியுடன் கூறினார். அந்த வயதான கணவனும் மனைவியும் மகிழ்ச்சியுடன் செல்வந்தனுக்கு நன்றி கூறிவிட்டு பத்தரத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றனர். ஆனால் அந்த கணக்காளர் அவர்களை தடுத்து, 12:00- மணி ஆகும் வரை, உள்ளேயே காத்திருக்கும்படி சொன்னார். அதற்கு அந்த முதியவர் கணக்காளரை, பார்த்து ஐயா! வெளியே எங்களுடைய வார்த்தைக்காக பலர் காத்திருக்கிறார்கள், எங்கள் கடன் ரத்து செய்வதைப் பற்றி அவர்களிடம் போய்ச் சொன்னால் அவர்கள் உள்ளே வரத் தயாராக இருக்கிறார்கள்" என்று அந்த முதியவர் சொன்னார். அதற்கு அந்த செல்வந்தன் "நீங்கள் என் வார்த்தையை விசுவாசித்து எனக்கு மதிப்பளித்தீர்கள், அதுபோல அவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும்” என்று சொல்லி அவர்களைத் தடுத்து உட்கார வைத்தார்.
நேரம் 12:00- மணியை நெருங்கியது. வெளியில் உள்ளவர்கள் அந்த வயதான தம்மதியினர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். கூடியிருந்த அனைவரும் ஒரு படபடப்புடன் அவர்கள் சுற்றி முற்றிப் பார்க்கிறார்களே தவிர உள்ளே யாரும் செல்ல விரும்பவில்லை. உள்ளே சென்ற முதியவர்களின் நிலை என்ன ஆனதோ? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். நேரம் 12:00 மணியை தொட்டது. அந்த வயதானவர்கள் வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்த உடனே என்ன ஆச்சி முதலாளி சொன்னதை சொன்னபடி செய்தாரா? என்று கேட்டார்கள். அந்த முதியவர் அவர்களிடம்: இவ்விதமாக சொன்னார் மகிழ்ச்சியான வார்த்தைகளுடன், "அவர் மிகவும் நல்லவர், அவர் சொன்னபடி கடனை தள்ளுபடி செய்துவிட்டார். இதோ எங்கள் கடனுக்கான ஆவணம் பாருங்கள் என்று அவர்களுக்கு காட்டினார் அந்த முதியவர். இதற்கிடையில் செல்வந்தரும் கணக்காளரும் வெளியே வந்ததும் அங்கிருந்த அனைவரும் அந்த செல்வந்தனை நோக்கி “எங்கள் கடனையும் ரத்து செய்து எங்களையும் காப்பாற்றுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். நேரம் கடந்து விட்டது நீங்கள் வாய்ப்பை தவறவிட்டீர்கள். "இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லி அவருடைய வண்டியில் ஏறி சொன்றுவிட்டார். அந்த செல்வந்தனின் பேச்சை விசுவாசிகாதவர்கள் எவ்வளவு பரிதாபமானவர்கள்!
அன்பான வாசகரே! சொல்லப்பட்ட கதையை போல மனு குலத்தின் பாவக்கடனை தீர்ப்பதற்காக தேவன் தம்முடைய நேசகுமரான இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார். மனித இனத்தின் பாவத்திற்காகவும், மீறுதலுக்காகவும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தண்டிக்கப்பட்டார் மற்றும் நசுக்கப்பட்டார். எனவே இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதின் மூலம் நம்முடைய பாவ கடனை தீர்ப்பேன் என்று வாக்களித்துள்ளார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." (ஏசாயா 53:5) . "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." (ஏசாயா 55:6).