கருத்து துணுக்குகள்
பரிசுத்த ஜாதி
 
"நாடார் என்றும் இல்லை, பிராமணர் என்றுமில்லை,
பள்ளர் என்றுமில்லை, பறையர் என்றுமில்லை,
தேவர் என்றுமில்லை, கௌண்டர் என்றுமில்லை,
உடையார் என்றுமில்லை, செட்டியார் என்றுமில்லை,
பணக்காரன் என்றுமில்லை, ஏழை என்றுமில்லை,
கொயில்பிள்ளை என்றுமில்லை, ஆயர் என்றுமில்லை,
பிரபலாமானவன் என்றுமில்லை, அறியப்படாதவன் என்றுமில்லை!"
 
இப்படியெல்லாம் ஒருவேளை நீங்கள் உங்களுக்குள்ளே வேறுபட்டு இருந்தால், நீங்கள் கிறிஸ்தவரே இல்லை!
இதை படிக்கும் போதே உங்களுக்கு ஒருவிதமான நெருடலாக அதை பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று கோபம் வந்தால், நீங்கள் இன்னும் இரட்சிக்கப்படவே இல்லை!
சரீரமாகிய சபை வெவ்வேறு அங்கங்களாக இருந்து வெவ்வேறு செயல்களை செய்கிறேதே தவிர, தலையாகிய கிறிஸ்துவை விட்டு பிரிந்து இருக்கவில்லை. அப்படி பிரிந்து இருந்தால் அத்தகைய அங்கம் செத்தது!
வேத வசனம் சொல்லுகிறது 'நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறீர்கள்' (கலாத்தியர் 3:8)
கிறிஸ்துவத்திலே அப்படி பார்த்தால் ஒரே ஒரு ஜாதி தான் உண்டு!
பரிசுத்த ஜாதி! (I பேதுரு 2 :9)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.