ஆசிரியர்: கே. வித்யாசாகர்
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்
கிறிஸ்தவ இளைஞர்கள் உலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து, வரும் இந்த நவநாகரீக கால கட்டத்தில், திருச்சபையின் எச்சரிக்கைகள் மற்றும் குடும்பத்தின் ஒழுக்க நடவடிக்கை இல்லாததால், அவர்கள் பெரும்பாலும் உலகத்துடன் கலந்து தேவ பக்தியற்ற நிலையில் இருப்பதை நாம் அடிக்கடி கவனிக்கிறோம். அவற்றுள் ஒன்று அவிசுவாசிகளை திருமணம் செய்வது. குறிப்பாக கிறிஸ்தவ இளைஞர்கள் படிக்கிற கல்லூரிகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் சந்திக்கும் கிறிஸ்துவ அல்லாதவர்களை நேசிப்பதினால் இந்தத் திருமணங்களுக்கு அவர்கள் தயாராகி வருகின்றனர். இப்படிப்பட்ட சுழ்நிழைக்கு உள்ளான பலர், வேதத்தில் தங்களுக்கு சாதகமான சில சந்தர்ப்பங்களை மேற்கோள் காட்டுகிறார்கள் அவை, புறஜாதி மன்னான அகாஸ்வேருவை திருமணம் செய்துக்கொண்ட எஸ்தரையும், எகிப்திய பெண்ணான அஸ்னாத் என்பவளை திருமணம் செய்துக்கொண்ட யோசேப்புவையும். காராணம் காட்டி அவர்கள் செய்துக்கொண்ட திருமணத்தை நியப்படுத்துவது. மிகவும் வருத்தத்தை தருக்கிறது. எனவேதான், வேதத்தின் படி, ஒரு விசுவாசிகள் அவிவிசுவாசிகளை திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாது, அதற்கு என்ன காரணம்? எஸ்தர் மற்றும் யோசேப்பின் திருமணத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கவே இந்த கட்டுரையை எழுதுகிறேன். குறிப்பாக, வேதத்தின் பார்வையில் புறவினத்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை இதில் குறிப்பிட விரும்புகிறேன்.
(ஆதியாகமம் 6:1-3) “மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (திருமணம் செய்துக்கொண்டார்கள்) அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே,” (மனுஷ சிந்தனை உடையவனாக இருக்கிறான்).
தேவனின் தேவகுமாரர் என்று அழைக்கப் படுகிறவர்கள் மனுஷ குமாரத்திகள் என்று அழைக்கபடுகிறவர்களின் சௌந்தரியத்தை (அழகையை) கண்டு அவர்களை திருமணம் செய்துக்கொண்டதினால், அப்போது தேவன் என் ஆத்துமா மனிதனோடு வாக்குவாதம் செய்வதில்லை என்ற சந்தர்ப்பத்தை நாம் பார்க்கிறோம். வேத வசனத்தில் “தேவ குமாரர்கள்” என்று அழைக்கும் போது அது விசுவாசிகளை தான் குறிப்பதாக உள்ளது.
(ரோமர் 8:14) “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.”
இந்த வசனத்தில் சொன்னதுப்போல் (அதாவது) இந்த சந்தர்ப்பத்தில் "மனுஷ குமாரத்திகள்" என்று சொல்லும்போது அவர்களை விசுவாசி அல்லாதவர்கள் என்பதாக நாம் புரிந்துக் கொள்ளலாம். (ரோமர் 8:5). “அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.” இதன்படி, விசுவாசிகள் மாம்சத்தின்படி திருமணம் செய்துகொண்டால், அது தேவனுக்கு பிரியமானதல்ல, மாறாக அவரைக் கோபப்படுத்தும் செயல் என்பது இந்தச் சூழலிருந்து நமக்கு புரிகிறது. ஏனென்றால், தேவன் தம்முடைய பிள்ளைகள் இந்த உலகத்திலிருந்து, உலக மாயத்திலிருந்து வேறுப்பட்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறார். மேலும் இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
நான் இங்கு குறிப்பிட்டுள்ள "தேவகுமாரர் மனுஷகுமாரத்திகள்" என்ற இந்த சந்தர்ப்பத்தை, பலர் தேவபுத்திரகள் என்றால் தேவ தூதர்கள் என்றும், மனுஷகுமாரத்திகள் என்றால் மனிதர்களை குறிக்கிறது கருதப்படுகிறார்கள், ஒரு சில காரணத்திற்காக இந்த கருத்தை நான் ஏற்கவில்லை, மேலும் இதைப்பற்றிய விவரங்களுக்கு (ஆதியாகமம் 6 -ம் அதிகாரம் பற்றிய எனது விளக்கத்தைப் வாசிக்கவும்)
(ஆதியாகமம் 24:1-4) “ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்துவந்தார். அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக் கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான்.”
இந்தச் சந்தர்ப்பத்தில் ஆபிரகாமின் குமாரான ஈசக்கின் திருமணத்திற்காக அவனது வேலைக்காரனால் சத்தியப்பிரமாணம் செய்வதைக் காண்கிறோம். சொல்லப்போனால், ஆபிரகாம் வாழ்ந்த கானான் தேசத்தில் அவருக்கு பல நெருங்கிய நண்பர்களும், அவருக்கு அந்தஸ்த்தில் ஏற்றவர்களும் உள்ளனர். அவர்களில் சில நல்லவர்களாக கூட இருந்தனர். இந்த தகவலை சாராளின் மரணத்தின் சந்தர்ப்பத்தில் நாம் பார்க்கிறோம். (ஆதியாகமம் 23 –ம் அதிகாரம்) ஆயினும் ஆபிராகம் அவர்களில் எவருடைய மகளையும் ஈசாக்கு மணமுடிக்கவில்லை, மாறாக கர்த்தராகிய தேவனுடன் ஐக்கிய பட்டிருந்த தன் உறவினர்களின் மகளைத் தேடினார். ஏனென்றால், கானானியர்கள் கர்த்தரை அறியாதவர்கள் & புறவினத்தவர்கள் & சிலைவழிப்பாடு செய்பவர்களாக இருந்தனர், ஈசாக்கு வாக்குதத்ததின் குமாரன் அப்பேற்பட்ட அவனுக்கு மனைவியாக புறவினத்தவராக இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தார், எனவே கர்த்தரை அறிந்த தனது உறவினர்களின் மத்தியில் தன்னுடைய குமாரனுக்கு துனையை பார்த்து வரும்படி தனது வேலைக்காரனை அனுப்புகிறார்.
மற்ற இனத்தோடு ஒப்பிடும் போது, ரெபெக்காவின் குடும்பம் கர்த்தராகிய தேவனுடன் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது, எனவேதான் லாபான் ஆபிரகாமின் வேலைக்காரனை "கர்த்தரின் பெயரில் ஆசீர்வதித்து" தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார், மேலும் ஆபிரகாமின் வேலைக்காரன் தன்னுடைய பயணத்தில் நடந்ததை அவர்களுக்கு விளக்கியபோது, "இது தேவனால் உண்டானது என்று ஒப்புக்கொண்டு" பெத்துவேல் உட்பட ரெபெக்காளை அவனுடன் (ஆபிராகமின் வேலைகாரனுடன்) அனுப்பிவைத்தனர். இந்த சந்தர்ப்பத்தை (ஆதியாகமம் 24:31-50) பார்க்கிறோம். ஆனால் லாபானின் வீட்டிலிருந்து ராகேல் திருடிய சொருபுங்களை (சிலைகள்) கருத்தில் கொண்டு, அவர்களும் விக்கிரக ஆராதனையாளர்களா? என்று சந்தேகம் நமக்கு வரும். “அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.” (ஆதியாகமம் 31:19). அது அவர்கள் வணங்கும் சிலைகள் அல்ல. இதை ஆதியாகமத்தின் 31 -வது அதிகாரத்தின் விளக்கவுரையில் நான் விளக்கியுள்ளபடி ஆபிரகாமின் குடும்பம் ஒரு காலத்தில் சிலை வழிபாட்டாளர்களாக இருந்தபோதிலும், அவர்கள் என்றென்றும் அப்படியே இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆபிரகாமினால் அவர்களும் மாறியிருக்கலாம். அதனால் தான் அவர்களும் கர்த்தராகிய தேவனை தங்கள் தேவனாக நினைத்துக் கொண்டு, ஆபிரகாம் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர் என்பதாலே தங்கள் குமாரத்தியை மகிழ்ச்சியுடன் அவருடைய வீட்டிற்கு அனுப்பினார்கள்.
பிற்காலத்தில், ஈசாக்கும் தன்னுடைய குமாரனான யாக்கோபின் திருமணத்தைப் பற்றி இவ்விதமாகவே லாபானின் வீட்டிற்கு அனுப்பினான். “ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.” (ஆதியாகமம் 28:1,2). இவ்வாறு ஆபிரகாமும், ஈசாக்கும் தங்களுடைய வாக்குதத்த குமாரர்களின் வாழ்க்கையில் அந்நியப் பெண்களை அனுமதிக்காதபடி மிகவும் கவனமாக இருந்தனர். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும்; அவர்களுடைய குமாரர்கள் புறவினத்தவர்கள், கர்த்தராகிய தேவனை அறியாத சிலை வழிப்பாடுபவர்களை மணந்தால், அவர்களுடைய வாழ்க்கையும் தேவனுக்கு துராமாக இருக்கும். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இதை இன்னும் தெளிவாகக் காண்கிறோம்.
(யாத்திராகமம் 34:16) “அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.”
இந்த வசனப் பகுதியில் தேவன் இஸ்ரவேலர்களிடம் உங்கள் குமாரருக்கு கானானியர்களின் (புறவினத்தவர்) திருமணம் செய்துக் கொள்ளவேண்டாம் என்றும், அவ்விதமாக செய்தால் ஏற்படும் விளைவுகளை அவர்களுக்கு எச்சரிக்கிறார். வேதத்தின் படி; சிலை வழிபாடு பெரும் பாவம். ஏனென்றால், தன்னையல்லாமல் உயிரில்லாத கல்லையோ அல்லது மரத்தையோ தகப்பனே என்று அழைப்பதை எந்த ஒரு தகப்பனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதுபோலவே, சிருஷ்டி கர்த்தரான தேவனின் மகிமையை, ஒரு சிலைக்கு கொடுத்து வழிபாடு செய்வதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது “அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத் தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.” (ரோமர் 1:22-24). விசுவாசிகள் விக்கிரக ஆராதனை செய்பவர்களை திருமணம் செய்யும் போது, சில சமயங்களில் அவர்களின் சிலை வழிபாட்டில் மற்றும் அதன் தொடர்பான சடங்குகளில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மகா ஞானியான சாலொமோனும் கூட இந்த சிக்கலிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை, “சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.” (1 இராஜாக்கள் 11:4).
பிற்காலத்தில், இஸ்ரவேலர்கள் எந்த தடையுமின்றி புறவினாத்தாரை திருமணம் செய்து கொள்ளும்போது, சாலமோனின் இந்த சம்பவத்தை நெகேமியா உதாரணமாகக் கொண்டு அவர்களை கடுமையாகக் கண்டித்து பேசினார். அவ்வாறு செய்வது தேவனின் பார்வையில் அது மாபெரும் தீமை என்றும், பாவம் என்றும் குறிப்பிடுகிறார். “அவர்களையும் நான் கடிந்துகொண்டு, அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் மறுஜாதியான (புறவினத்தாளான) ஸ்திரீகள் பாவஞ்செய்யப் பண்ணினார்களே. நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன். (நெகேமியா 13:25-27).
எனவே! விசுவாசிகள் எந்தச் சூழ்நிலையிலும் சிலை வழிபாடு செய்பவர்களை திருமணம் செய்துக்கொள்ள கூடாது. இதில், சிலர் சிலை வழிபாடு செய்பவர்களாக இல்லமால் வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களையாவது, அதாவது நாத்திகர்களை நாம் திருமணம் செய்து கொண்டால் அது பாவமில்லை என்று சிலர் நினைக்கலாம். ஏனெனில் வேத வசனம் சிலை வழிபாடு செய்பவர்களைத் தவிர எந்த மதத்தையும் சாராமல் இருப்பவர்களை திருமணம் செய்வது தவறல்ல என்பது அவர்களின் எண்ணம். ஆனால் தேவனை மகிமைப்படுத்தாத அனைவரும் அவருடைய கோபத்தின் கீழ் இருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத் தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.” (ரோமர் 1:18-21), “அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” (எபேசியர் 2:3).
இந்த காரணத்திற்காக, தேவனின் கோபத்திலிருந்து தப்பிய விசுவாசிகள் இன்னும் அவருடைய கோபத்தின் கீழ் வாழும் மக்களைத் தங்கள் மனைவிகளாக அழைக்கக்கூடாது. அதேபோல, வேத வசனங்கள் சிலை வழிப்பாடு செய்பவர்களை, விசுவாசிகள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும்போது, அவர்கள் விசுவாசிகளையே மணந்து கொள்ள வேண்டும் என்பதான நிபந்தனையை உணர்த்துகிறது. இதைப் பற்றி அப். பவுல் மேலும் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்,
(1 கொரிந்தியர் 7:39) “கர்த்தருக்கு உட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக் கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.”
கர்த்தருக்குட்பட்டு திருமணம் செய்வதல் என்பது கிறிஸ்தவ வழிமுறையில் திருமணத்தை நடத்துவது மட்டுமல்ல, குறிப்பாக மணமகனும், மணமகளும் தேவனுக்கு கிழ்படிந்தவர்களாய் இருக்கவேண்டும். மேலும் அவர்களின் திருமண வாழ்க்கை கர்த்தருக்கு மகிமையாக இருக்க வேண்டும். எனவே ஒரு விசுவாசி கர்த்தருக்குள் இருப்பவர்களை மட்டுமே மணந்துக்கொள்ள வேண்டும். வேதத்தில் கர்த்தருக்குள் என்றால்; தேவனால் மனமாற்றம் அடிந்து அவருடைய இணைக்கப்பட்டவர் என்பதான பொருள். இந்த காரணத்திற்காக, "மன மாற்றத்தை அடையாத பெயர் கிறிஸ்தவ குடும்பங்களும் கூட நமக்கு அந்நியர்களும் மற்றும் விக்கிரக ஆராதனை செய்பவர்கள் தான்.” எனவே, திருமணத்திற்கு வரன்களை தேடும்பொது அவர்கள் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரா? அல்லது திருச்சபைக்கு செல்பவர்களா? என்பதை மட்டுமல்லாமல், "அவர்கள் மறுபிறப்பு அடைந்த அனுபவம் பெற்றவர்களா? அல்லது உலக வழக்கத்தை பின்பற்றி வாழதவர்களா? என்பதைக் கவனிப்பது மிக முக்கியம். இல்லையெனில், விசுவாசிகள் கூட தேவனை விட்டு தூரம் செல்வதற்கு அவர்களே காரணமாக இருப்பார்கள். அதாலால் தான் அப். பவுல் மற்றொரு சந்தர்ப்பத்தில் இவ்விதம் கூறுகிறார்.
(2 கொரிந்தியர் 6:14-17) “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
இந்த வசனங்கள் திருமண சந்தர்ப்பத்தைக் குறித்து பேசவில்லை என்றாலும், அந்த வசனத்தின் விதிகளை நாம் மேலும் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், விசுவாசிகளின் விசுவாச வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும். ஏனென்றால், திருமணத்தின் கருப்பொருள், அதன் பின்னாக இருக்கும் தேவனின் சித்தம், அதனுடைய மேன்மை விசுவாசிகளுக்கு தெரிந்ததைப் போலவே புறஜாதிகளுக்கும் அல்லது (விசுவாசிகள் அல்லாதவர்களுக்கு) தெரியாது. இதன் காரணமாக அவர்கள் (விசுவாசி அல்லாதவர்கள்) தங்கள் திருமண வாழ்க்கையை தவறாக வழிநடத்த முயற்சி செய்வார்கள், தங்களுடைய உண்மையுள்ள துணையை அவர்களின் பாவத்தில் பங்கடைய செய்கிறார்கள். பல விசுவாசிகள் இப்படி போராடுவதை நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் ஒரு விசுவாசி ஒரு விசுவாசியை மட்டுமே! அதாவது மன மாற்றமடைந்த ஒரு விசுவாசியை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.
சில விசுவாசிகள் இவ்விதமாக யோசிப்பதுண்டு. எதிர்காலத்தில் அவர்களும் விசுவாசிகளாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையுடோ அவிசுவாசிகளை திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி ஒரு சிலரை மன மாறியவர்களை உதாரணமாகக் காட்டுகிறார்கள். உண்மைதான்; சில விசுவாசிகள் அவிசுவாசிகளை மணந்து பின்னர் விசுவாசிகளாக மாறியதற்கான சான்றுகள் உள்ளன, நானும் அவ்விதமானவர்கள் சிலரை பார்த்துள்ளேன். ஆனால், அவைகள் அவிசுவாசிகளை மணந்து கொள்ள உங்களுக்கு அனுமதி இல்லை, அது அவர்கள் மீது தேவன் காட்டிய கருணையாகும். அவர்கள் தேவனுடைய சித்தத்தில் இருந்ததால், அவர்கள் தேவ கோபத்திலிருந்து தப்பிக்கப்பட்டு விசுவாசிகளானார்கள். உதாரணமாக ரூத்துவின் வாழ்க்கையை பார்ப்போம். ஆனால் ஏற்கனவே விசுவாசிகளாக இருக்கும் நாம் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். விசுவாசிகளான நாம் விசுவாசிகளை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அந்தக் கட்டளைகளில் ஒன்று. "கர்த்தருக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்".
இனி எஸ்தர் மற்றும் யோசேப்பு இவர்களின் வாழ்க்கையை குறித்து பார்த்தால், திருமணம் காலம் நெருங்கி வரும் போது; ஒரு விசுவாசி வேதத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ள தேவனின் சித்தத்திற்கு அடிபணிய வேண்டும். தேவனின் கட்டளைகள் நமக்குத் பிராதானமானவை, எஸ்தரின் வாழ்க்கை அல்ல. தேவன் எஸ்தரை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதன் அர்த்தம், அவளுடைய புறவினத் திருமணத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தமல்ல. அவருடைய கருணையின்படி, அவர் யாரையும் மன்னித்து, ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார். அவற்றின் அடிப்படையில் நாம் தெளிவாகக் கற்பிக்கப்படும் தேவனின் கட்டளைகளை மீறக்கூடாது. உதாரணமாக; தேவன் மோவாபியரான ரூத்துவின் மூலம் இயேசு கிறிஸ்துவின் தலைமுறை பட்டியலை அவர் தொடர்ந்தார். இந்த மோவாபியர்கள் யாரென்றால் லோத்தின் மகள்கள் செய்த பாவத்தினால் உருவான சந்ததி. அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்று தலைமுறை பட்டியலில் இருப்பதினால் லோத்தின் மகள்கள் செய்தது பாவம் இல்லையென்று சொல்ல முடியுமா? தாமரும் யூதாவும் செய்த விபச்சாரத்தின் மூலம் பிறந்த “பாரேஸ்” மூலமாகவும் இயேசு கிறிஸ்துவின் வம்சாவளி தொடர்ந்தது. அதினால் தாமரும் யூதாவும் தாமாரும் செய்தது விபச்சாரம் இல்லையென்று சொல்ல முடியுமா? நிச்சயமாக அவர்கள் செய்தது பாவம்தான். ஆனாலும் தேவன் அவர்களை மன்னித்து, அவர்களுடைய பாவத்தைப் பொருட்படுத்தாமல் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார். அவர் எஸ்தரின் திருமணத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். தேவன் இறையாண்மையும், சர்வவல்லமையும் கொண்டவர், அவர் சாத்தானைக் கூட அவருடைய சித்தத்தைச் நிறைவேற்ற பயன்படுத்திக் கொள்ளும் சர்வவல்லமை கொண்ட தேவன்.
அதேபோல், யோசேப்பும் மோசேயும் அண்ணிப் பெண்களைத் திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாது. ஏனெனில்; (ஆதியாகமம் 41:45) வசனத்தில் “மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.” இந்த திருமணம் உடனடியாக நடந்தது என்று நாம் கருத முடியாது. யோசேப்பு எகிப்தின் அதிகாரி என்று அறிவித்த பிறகு அஸேநாத் யோசப்புக்கு அறிமுகமான பிறகு கர்த்தராகிய தேவனைப் பற்றி அறிந்துகொண்ட பிறகு, தான் யோசேப்பு அவளை திருமணம் செய்துக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் யோசேப்பின் தேவ பக்தி அவ்விதமானது. மோசேயின் விசயத்திலும் கூட நாம் இவ்விதமாகவே சிந்திக்க வேண்டும். “மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோ” (யாத்திராகமம் 3:1), மீதியானியர்கள் யாரென்றால் ஆபிரகாமின் மனைவியான “கேதுராள்” என்பவளினால் பிறந்த பிள்ளைகள் “ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான். (ஆதியாகமம் 25:1,2) இந்த காரணத்திற்காக, அவர்களில் சிலர் கர்த்தராகிய தேவனின் மீது பக்தியாக வாழ்ந்தனர், இந்த எத்திரோவும் அவர்களில் ஒருவர்" என்றும் அழைக்கப்படுகிறார்.
“மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,” “மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான்.” (யாத்திராகமம் 3:1, 18:1) அவர் மோசேயின் முன்னிலையில் தேவனுக்கு பலிகளைச் செலுத்தியதை (யாத்திராகமம் 18:12) வசனத்தில் பார்க்கிறோம். இதன் காரணமாக, அவருடைய மகள் சிப்போராளும் யெகோவா தேவனை அறிந்த ஒரு விசுவாசி என்று சொல்லமுடியும். ஒரு விஷயத்தை சிந்துயுங்கள். தேவனுக்காக எந்த வகையான துன்பத்தையும் அனுபவிக்க தயாராக இருந்த யோசேப்பும் மற்றும் மோசேயும் திருமணம் என்ற முக்கியமான காரியத்தை தவறவிடுவார்கள் என்று நாம் நினைக்கலாமா? ஒருவேளை யோசேப்பும் மோசேயும் புறவினத்தார்களை மணந்தார்கள் என்று நினைத்தாலும், எஸ்தரைப் பற்றி நான் சொன்னதுதான் அவர்களுக்கும் பொருந்தும், நமக்கு வேதமும் (தேவனின் கட்டளைகள்) மிக முக்கியம் மனிதர்களின் வாழ்க்கை அல்ல. தேவ மனிதர்களின் வாழ்விலும் நாம் வேதத்தின் எல்லைக்குள் தான் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே வேதத்தின்படி & தேவனின் கட்டளையின் படி நாம் விசுவாசிகளை மட்டுமே திருமணம் செய்துக் கொள்ளவேண்டும்.
(1 கொரிந்தியர் 7:39) “கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.”