நற்செய்தி கைப்பிரதிகள்
ஆசிரியார் : பெயர் அறியப்படாதவர்
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்

ஒரு கோடை காலத்து மாலை நேரத்தில், லண்டன் மாநகரின் தெருக்களில் ஒரு இளைஞன் சோர்வுற்ற உடலுடனும், சோகமான முகத்துடனும் சுற்றி திரிந்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனை பார்த்தால், ஒரு ஒழுக்கமற்றவனாய் வாழ்ந்து வீணாகப் பணத்தைச் செலவழித்து, காலி பாக்கெட்டுடன் பசியோடு இருப்பவனை போல காட்சியளித்தான். மறுநாள் காலையில் அந்த இளைஞன் “நியூயார்க்” நகரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவனுடைய நண்பர் ஒருவர் இன்று இரவு நடக்கவிருக்கும் நற்செய்தி கூட்டத்தில் நீ கலந்துக்கொண்டு தேவனுடைய செய்தியை கேட்கவேண்டும், என வேண்டிவிரும்பி கேட்டுக்கொண்டான். அதற்கு அவனும் சரி என்றான். அந்த நற்செய்தி கூட்டத்தில் மிகவும் பிரபல மிக்க போதகர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். மக்களின் கூட்டம் மைதனாம் முழுவதும் நிரம்பியிருந்தது, அந்த இளைஞர்கள் இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். போதகர் பேசுகிறதை மிக கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அன்று அந்த போதகர் கொடுத்த செய்தியின் வசனப்பகுதி, “சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” (2 கொரி 2:11).

இந்த வசனங்களை வாசித்த உடனே போதகர் இந்த மேற்கோள்களாக ஒரு நிகழ்வை சொன்னார். 'நான் ஒரு தெருவில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சுவாரஸ்யமான காட்சி என் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. ஒரு பன்றிக் கூட்டம் வரிசையாகவும், சுறுசுறுப்பாகவும், வழி தவறாமல் ஒரே நேர்கோட்டில் அந்த பன்றிகளை மேய்க்கும் மனிதனை பின்தொடர்ந்தது. பன்றிகளை ஒரு திசையில் வழி நடத்தி செல்வது மிகவும் கடினம். அவற்றை மேய்ப்பவன் பன்றிகளை ஒரு பக்கம் நடத்தினால் அது மறுபக்கமாக போவது தான் பன்றின் இயல்பான குணம். ஆனால் அந்த பன்றி மேய்ப்பன் மட்டும் எந்தவித சிரமம் இல்லாமல் அவைகளை நேராக வழி நடத்திச் செல்கிறான். இந்தக் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது, நான் அவைகளை பின்தொடர்ந்தேன். அவைகள் அவசர அவசரமாக தன்னுடைய கூடாரத்திற்குள் நுழைந்தபோது, உடனே ​கதவு மூடப்பட்டது. நான் அந்த பன்றி மேய்ப்பன் வரும்வரை கூடாரத்தின் வெளியே காத்திருந்தேன், சிறிது நேரம் கழித்து அந்த பன்றி மேய்ப்பன் வந்தான். நான் அவனை பார்த்து, 'ஏம்பா, இவ்வளவு பெரிய பன்றி கூட்டத்தை உன்னால் எப்படி சுலபமாக வழிநடத்த முடிகிறது?' என்று கேட்டேன். அதற்கு அந்த பன்றி மேய்ப்பவன் சத்தமாகச் சிரித்துகொண்டே, 'என் தோள் பட்டையில் இருக்கும் அவரைக்காய் நிறைந்த பையை நீ பார்க்கவில்லையா? 'பன்றிகளுக்குப் மிகவும் பிடித்தது அவரைக்காய் நான் வைத்திருக்கும் பையில் அது உள்ளது. நான் அவைகளை நடத்த வேண்டிய வழியில் அந்த அவரைக்காயை ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டு சென்றால் போதும், எனக்கு எந்தவித சிரமமில்லாமல் என் பின்னே அந்த பன்றிக் கூட்டமும் வரும்' என்று பதிலளித்தான்.

அந்த மேற்கோளை முடித்துவிட்ட போதகர் தன் எதிரில் அமர்ந்திருந்த மக்களை பார்த்து, தன்னுடைய குரலை உயர்த்தி, இதுப்போல தான் 'உங்களில் சிலரை சாத்தான் சிறைப்பிடித்து, தன் விருப்பத்தின் படி நரகத்திற்கு அழைத்துச் செல்கிறான். பாவத்தின் பாதையில் உங்களை இழுத்து செல்ல, நீங்கள் எந்த வகையான அவரைகாயை விரும்புகிறீர்கள் என்று சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். அவன் போடும் அவரைகாயால் நீங்கள் அதற்கு வசப்பட்டு எங்கே செல்கிறீர்கள் என்பதை மறந்து அதை பின்தொடர்ந்து செல்கிறிர்கள் அதன் விளைவு நீங்கள் எதிர்ப்பார்த்ததை சாப்பிடுவதற்குள் நரகத்திற்குள் தள்ளப்பட்டு கதவு உங்களுக்குப் பின்னால் மூடப்படும். நீங்கள் நரகத்தில் வேதனையை அனுபவிப்பீர்கள் என்று எச்சரித்தார்.

அந்த போதகரின் வார்த்தைகள் அந்த இளைஞனின் இருதயத்தில் கூர்மையான அம்பைப் போல உள்நோக்கி சென்றது. ஐயோ! நானும் இத்தனை நாட்களாக அந்த பன்றியை போல ஏமாற்றப்பட்டு பாவத்திற்குள் தள்ளப்பட்டேன், நான் எங்கே போகிறேன்? என் முடிவு என்னவாக இருக்கும் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

மறுநாளில் அவன் கப்பலில் ஏறி “நியூயார்க்” நகரத்திற்கு புறப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் உள்ள அவனது நண்பனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை திறந்து வாசித்தான் அதில் இவிதமாக இருந்தது: 'நண்பனே, நான் மனந்திரும்பி தேவனை அறிந்துக் கொண்டேன் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன், நீயும் நானும் இறுதியாக கலந்துக் கொண்ட நற்செய்தி கூட்டத்தின் மூலமாக என் வாழ்க்கையில் தேவனை அறிந்துக்கொண்டேன். நல்லவேளை அந்த போதகரின் செய்தியைக் கேட்க நீ என்னை நற்செய்தி கூட்டத்திற்கு அழைத்துச் சென்றதற்காக நான் தேவனுக்கு நன்றி செல்லுத்தி துதிக்கிறேன்.'

அன்புள்ள நண்பரே, உன் வாழ்வின் நிலை எப்படி இருக்கிறது? சாத்தான் உன்னை பாவம், மரணம் மற்றும் நரகத்திற்கு தனது சோதனைகளால் கவர்ந்து இழுக்கிறான். என்பதை நீ புரிந்துகொள்கிறாயா? “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” (பிரசங்கி 11:9). “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்;” (எசேக்கியேல் 33:11). "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8). "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23). "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்." (1 தீமோத்தேயு 1:15). நம்முடைய பாவங்களினால் நாம் பரிசுத்த தேவனுக்கு முன்பாக நிற்க முடியாது என்பதை அறிந்து தேவனிடம் பாவ மன்னிப்பை கேட்பவன் இரட்சிக்கப்படுகிறான். உன்னை நீ பாவி என்று உணர்ந்து பரிசுத்த தேவனிடம் வருவதற்கு இந்த வாய்ப்பை இன்றே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது, உங்கள் பாவங்களை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வாருங்கள். அவர் ஒருவர் மட்டுமே உன் பாவங்களை மன்னித்து உனக்கு நித்திய சமாதானத்தையும், நித்திய ஜீவனையும்த் தருபவர்.

"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். "(ரோமர் 10:9). "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் ஆதாவது (பெற்றுக்கொண்டவர்கள்) எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:12). "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொன்னார்," (அப்போஸ்தலர் 16:31).

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.