கட்டுரைகள்

 

 WhatsApp Image 2025 02 17 at 15.40.39 32b40ac2

ஆசிரியர்: ஜே.சி. ரைல்

நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (சகரியா 8:5)

அன்பான குழந்தைகளே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனம் வரப்போகிற காரியத்தைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஒருநாள் எருசலேம் வீதிகளில் என்ன நடை பெறப்போகிறது என்பதை தேவன் நமக்கு சொல்லுகிறார். “எருசலேம்” என்பது உங்களுக்குத் தெரியும், இது மிகவும் பிரபலமான ஒரு இடம். இது யூதர்களின் பிரதான நகரமாக இருந்தது. இது தாவீது அரசனும் சாலமோன் அரசனும் வாழ்ந்த நகரம். இது இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த நகரம். வேதத்தை வாசிக்கிற ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் எருசலேமைக் குறித்து ஓரளவுக்காவது அறிந்திருப்பார்கள்.

ஒரு காலத்தில் எருசலேம் நகரம் ஒரு பெரிய செல்வம் நிறைந்த நகரமாக இருந்தது. யூதர்கள் தேவனுக்கு பயந்து வாழ்ந்த வரை, அதுபோன்ற நகரம் பூமியில் இருந்ததில்லை. ஆனால் யூதர்களின் பாவங்கள் எருசலேம் நகரத்திற்கு அழிவைக் கொண்டுவந்தது. இது வறுமையினால், சிந்தைந்து போன, மற்றும் பாழடைந்த இடமாக, அதை காண்பவர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.

ஆனால் எருசலேம் மீண்டும் ஒரு பிரமாண்ட மற்றும் அழகான இடமாக மாறும் ஒரு நாள் வரப்போகிறது. பின்னர் மேலே குறிபிடப்பட்ட வார்த்தைகள் நிறைவேறும்: “நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும்”

அன்பான குழந்தைகளே, இதிலிருந்து இரண்டு காரியங்களை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எருசலேமின் பரிசுத்தமான, சிறந்த நாட்களில் சிறுவர்களும் சிறுமிகளும் தெருக்களில் விளையாடுவார்கள் என்று தேவன் நமக்கு சொல்லுகிறார். அது தவறு என்று எதுவும் நமக்கு சொல்லவில்லை. இதிலிருந்து நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

1. சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பற்றி தேவன் நினைக்கிறார்

சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தேவன் நினைக்கிறார் மற்றும் கவனிக்கிறார் என்கிற ஒரு காரியத்தை கற்றுகொள்ளுங்கள். அவர் எருசலேமின் ஆண்கள் மற்றும் பெண்களை மட்டும் சொல்லவில்லை. அவர் “சிறுவர்கள், சிறுமிகள்” பற்றி குறிப்பிடுகிறார். அவர்களில் அநேகர் இருக்கும்போது அது ஒரு நல்ல நேரமாக இருக்குமென்றும், அவர்கள் தெருக்களில் விளையாடும்போது அது நல்ல காலமாக இருக்குமென்று தேவன் நமக்குக் கூறுகிறார்.

சில மக்கள் குழந்தைகளை கவனிப்பதில் அக்கறை கொள்வதில்லை, மேலும் அவர்கள் இந்த உலகில் குழந்தைகள் அதிகமாக இருப்பதாக சொல்லுகிறார்கள். அந்த மக்கள் தேவனைப் போல இல்லை. பரலோகத்திலிருக்கும் மாபெரும் தேவன் குழந்தைகளை நேசிக்கிறார். இப்போது குழந்தைகளாக இருப்பவர்கள் இல்லையென்றால் பிற்காலத்தில் ஆண்களும் பெண்களும் இருக்கமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். சங்கீதம் 127:5 –ல் தேவன் சொல்கிறார், குழந்தைகளால் நிறும்பியிருக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்கிறார். சிறுவர்களையும் சிறுமிகளையும் விரும்பாமல், அவர்களுடன் எதிர்மாறாக பழகுகிறவர்கள், நீங்களும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வேதத்தில் குழந்தைகளைப் பற்றி அநேக இடங்களில் குறிப்பிடப்பட்டது. இஸ்மவேல், ஈசாக்கு, பென்யமீன், மோசே, சாமுவேல், அபியா போன்றவர்களின் வரலாற்றை வேதத்தில் வாசியுங்கள். சாலொமோனின் நீதிமொழிகளை வாசியுங்கள், அந்த ஞானி குழந்தைகளை பற்றி எத்தனை முறை பேசினார் என்பதைப் பாருங்கள். சுவிசேஷப்பகுதிகளை வாசிக்கிற போது இயேசு கிறிஸ்து எவ்வாறு சிறு குழந்தைகளை கவனித்து, அவர்களை தமது கரங்களால் எடுத்து ஆசீர்வதிக்கிறார் என்பதைப் பாருங்கள். (மாற்கு 10:16) அப். பவுலினுடைய நிருபங்களை வாசியுங்கள், அதில் குழந்தைகளை குறித்து எவ்வாறு கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம். இந்தக் காரியங்கள் அனைத்தும் நாம் கற்றுக்கொள்ளும் படியாக வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.

அன்புள்ள குழந்தைகளே, இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மறந்து விடாதீர்கள். தேவனைப்பற்றி சிந்திக்க தொடங்குவதற்கு நீங்கள் மிகவும் இளமையாகவோ அல்லது சிறியவராகவோ இல்லை. உங்களுக்கு குறும்பு செய்யும் வயதாகிவிட்டதா? அப்படியானால், நீங்கள் ஒழுக்கமாக இருக்க போதுமான வயதாகிவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வயதாகிவிட்டதா? அப்படியானால், உங்கள் ஜெபங்களை சொல்லும் அளவிற்கு வயதாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொள்ளும் வயதாகிவிட்டதா? அப்படியானால், நீங்கள் வசனங்களை கற்றுக்கொள்ளும் வயதாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தாயை அறிந்து நேசிக்கும் வயதாகிவிட்டதா? அப்படியானால், நீங்கள் இயேசுவை அறிந்து நேசிக்கும் வயதாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நம்மைப் போன்ற பாவிகளை இயேசு மீட்க சிலுவையில் மரித்தார்.

சிறுவர் சிறுமிகளே, இந்த முதல் சிறந்த பாடத்தை நினைவில் கொள்ளுங்கள்: தேவன் உங்களை கவனிக்கிறார். நீங்களும் தேவனை கவனியுங்கள்.

2. சிறுவர் சிறுமிகளை விளையாட தேவன் அனுமதிக்கிறார்.

இந்த வசனத்திலிருந்து இன்னொரு காரியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: சிறுவர் சிறுமிகள் விளையாட தேவன் அனுமதிக்கிறார். எருசலேமின் தெருக்களில் சிறுவர்களும், சிறுமிகளும் அமைதியாகவும் சும்மாவும் உட்கார்ந்திருப்பார்கள் என்று அவர் நமக்கு சொல்லவில்லை. சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடுவார்கள் என்று அவர் கூறுகிறார், மேலும் விளையாடுவது தவறில்லை என்று அவர் நமக்குக் கற்பிக்கிறார். குழந்தைகள் விளையாடவே கூடாது என்று சில நல்ல மக்கள் நினைக்கிறார்கள். எல்லா விளையாட்டுகளும் பாவமானவைகள் என்றும், சிறுவர்களும், சிறுமிகளும் எப்போதும் மிகவும் பாரதூரமான தோற்றம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், ஒருபோதும் சிரிக்கவோ அல்லது மகிழ்ச்சியாகவோ இருக்கக்கூடாது என்று அவர்கள் நமக்கு கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் சொன்னால், அவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள். எருசலேமின் நல்ல காலத்தில் சிறுவர்களும், சிறுமிகளும் தெருக்களில் விளையாடுவார்கள் என்று தேவன் நமக்கு சொல்லுகிறார். மேலும் அளவோடு விளையாடுவது தவறாக இருக்க முடியாது.

விளையாட்டு என்பது சிறுவர்கள் சிறுமிகளின் வயதுக்கு ஏற்றது. அவர்களால் எப்போதும் பாடங்களைக் கற்றுக்கொண்டோ அல்லது வேலை செய்துகொண்டோ இருக்க முடியாது. அதற்கு அவர்களின் மனம் போதுமான வலிமையை கொண்டிருக்காது. அவர்கள் வயதானவர்களைப் போல இல்லை. அவர்கள் தினமும் சிறிது ஓய்வும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர விளையாட்டு உதவுகிறது. அவர்கள் காலை முதல் இரவு வரை அசையாமல் அமர்திருந்தாலோ அல்லது நின்று கொண்டிருந்தாலோ அவர்களின் உடல் ஒருபோதும் நன்றாக இருக்காது. அவர்கள் வயாதாகும் போது ஆரோக்கியமான ஆண்களாகவும், பெண்களாகவும் இருக்க வேண்டுமென்றால், இளம் வயதிலே அவர்களின் அனைத்து உறுப்புகளும் உடற்பயிற்சி செய்யப்பட வேண்டும். ஒரு குழந்தை விளையாடுவது என்பது இயற்கையானது. ஒரு சிறுவனோ அல்லது சிறுமியோ யார் விளையாட்டை விரும்பவில்லையோ அவர்கள் சரியாக இல்லை என்பதே அதன் அர்த்தம்.

விளையாட்டு குழந்தைகளுக்கு சகித்துக்கொள்ளவும், ஏமாற்றங்களைச் சமாளிக்கவும் கற்றுக்கொடுக்கிறது. அவர்கள் எப்போதும் விளையாட்டில் வெற்றி பெற முடியாது மற்றும் அவர்களின் சொந்த வழியில் இருக்க முடியாது. விளையாட்டு அவர்களை சுறுசுறுப்பாகவும் ஆர்வமுள்ளவர்களாகவும் எதற்கும் தயாராகவும் ஆக்குகிறது. அவர்கள் விழித்திருக்கும் வரை திறமையான விளையாட்டுகளில் வெற்றிபெற முடியாது. வெலிங்டனின் பெரிய டியூக், தான் வாட்டர்லூ போரில் (1815 -ல்) வெற்றி பெறுவதற்கு, ஏடன் கல்லூரியின் மைதானத்தில் விளையாட்டின் மூலம் கற்றுக்கொண்ட யுக்திகள் உதவியாக இருந்தது என்று கூறினார்.

விளையாட்டு முடிந்ததும் சிறுவர் சிறுமிகள் நன்றாக கற்றுக்கொள்ள உதவுகிறது. ஒருநாள் முழுவதும் உட்கார்ந்து படித்து எழுதிக்கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் அவர்கள் பாடங்களை கூர்மையாகவும், விரைவாகவும், புத்திசாலித்தனமாகவும் கற்றுக்கொள்ளுகிறார்கள். மூளை, நரம்புகள் மற்றும் மனது அனைத்தும் விளையாடுவதற்கு சிறந்தது.

எந்த விதமான விளையாட்டும் சும்மா இருப்பதைவிட சிறந்தது. “சாத்தான் கைகளை சும்மா இருக்கச் செய்ய எப்போதும் சில வேலைகளை கண்டுபிடிப்பான்”. பள்ளி முடிந்ததும் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு சில நல்ல விளையாட்டு இல்லையென்றால் அவர்கள் தேவையில்லாத குறும்புத் தனங்களில் சிக்குவது உறுதி.

அன்புள்ள குழந்தைகளே, நான் உங்கள் விளையாட்டிற்கு நண்பன் என்பதை நீங்கள் உணருகிறீர்கள். நான் அப்படியாக இருப்பதில் வெட்கப்படவில்லை, ஏனென்றால் தேவன் அதை அங்கீகரிக்கிறார் என்பதை நான் பார்க்கிறேன். பாவத்தைத் தவிர வேறெதையும் செய்ய தேவன் அனுமதிக்கிறார்; அளவோடு விளையாடுவது பாவமல்ல.

3. நான்கு அறிவுரைகள்

இந்த கட்டுரையை சிறுவர் சிறுமிகளுக்கு நான்கு அறிவுரைகளைக் கூறி முடிக்க விரும்புகிறேன். நீங்கள் இதைப்பற்றி சிந்திப்பீர்கள், மறக்கமாட்டீர்கள் நான் நம்புகிறேன்.

1. உங்கள் எல்லா விளையாட்டுகளிலும், தேவனின் கண்ணையும் காதையும் நினைவில் கொள்ளுங்கள். அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார், கேட்கிறார். அன்பு குழந்தைகளே, தேவன் கேட்க விரும்பாத எதையும் நீங்கள் பேசாதீர்கள். தேவன் பார்க்க விரும்பாத எதையும் நீங்கள் செய்யாதீர்கள்.

2. உங்கள் எல்லா விளையாட்டுகளிலும், உங்கள் நிதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விளையாட்டில் தோற்றாலும், கனிவாகவும், மகிழ்ச்சியாகவும், தன்னலமற்றவர்களாகவும், நல்ல குணமுள்ளவர்களாகவும் இருங்கள். அன்புள்ள குழந்தைகளே, ஒருபோதும் உங்கள் உணர்ச்சியில் பறக்காதீர்கள். நீங்கள் எப்போது விளையாடினாலும் உங்கள் நிதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.

3. உங்கள் விளையாட்டின் காரணமாக உங்கள் வேலைகளை புறக்கணிக்காதீர்கள். பள்ளியிலும் வீட்டிலும் சிறந்த ஆணாக அல்லது பெண்ணாக இருக்க உங்கள் எல்லா விளையாட்டுகளும் உதவுட்டும். “எல்லா வேலைகளும் மற்றும் விளையாட்டு இல்லாத ஒன்று மந்தமான பயனை உருவாக்கிறது” என்பது முற்றிலும் உண்மை. அதேபோல எல்லா விளையாட்டும் வேலையே இல்லாத ஒன்று முட்டாளான மற்றும் பயனற்ற மனிதனை உருவாக்குகிறது என்பது அதே அளவு உண்மையென நான் நம்புகிறேன்.

4. கடைசியாக, உங்கள் விளையாட்டில் கூட, எல்லா உண்மையான மகிழ்ச்சியும் தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், சிறுவர்களே சிறுமிகளே கிறிஸ்துவை நேசித்து அவரை உங்கள் முதன்மையான நண்பராக்கிக் கொள்ளுங்கள். கிறிஸ்து மென்மையான இருதயத்தையும், அமைதியான மனதையும் கொடுப்பவர். கிறிஸ்துவை அதிகம் நேசிக்கும் குழந்தையே மிகவும் மகிழ்ச்சியான குழந்தையாக இருக்கும்.

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.