திருமண வாழ்க்கைக்கு 10 கட்டளைகள்
சகோ. டேவிட் தன்ராஜ்
1. உன் துணையை அன்றி வேறே துணை உண்டாயிருக்க வேண்டாம்
2. பேருந்து நிலையத்திலோ, அலுவலகத்திலோ புதிய துணை உண்டாயிருக்கவோ, தொடர்பு கொள்ளவோ வேண்டாம்
3. உன் துணையின் பெயரை வீம்புக்கு என்று இழுக்காதிருப்பாயாக
4. உன் விவாக மஞ்சத்தை பரிசுத்தமாக ஆசரிப்பாயாக
5. உன் துணையின் தாயையும் தகப்பனையும் கணம்பண்ணுவாயாக
6. உன் துணையின் குடும்பத்தாரை வார்த்தையினால் கொலை செய்யாதிருப்பாயாக
7. துணையின் உறவினர்களோடு விபசாரம் செய்யாதிருப்பாயாக
8. உன் துணையின் வீட்டில் களவு செய்யாதிருப்பாயாக
9. உன் துணையின் வீட்டாருக்கு எதிராக பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக
10. உன் துணையின் வீட்டாருடைய பொன்னையும், பொருளையும், பணத்தையும் அவர்களுக்குரிய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக